அவருடைய வார்த்தையை நிரூபித்தல் PROVING HIS WORD 1965-04-26 எம்பஸி ஓட்டல் அரங்கம் லாஸ் ஏஞ்சலிஸ், கலிபோர்னியா, அமெரிக்கா 1. சற்று நேரம் நாம் தலைவணங்குவோம். அன்புள்ள பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் இங்குள்ளதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உமது சமூகம் இங்கு எங்களுடன் உள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். எங்களுக்குத் தேவையுண்டு, எனவே எங்கள் ஒவ்வொருவருக்கும் வார்த்தையை அளிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். (உட்காருங்கள்). 2. இந்த ஒலிபெருக்கிகள் நன்றாக இயங்குவதால் எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. நேற்று ஏற்பட்ட அந்த விதமான குழப்ப மான நிலைக்காக நான் வருந்துகிறேன். அந்த செய்தியை உங்களுக்கு அளிக்க வேண்டுமென்று நான் மிகவும் ஆவலாயிருந்தேன். 3. அதை நீங்கள் நிச்சயம் காணவேண்டுமென்று நான் விரும்பினேன். அது நாம் பெற்றுள்ள நங்கூரம். நாம் ஒரு சபை யினால் நங்கூரமிடப்படவில்லை. நாம் கிறிஸ்துவில் நங்கூரமிடப்பட் டிருக்கிறோம், பாருங்கள். அவர் மட்டுமே அந்த ஒரே வழி. அவரே பாதுகாப்பான ஒரே இடம். தேவன் தமது நாமத்தை வைத்துள்ள ஒரே இடம். தேவன் தமது நாமத்தை வைக்கத் தெரிந்து கொண்ட அந்த இடத்தில் அவர் ஜனங்களை சந்திப்பதாக வாக்களித்துள்ளார் வேறு எந்த வாசலிலும் அல்ல, அவர் தெரிந்து கொண்ட அந்த வாசலில். அந்த ஒரு இடத்தில் மட்டுமே அவர் ஜனங்களை சந்திப்பார். தேவன் தமது நாமத்தை தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் அன்றி வேறெங்கும் வைக்கவில்லை என்பதாக நாம் காண்கிறோம், ஏனெனில் குமாரன் எப்பொழுதும் தகப்பனின் நாமத்தைப் பெற் றுக் கொள்கிறான். 4. நீங்கள், “இன்றைக்கு அது எவ்விதம் பொருந்தும்?" எனலாம். ஒவ்வொரும், 'நான் இயேசுவில் இருக்கிறேன்' என்று கூறிக் கொள்கின்றனர். 5. அவரே வார்த்தையாயிருக்கிறார், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணினார்" (யோவான் 1: 1,14). மறுபடியும் வெளிப்படுத்தின விசேஷம் 19ம் அதிகாரத்தில், அவர் வருவதை நாம் காண்கையில் - மணவாளனும் மணவாட்டியும்- அவருடைய வஸ்திரம் இரத்தத்தில் தோய்க்கப்பட்டவராக; “அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே" என்று எழுதப்பட்டுள்ளது (வெளி. 19:13). அவர் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். 6. அதாவது, அவர் உயிர்ப்பிக்கிறவல்லமையாயிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியாக, வார்த்தை என்னும் இயந்திர அமைப்புக்குள் (mechanics) வரும் சக்தியாக (dynamics) அமைந்து, அதை உயிர் பெறச் செய்கிறார். இவையனைத்தும் ஒன்றாக கிரியை செய்ய வேண்டும், இல்லையெனில் அது கிரியை செய்யாது. அது முழுவேதாகமத்தையும், முழு கிறிஸ்துவையும், முழு சுவிசேஷத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 7. நேற்றிரவு தொலைகாட்சியில் நான் கண்ட அந்த குழுவினரிடம் இதை கூற விரும்புகிறேன். அந்த நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்பதை நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன். எனவே அதை நான் கண்டேன். அந்த குழுவில் இடம் பெற்ற சகோதரர்களை நான் பாராட்டுகிறேன், அவர்கள் கேள்விகளுக்கு மிகவும் திறம்பட விடையளித்தனர். நான் டெ ழக்கமாக குறைகண்டுபிடிப்பவன், ஆனால் குறை கூற அதில் எதுவுமில்லை. அது முற்றிலும் உண்மையானதாய் இருந்தது, அதனுடன் நான் நூறு சதவிகிதம் இணங்குகிறேன் (சபையோர் கைகொட்டுகின்றனர் - ஆசி). நன்றி. ஆமென். அளிக்கப் பட்ட பதில்கள் கேள்விகளுக்கு பொருத்தமானவைகளாய் இருந்தன. அதை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். அதை என் சபைக்கு காண் பிக்க திரைப்படம் எனக்கிருந்தால் நலமாய் இருந்திருக்கும்! அது உண்மையில் நன்றாய் இருந்தது. 8. தேவன் நமது பெந்தெகொஸ்தே குழுவைத் தவிர மற்ற குழுக்களிலும் ஈடுபட்டு வெளிச்சம் தங்கள் மேல் பிரகாசிப்பதற்காக இத்தனை ஆண்டுகளாக அங்கு காத்திருந்த தேவனுடைய வித்துக் களை, அந்த மனிதரை, அவர் பொறுக்கியெடுத்தார் என்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 9. நண்பர்களே, அது நமக்கும் ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது. "உறங்கும் கன்னிகைகள் எண்ணெய் வாங்கச் சென்றபோது, மணவாளன் வந்து விட்டார்" என்று இயேசு கூறியுள்ளார். எனவே அதன் மூலமாக நாம் என்ன காண்கிறோம் என்றால், எபிஸ்கோபிலியன், பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, லூத்தரன் ஸ்தாபனத்தினர் எண்ணெய் வாங்க வரும்போது, அந்த வேளையில் தான் மணவாளன் வந்தார். அதை நாம் நினைவில் கொள்வோம். 10. சில நிமிடங்களுக்கு முன்பு என் மகன் பில்லி என்னிடம் கூறினது போல எப்பொழுதுமே கூறினதில்லை. அவன், "அப்பா, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் உங்களிடம் கூற வேண்டிய அவசியமில்லை. எதையும் கூறி உங்கள் மனதில் பதிய வைக்க வேண்டுமென்று நான் எண்ணம் கொள்ளவில்லை. ஆனால் அப்பா, நீங்கள் என்ன செய்த போதிலும், உங்கள் நேரம் அனைத் தையும் இந்த வியாதியஸ்தருக்காக செலவிடுங்கள், இத்தனை வியாதி யஸ்தர்களை நான் கண்டதேயில்லை. சில நொடிகளில் நான் இருநூறு அட்டைகளை விநியோகம் செய்து விட்டேன். அத்தனை பேர் வியாதி யாயிருக்கின்றனர்' என்றான். அவன் அவ்விதம் என்னிடம் கூறினதே யில்லை . 11. இன்றிரவு நான், வரப் போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து சில சிறு குறிப்புகளையும் விமரிசனங்களையும் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். நமக்கு கீழே தேவனுடைய கோபாக் கினை குலுக்கிக் கொண்டிருக்கிறது என்றும், விரைவில் இதை பல மாக தாக்கும் என்பதை அறிந்தவர்களாய் இன்றிரவு இங்கு உட் கார்ந்து கொண்டிருக்கிறோம். தேவனுடைய கோபாக்கினை காத்திருக்கிறது என்றும், அந்த நேரத்தில், லட்சக்கணக்கானவர்களுக்கு எல்லாம் முடிந்து விட்டது என்று கூறப்படும் என்றும் நாம் அறிந்திருக்கிறோம். அது அவ்விதம் நடக்கும் என்று என் இருதயத்தில் நான் அறிந்திருக்கிறேன். அப்படியிருக்க, நோயாளிகள் அநேகர் நெருக்குவதையும், இழுப்பதையும் நாம் காண்கிறோம். * 12, "இன்றிரவு, அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்த வர்கள்" என்பதை எண்ணிப் பார்த்தேன். தேவனுடைய பிள்ளை களாகிய உங்களுக்கு இதைக் கூற விரும்புகிறேன். நீங்கள் எதைச் செய்தாலும், மற்றெல்லாவற்றையும் நீங்கள் விட்டு விட்டு, தேவனை உங்கள் முழு இருதயத்தோடும் இரவும் பகலும் தேடுங்கள். ஏதோ ஒன்று தவறாயுள்ளது என்பதை உங்களால் உணர முடியும். நீங்கள் தெருக்களில் நடந்து செல்லும் போதும், நீங்கள் எங்கு சென்றாலும், அதை உங்களால் கூற முடியும். நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந் தால் அதை அறிந்து கொள்வீர்கள். நீங்கள் ஆவிக்குரியவர்கள் என்று எனக்குத் தெரியும். 13. நான் ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டிருந்தேன், சகோ. ஸ்டராமேய் என்பவரிடம். டோனி இங்குள்ளாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்... (ஒரு சகோதரன் ஒரு பெயரைக் கூறுகிறார் - ஆசி)., டோனி சலாமே, சலாமே, சலாமே? அது வேறொரு டோனி. (ஒரு சகோதரன் ஏதோ ஒன்றைக் கூறுகிறார்). இல்லை, அந்த டோனி இல்லை, இவர் டூஸானில் உள்ள டோனி. அவருடைய பெயர் என்ன? (வேறொரு சகோதரன் "ஸ்ட்ராமேய்" என்கிறார்.) ஸ்ட்ராமேய்! அவர் சலாமே, ஸ்ட்ராமேய், அப்படி ஏதோ ஒன்று. 14. அவருடைய கடையில் நான் இருந்த போது, ஒரு மனிதன் உள்ளே வந்தார். அவர்கம்பீரமான தோற்றம் கொண்டவர். அவர் ஒன்றைக் கூறினார், அது சென்ற முறை நான் இந்தியாவில் இருந்த போது நடந்த ஒன்றை என் நினைவுக்குக் கொண்டு வந்தது. 15. அங்குள்ள பம்பாய் நகரத்தில், தேவன் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டத்தை ஒரே தருணத்தில் அளித் தார் என்பது என் கருத்தாகும். அவர்களை எங்கே வைப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை, பல்லாயிரக்கணக்கான மக்கள். 16. அங்கு நாங்கள் அடைவதற்கு முன்பு, மொழி பெயர்க் கப்பட்ட செய்தித் தாள் ஒன்றைக் கண்டோம். இந்தியா பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. இது ஆங்கிலச் செய்தித் தாள். அதில் "நல்லது, நிலவதிர்ச்சி முடிந்திருக்க வேண்டும், பறவைகள் பறந்து தங்கள் கூடுகளுக்கு திரும்பி வருகின்றன' என்று எழுதப் பட்டிருந்தது. 17. நிலவதிர்ச்சி உண்டாவதற்கு சில நாட்களுக்கு முன்பு; அந்த நிலவதிர்ச்சி மதில்களையும் மற்றவைகளையும் தகர்த்துப் போட்டது. இந்த சிறு பறவைகள் கற்பாறைகளினால் கட்டப்பட்ட இந்த மதில்களில் தங்கள் கூடுகளைக் கட்டி அங்கு ஒதுங்குகின்றன. பிற்பகல் அல்லது மத்தியான வேளையில், சூரிய வெப்பம் அதிகமாயுள்ள போது, மிருகங்கள் அனைத்தும் கற்பாறைகளினால் கட்டப்பட்ட மதில்களைச் சுற்றி நிழலுக்காக ஒதுங்குகின்றன. இரண்டு நாட்களாக பறவைகள் கூடுகளுக்குத் திரும்பி வராமல் மரங்களில் தங்கியிருந்தன. இரண்டு நாட்களாக மிருகங்கள் - ஆடு மாடுககள் - பிற்பகலின் போது மதில்களின் அருகில் வராமல் வயலில் நின்று கொண்டு, நிழலுக்காக ஒன்றின் மேல் ஒன்று சாய்ந்த வண்ணம் இருந்தன. 18. பிறகு சடுதியாக நிலவதிர்ச்சி உண்டாக்கி, மதில்களைக் குலுக்கி, கட்டிடங்களைத் தகர்த்து போட்டது. பாருங்கள், அந்த சிறு பறவைகள் இந்த மதில் துவாரங்களில் இருந்திருந்தால், அவை அழிந்து போயிருக்கும். அதுபோல், ஆடுமாடுகள் மதில்களின் அரு கில் நிழலுக்காக ஒதுங்கியிருந்தால், அவைகளும் மடிந்து போயிருக் கும். தேவன் இயற்கையை எச்சரித்தல்! 19. சில நாட்களுக்கு முன்பு, நான் சகோ. டோனியின் கடையில் இருக்கையில், அங்கு ஒரு மனிதன் கூறினதை கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் கூறினதாவது... அலாஸ்காவில் நில வதிர்ச்சி உண்டான போது, அவர் மெக்ஸிகோவில், நாம் 'ஸ்டோனி பாய்ண்ட்' என்று அழைக்கும் அந்த இடத்தில் மீன் பிடித்துக் கொண்டி ருந்தாராம். "பறவைகள் ஆகாரம் உண்ணவில்லை, மீன்களும் ஆகாரம் உண்ணவில்லை. ஏதோ ஒன்று தவறாக உள்ளது போல் காணப்பட் டது. அப்பொழுது சடுதியாக பயங்கர நிலவதிர்ச்சி உண்டானது" என்று அவர் கூறினார். 20. அன்றொரு நாள் இந்தியாவில், அல்லது வேறெங்கோ ஓரிடத்தில் நிலவதிர்ச்சி உண்டான போது, அவர் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றாராம். "இது என்ன விசித்திரமாயுள்ளதே. அந்த மீன்கள் இந்த நேரத்தில் தான் ஆகாரம் உண்ணும். தண்ணீரில் எந்தவிடத்திலும் ஒரு சிறு அலையும் கூட காணப்படவில்லை. அது மிகவும் அமைதியாயுள்ளது, மீன்கள் ஆகாரம் உண்பதற்கு இதுவே மிகச் சரியான நேரம், இருப்பினும் அவை ஆகாரம் உண்ணவில் லையே. பறவைகள் (gulls) கூட வழக்கமாக கரையில் நடந்து, ஒன்றை யொன்று மோதிக் கொண்டு மீன்களை பிடித்து சாப்பிட்டுக் கொண் டிருக்குமே, அவைகளையும் காணவில்லையே" என்று வியந்தாராம். “சில நிமிடங்களில் கடற்பாசி அடியிலிருந்து இப்படி மேலே மிதந்து வந்தது. பூமியின் மற்ற பகுதியில் நிலவதிர்ச்சி உண்டானது” என்று அவர் கூறினார். பாருங்கள், ஏதோ தவறாயுள்ளது என்றும், ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது என்றும் இந்த மீன்கள் அறிந்து கொண்டன, அவ்வாறே அந்த பறவைகளும் அறிந்து கொண்டன. 21. தேவன் இந்த மீன்களுக்கும் பறவைகளுக்கும் வரப் போகும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறனைக் கொடுத்திருக்கையில், தமது பிள்ளைகளுக்கு அவர் அதை இன்னும் எவ்வளவு அதிகமாக நிச்சயம் அளிக்க வேண்டும்! நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்றும், நியாயத் தீர்ப்பு காத்திருக்கிறது என்றும் நாம் அறிந்திருக்கிறோம். எனவே நாம் மிகவும் பயபக்தி யாயிருப்போம். உங்கள் முழு இருதயத்தோடும் தேவனிடத்தில் ஓடுங்கள்! "ஓ, வான பரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்" (மத்.11:23). இன்றைக்கு அது தண்ணீரின் அடிமட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அதை நினைவில் கொண்டவர்களாய் , ஜெபியுங்கள். 22. இன்றிரவு, சில நிமிடங்களுக்கு, வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். நாங்கள் வியாதியஸ் தருக்காக ஜெபிக்கப் போகிறோம். பில்லி ஒரு கத்தை ஜெப அட்டை களை : விநியோகித்ததாகக் கூறினான். நேற்றும் அவன் சில ஜெப அட்டைகளைக் கொடுத்திருந்தான், அவர்களில் யாருக்கும் நேற்றிரவு என்னால் ஜெபம் செய்ய இயலவில்லை. நான் வியந்தேன், பரிசுத்த ஆவி வந்த போது... அதை கிரியை செய்ய வைக்க என்னால் முடி யாது. அது ஒரு சிறு நெம்புகோலை (lever) போன்றது. நீங்கள் ஒரு கியரில் (gear) உங்களை இழுத்துக் கொள்கிறீர்கள். பரிசுத்த ஆவியை இயங்கச் செய்வது நீங்களே, நான் அல்ல. நீங்களே அதைச் செய் கிறீர்கள். எனவே நான், சென்ற இரவு, சிந்தனை களைப் பகுத்தறி தலின் கட்டத்தில், அது ஜனங்களிடையே சரிவர நடக்கவில்லை என்பதை கவனித்தேன். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாயில்லை என்பது போல் தோன்றினது. அண்மையில், நான் பேசிக் கொண்டிருந்த போதும், வியாதியஸ்தர்களின் மேல் நான் கைகளை வைத்த போதும், அதை நான் கண்டு கொண்டேன். 23. நாம் உணர வேண்டியது என்னவெனில், அது நமக்குள் அருளப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்டு, அவருடைய ஆவியினால் பிறந்து, அவருடைய உயிர்ப்பிக்கும் ஆவி யினால் நிறைந்துள்ள நமக்குள் அந்த வல்லமை உள்ளது. சீஷர்களும், காலங்கள்தோறும் மற்றவர்களும் செய்தது போல, மற்றவர்கள். மேல் கைகளை வைக்கும் போது, அது வியாதியஸ்தர்களை முற்றிலு மாக சுகப்படுத்தி, மரித்தோரை உயிரோடெழுப்புகிறது. அது தரி சனங்களைக் காண்பித்து, தீர்க்கதரிசனங்களை அளிக்கிறது. ஆதி காலத்து அப்போஸ்தலர்களிடையே இருந்த அதே ஆவி இன்றைக்கு சபையில் ஜீவித்துக் கொண்டு, அவர்கள் செய்த அதே காரியங் களைச் செய்து கொண்டிருக்கிறது. அதை நாம் வேகமாக அடை யாளம் கண்டு கொள்ள முடியுமானால்! பாருங்கள், அது எவ்வள வாக கிரியை செய்து கொண்டிருந்த போதிலும், நீங்கள் அதை அடை யாளம் கண்டு கொண்டு அதை விசுவாசிக்க வேண்டும். நீங் கள் விசுவாசிக்கும் அந்த நொடிப் பொழுதிலே, உங்கள் தொல்லை கள் தீர்ந்து விடுகின்றன. அது உண்மை . 24. . இப்பொழுது நாம் வேதாகமத்தைத் திருப்புவோம். இன்றிரவு நான் பேச நினைத்த பொருளை மாற்றிக் கொள்ள எண்ணி, சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு உட்கார்ந்து கொண்டு, இன்னும் சில வேத வசனங்களை குறித்து வைத்துக் கொண்டேன். தேவனுடைய வார்த்தையிலிருந்து சில வசனங்களைப் படிக்க விரும்புகிறேன் - பரி. லூக்கா எழுதின சுவிசேஷம் 8ம் அதிகாரம், 40ம் வசனம் தொடங்கி, இப்பொழுது கவனியுங்கள். நான் நிறைய வசனங்களைப் படிக்கப் போகிறேன். இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டார்கள். 25. அது இன்றிரவு கூடியுள்ளோருக்கு ஒரு அருமையான மனப்பான்மையாய் இருக்குமல்லவா? அப்பொழுது ஜெப ஆலயத் தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து. இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தை யாயிருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக் கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும். ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ. அவருக்குப் பின்னால் வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய பெரும்பாடு நின்று போயிற்று. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படி கேட்கிறீர் என்றார்கள். அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கி வந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ என்றார். அவர் இப்படிச் பேசிக் கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ள வனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறெவரையும் உள்ளே வரவொட்டாமல், எல்லாரும் அழுது அவளைக் குறித்துத் துக்கங் கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப் போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அவள் மரித்துப் போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப் பண்ணி, அவளுடைய கையைப் பிடித்துப் பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங் கொடுக்கக் கட்டளையிட்டார். அவள் தாய் தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள்; அப்பொழுது நடந்ததை ஒரு வருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். லூக். 8:40-56 26. இப்பொழுது ஜெபம் செய்வோம். அன்புள்ள பரலோகப் பிதாவே, இந்த வசனங்களை நாங்கள் படிக்கையில், அது சத்திய மென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இது உண்மையாய் நடந்தது. இது நாங்கள் ஏதோ ஒரு செய்தித் தாளில் அல்லது கதைப் புத்தகத் தில் படிக்கும் ஒரு கட்டுக்கதை அல்ல, இது தேவனுடைய வார்த்தை என்று நாங்கள் அறிந்துள்ள புத்தகத்திலிருந்து வருகிற ஒரு சம்பவம். அது உண்மையாய் நடந்ததென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இங்கு முக்கியமான காரியத்தைச் செய்த இந்த இயேசு; இங்கு இரண்டு சம்பவங்கள் உள்ளன - பெரும்பாடுள்ள ஸ்திரீயும் மரித்துப் போன பெண் பிள்ளையும் - அவர் தேவனுடைய குமாரன் என்றும், தேவன் அவரை மரித்தோலிருந்து எழுப்பி, பரிசுத்த ஆவி என்னும் நபராக இன்றிரவு நமக்கு அளித்துள்ளார் என்றும் நாங்கள் விசுவாசிக் கிறோம். 27. .... இன்றிரவு அவர் இங்கு எங்களுடன் இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும் அவருடைய மனதுருக்கம் ஜனங் களை வந்தடைகிறது என்றும் நாங்கள் விவாசிக்கிறோம். ஜனங்கள் அவரை எட்டிப் பிடிக்கையில், அந்த நாளில் கிடைக்கப் பெற்ற அதே பலன்கள் இந்த நாளிலும் அளிக்கப்படும். பிதாவே, நாங்கள் புது அபிஷேகம் பெற அதை மறுபடியும் எங்களுக்கு அருளுவீராக. சகோ .ஷகரியான் சற்று முன்பு உத்தமமாய் உம்மிடம் கேட்டு. ஜனங்களை விசுவாசிக்கும்படி கூறினது போன்று, நாங்கள் மறுபடி யும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே' கேட்கிறோம். ஆமென். 28. நான் சில நிமிடங்கள் மாத்திரமே பேசலாம் என்றிருக் கிறேன், சில நிமிடங்கள் மாத்திரமே, ஏனெனில் ஜெப அட்டைகள் உள்ளவர்களை இங்கு மேலே அழைத்து அவர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதைத் தவிர மற்றெல்லா வற்றையும் தள்ளி வைத்து விடப் போகிறேன். வியாதியஸ்தருக்கு நாம் ஜெபிப்பதற்கு முன்பு, ஜனங்களை அந்த மனப்பான்மைக்குள் நாம் கொண்டு வர வேண்டும். சரியான மனப்பான்மை மட்டுமே எப்பொழுதும் நல்ல பலன்களை அளிக்கிறது. அது நீங்கள் தேவ னிடம் கொண்டுள்ள மனப்பான்மையாகும். 29. இங்கு பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்தி ரத்தின் ஓரத்தைத் தொட்டாள், அவள் சுகமடைந்தாள். ஒரு போர்ச் சேவகன் அவருடைய முகத்தில் துப்பி அவருடைய தலையில் முள் கிரீடத்தை சூட்டினான். அவன் எந்த வல்லமையும் உணரவில்லை. - 30. அது உங்கள் அணுகும் முறையைப் பொறுத்தது. உங் கள் மனப்பான்மையை அது பொறுத்தது. அருமை நண்பனே, இன் றிரவு நீர் கொண்டுள்ள மனப்பான்மையை அது பொறுத்துள்ளது. நாம் இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் இருக்கிறோம், அவருடைய சமூகத்தில் இருப்பதாக நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் நீங்கள் கொண்டுள்ள மனப்பான்மையே பலன்களை அளிக்கிறது. இயந்திரம் (mechanics) இங்குள்ளது, அது போல் இயக்கும் சக்தியும் (dynamics) இங்குள்ளது. நீங்கள் ஓட்டத் தொடங்குவீர்களானால் தேவன் மற்ற வைகளைச் செய்வார். 31. இப்பொழுது. சில நிமிடங்களுக்கு அவருடைய வார்த் தையை நிரூபித்தல் என்னும் பொருளின் பேரில் பேச எத்தனித் துள்ளேன். அதை நினைத்துப் பார்த்தால், அது ஒரு பெரிய காரியம்: அவருடைய வார்த்தையை நிரூபித்தல் என்பதை. 32. தேவன் இவ்வளவு காலமாக தமது வார்த்தையை நிரூபித்துக் கொண்டு வந்த விதமாகவே இன்றிரவும் நிரூபிக்க வல்லவராயிருக்கிறார். “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து (ஆங்கி லத்தில் "Prove all things - எல்லாவற்றையும் நிரூபித்துப் பார்த்து" தமிழாக்கியோன்) நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று வேதம் உரைக்கிறது. (1 தெச, 5:21) 33. நீங்கள் "அதை நிரூபி, அப்பொழுது நான் நம்புவேன்" என்னும் பழமொழியைக் கேட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது உண்மையல்ல. அநேக தருணங்களில் அநேக காரி யங்கள் நிரூபிக்கப்படுவதை, விஞ்ஞானப் பூர்வமாகவும் முற்றிலும் நிரூபிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன்', இருப்பினும் ஜனங்கள் அதை நம்புவதில்லை. 34. அண்மையில் இங்கு நான் ஒரு மனிதனுடன் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் தெய்வீக சுயமளித்தலைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அவர், “அதை நான் நம்ப மாட்டேன். என்ன நடந்தாலும் எனக்கு அக்கறையில்லை, நீங்கள் எவ்வளவு தான் அதற்கு நிரூபணம் காண்பிக்க முயன்றாலும், அதை நான் நம் பவே மாட்டேன்" என்றார். நல்லது, நிச்சயமாக. அந்த மனிதனுக்கு நீங்கள் என்ன செய்த போதிலும், அவர் இழக்கப்பட்டவரே. அவரால் விசுவாசிக்க முடியவில்லை. விசுவாசிப்பதற்கு அவரில் ஒன்று மில்லை . 35. ஏறக்குறைய ஒரு 1:17த்துக்கு முன்பு எனக்கு ஒரு சிறு அனுபவம் உண்டாயிருந்தது. நான் வேட்டையாடுவது உங்கள் அனை வருக்கும் தெரியும். நான் கூட்டத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, சிங்கத்தை வேட்டையாடிக் கொண்டிருந்தேன். நான் அரிசோனாவில் குடிபுகுந்த பிறகு, அது நன்றாயுள்ளது. எனக்கு பெரிய மிருகங்களை வேட்டையாடுவது பிடிக்கும். இயற்கையின் மத்தியில் சென்று அதை கவனித்துக் கொண்டிருக்க எனக்குப் பிரியம். 36. இப்பொழுது நான் கொல்பவன் அல்ல, நான் வேட்டையாடுபவன். வேட்டை பொருட்களை காரணமின்றி அழிப்பது எனக்குப் பிடிக்காது. அது சரியல்ல என்பது என் கருத்து. உங்க ளுக்கு உபயோகிக்க வேண்டுமென்ற ஒரு நோக்கமில்லாமல் ஒரு வேட்டைப் பொருளைக் கொல்வதென்பது, வேறெதையும் கொல்வது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவமான செயல் என்பது என் அபிப்பிராயம். அது தவறான செயல். அதை நாம் செய்யக் கூடாது. தேவன் அதை நமக்கு ஆகாரமாகவும் மற்ற நோக்கங்களுக்காகவும் தந்திருக்கிறார், அதை நாம் அழித்து விடக் கூடாது. அதை நாம் கொன்று எடுத்துக் கொள்ள நாட்டின் சட்டம் அனுமதித்துள்ளது என்பது சரியே. அதை வீணாக்கி விடாதீர்கள். 37. அங்கு நான் சென்றிருந்த போது, எல்லா வேட்டைப் பொருட்களையும் வேட்டையாடி எடுத்துக் கொள்ளலாம் என்னும் காலமாயிருந்தது. சிங்கங்கள் நிறைய கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அந்த நாட்டிலுள்ள பல பண்ணை முதலாளிகளை எனக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் ஒரு சிங்கம் ஆட்டு மந்தைக்குள் பாய்ந்து அவைகளைக் கொல்லும் போது, அவர்கள் என்னை அழைப்பது வழக்கம். அன்றொரு இரவு ஒரு சிங்கம் ஆட்டுக் குட்டிகளுக்குள் பாய்ந்து அவைகளைக் கொன்றதன் விளைவாக என் நண்பர் ஒருவர் ஒரே இரவில் ஏறக்குறைய மூவாயிரத்து ஐந்நூறு டாலர்கள் நஷ்டமடைந்தார். ஒரு சிங்கம் தான் உள்ளே புகுந்து இச் சேதத்தை விளைவித்தது. இது செய்த பாவத்துக்காக மற்ற சிங்கங் களும் அனுபவிக்க வேண்டும். நான் சிங்கத்தைக் கொன்றேன், அது மிகப் பெரிய சிங்கம். அது ஒன்பது அடி நீளமிருந்தது, சுமார் இரண்டு டன் எடையுள்ளது. அது ஒரு பெரிய சிங்கம். 38. நான் வேட்டையாடுவதற்காக அரிசோனா நாட்டிலிருந்து ஊடாவுக்குச் சென்றேன். என்னுடன் கூட வரவிருந்தவர் அரசினரால் நியமிக்கப்பட்ட வேட்டைக்காரர் என்று அங்கிருந்த ஜனங்கள் என்னிடம் கூறினர். வேட்டை கூட்டாளி என்னிடம், "தயவு செய்து அவரிடம் மத சம்பந்தமாக எதையும் குறித்துப் பேசாதீர்கள், அவர் ஒரு முரடன்" என்று என்னை எச்சரித்தார். 39. என்னை அவ்வாறு எச்சரித்த மனிதனிடம், "நான் அதைக் குறித்து பேச மாட்டேன்" என்றேன். 40, அவர், “நீங்கள் ஒரு பிரசங்கி என்று அவரிடம் கூறி விடாதீர்கள். நீங்கள் கூறிவிட்டால், வேட்டைக்குப் போகவே முடி யாது. அவர் உங்களை வேட்டைக்கு கொண்டு செல்ல மாட்டார். நான் அவருடன் மூன்று நாட்கள் வேட்டையாடி, ஒவ்வொரு இரவும் அவருடன் உறங்கி, ஒவ்வொரு நாளும் அவருடன் உணவு உண்டி ருக்கிறேன். அவர் ஒரு முறையாவது என்னிடம் 'காலை வணக்கம், எப்படியிருக்கிறீர்கள்? உண்பதற்கு ஏதாகிலும் வேண்டுமா? பாத் திரங்களைக் கழுவுவீர்களா?" என்று கேட்டதேயில்லை. அவரிடம் ஒன் றையும் கூறாதீர்கள்" என்று என்னை எச்சரித்தார். 41. "நான் ஒரு வார்த்தையும் கூறமாட்டேன்" என்றேன். எனவே நான் ஜெபிப்பதில்லை என்று அவரிடம் கூறவில்லை. நான் அவரிடம் சொல்லிக்கொண்டேயிருந்தேன்..... ஆயினும் நான் ஜெபித்தேன், 42, நாங்கள் அங்கு சென்றிருந்த போது, அவர் கடினமான தன்மை கொண்ட ஒரு மனிதன் என்று எனக்குத் தெரிய வந்தது. அவருக்கு எதன்பேரிலும் நம்பிக்கை இருக்கவில்லை. அதற்கு சில இரவுகளுக்கு முன்புதான் அவர் ஒரு குழந்தையை இழந்து போனார் - இறந்து பிறந்த குழந்தை. எனவே, நாங்கள் வேட்டைக்குச் சென்றோம். இரண்டாம் நாள், என் வேட்டை கூட்டாளி அவரிடம் நான் நாடு முழுவதும் வேட்டையாடுவதாக கூறினாராம். எனவே என் வேட்டை கூட்டாளி போய் விட்டவுடன், நாங்கள் இருவரும் மலை யுச்சியை அடைந்தோம், அங்கு ஒரு சிங்கத்தைக் கண்டோம். அது தப்பி பாறைகளுக்குள் மறைந்து கொண்டது. அங்கு நாங்கள் உட் கார்ந்து கொண்டு, நாய் திரும்பி வருவதற்காக காத்திருந்தோம். இந்த மனிதர் என்னிடம், "உங்கள் வேட்டைக் கூட்டாளியான உங்கள் நண்பர் என்னிடம், நீங்கள் எல்லாவிடங்களிலும் வேட்டையாடுவ தாகக் கூறினார். உங்களிடம் நிறைய பணம் உள்ளதா? அப்படி கேட் பது என் வேலையல்ல என்று நினைக்கிறேன்" என்றார். 43. நான் அவரிடம், “இல்லை, அது நிறைய பணம் என்ப தில்லை. நான் மற்றவர்களால் அனுப்பப்படுகிறேன் (sponsored)" என்றேன். 44. அவர், "ஓ, அப்படியா? நல்லது. இதை கேட்பது மறுபடியும் என் வேலை அல்ல என்று நினைக்கிறேன், உங்களை அனுப்புவது ஒரு வர்த்தக நிறுவனமா?" என்று கேட்டார். 45. அவர் என்னிடமிருந்து விஷயத்தை கரக்கப் பார்த்தார். நான் சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருந்தேன், பாருங்கள். எனவே நான் சொன்னேன், ஆம் , நான் சொன்னேன், "இல்லை ஐயா. நான் ஒரு பிரசங்கி, ஒரு மிஷனரி" என்று. அவர், "நீங்கள் என்ன?" என்று கேட்டார். 46. நான், "மிஷனரி" என்றேன். அவர் அங்கு நின்று கொண்டு சில நிமிடங்கள் என்னை முறைத்து நோக்கினார். 47. நான் அவரிடம், "இதற்கு பிறகு உள்ள ஒரு ஜீவியத்தில் உங்களுக்கு ஏதாகிலும் நம்பிக்கை உண்டா? உங்கள் நம்பிக்கை தான் என்ன?" என்று கேட்டேன். அவர், "நான் ஒரு ஜாக் மார்மோன்" என்றார். நான், "நீங்கள் என்ன?” என்றேன். அவர். "ஜாக் மார்மோன்' என்றார். "அது என்ன விதமான து?" என்றேன். 48. அவர், “காப்பி குடித்து, சிகரெட் புகைக்கும் வகை யினர்” என்றார். நான், "நல்லது, நேர்மையான அறிக்கை ஆத்துமாவுக்கு நல்லது" என்றேன். 49. பிறகு அவர், “உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். மார்மோன் சபை ஒன்று மட்டுமே உண்மையான சபை என்று என்னிடம் கூறப்பட்டது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். 50. நான், “சபை என்னும் விஷயம் வரும்போது, அது மற்ற சபைகளைப் போல் தான் உள்ளது என்று எண்ணுகிறேன். நான் அறிந்திருப்பது ஒரு சத்தியம் மட்டுமே, அதுதான் இயேசு கிறிஸ்து. அவர் சத்தியமுள்ளவர் என்று எனக்குத் தெரியும்” என்றேன் , 51, அவர், "நல்லது, அன்றொரு இரவு எனக்கு ஒரு குழந்தை இறந்து பிறந்தது. அது இறந்து பிறந்ததால் தேவன் ஜீவ சுவாசத்தை அதற்குள் ஊதவில்லை என்றும், ஆகையால் நான் மறுபடியும் அதை காண மாட்டேன் என்றும் என்னிடம் கூறப்பட்டது. அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். 52. நான், “நல்லது, நீங்கள் ஜாக் மார்மோன் வகுப்பினராக இருந்து கொண்டு நிச்சயமாக அதை காண முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம், நீங்கள் ஜாக் மார்மோனாக உள்ள வரைக்கும் அதை காணப் போவதில்லை” என்றேன். அவர் சொன்னார். நல்லது. அவர் 'என்னை தள்ளிக் கொண்டிருந்தார். நானும் அவரைச் சிறிது பின் னால் தள்ளினேன், பாருங்கள். எங்களுக்குத் தள்ள நேரம் உண்டா யிருந்தது. எனவே அவர் சொன்னார். நான், "என்ன விஷயம்?" என்றேன், அவர், "ஓ, எனக்குத் தெரியவில்லை. நல்லது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். நான், "எனக்கு அநேக அருமையான மார்மோன்களைத் தெரியும்" என்றேன். 53. அவர் மார்மோன் என்பது எனக்குத் தெரியாது. நான் மிகவும்... அது ஊட்டாவாக இருப்பதால் அப்படி ஒருக்கால் இருக்கலாம் என்று எண்ணினேன், ஆனால் நான்... ஏனெனில் சால்ட் லேக் நகரத்தைச் சுற்றிலும் வாழும் பெரும்பாலோர் மார்மோன் வகுப்பைச் சேர்ந்தவர்களே. ஆயினும் இது சால்ட் லேக் நகரம் அல்ல. எனவே நான், "நல்லது, எனக்கு அருமையான சில மார்மோன் நண்பர்கள் இருந்திருக்கின்றனர், ஜெப வரிசைகளில் வந்துள்ளனர், அருமையான ஜனங்கள்" என்று நினைத்துக் கொண்டேன். 54. நான் அவரிடம், "நான் மிகவும் அருமையான சில மார்மோன்களை சந்தித்திருக்கிறேன்" என்றேன். அவர் சொன்னார், நல்லது, அவர் சொன்னார். நான், "இதைக் குறித்து அவர்களுடைய போதகத்துக்கு மாறாக எதையும் நான் கூற விரும்பவுமில்லை, ஏனெ னில் நீர் அந்த வகுப்பினரைச் சேர்ந்தவர், அதை நான் உயர்வாக மதிக்கிறேன்" என்று கூறிவிட்டு, "நல்லது, நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா?" என்று கேட்டேன். அவர், “ஆம் ஐயா, நான் விசுவாசிக்கிறேன், ஆனால் அதன்படி நான் வாழ்வதில்லை” என்றார். 55. நான், "நல்லது, உலகத் தோற்றத்துக்கு கோடிக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பே தேவன் அந்த குழந்தையை அறிந் திருந்தார் என்று வேதம் போதிக்கிறது என்று நான் நம்புகிறேன். தேவன் எரேமியாவிடம், 'நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படு முன்னே நான் உன்னை பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்க தரிசியாகக் கட்டளையிட்டேன்' என்றார் (எரே.1:5). அவர் அவ்வள வாக அதைக் குறித்து அறிந்திருந்தார், பாருங்கள்” என்றேன். அவர், "நல்லது, உமக்கு நன்றி" என்றார். 56. அவர் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். அப் பொழுது அவர் இந்த மற்ற வேட்டைக் கூட்டாளியைச் சந்தித்தார். அவர் அவரிடம், “இந்த ஆள் ஒரு பிரசங்கி என்று நீர் ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்று கேட்டார். எனவே நாங்கள்.... அவர் அவ ரிடம் சிறிது பேசினார், அவரிடம் கூட்டங்களைக் குறித்துக் கூறினார். 57. மார்மோன்களுக்கு தீர்க்கதரிசனத்தில் நம்பிக்கை யுண்டு. எனக்கு... இங்கு ஒருவேளை மார்மோன் யாராகிலும் இல்லா மல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு தீர்க்கதரிசனத்தில் நம்பிக் கையுண்டு. அது ஒருவேளை அவர்களுடைய உபதேசமாய் இருக்காது, ஆனால் நான்... ஆம், ஆம். இருந்த போதிலும் அவர்கள் அதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். 58. அவர் என்னிடம் திரும்ப வந்து, "நீங்கள் தீர்க்கதரிசி என்று கேள்விப்படுகிறேன்" என்றார். 59. நான், “இல்லை, ஐயா. நடக்கப் போகும் சில காரியங்களை கர்த்தர் எனக்குக் காண்பித்திருக்கிறார்" என்றேன். 60. அவர் உடனே, "நாம் போகலாம்” என்று சொல்லி விட்டு புறப்பட்டு விட்டார். அவர் காரில் ஏறிக் கொண்டு... அவர் ஒரு சிறு பட்டினத்தில் வசித்து வந்தார். சில நிமிடங்கள் கழித்து அவரைக் காணவில்லை. பகல் உணவுக்குப் பிறகு மற்றுமொரு வேட்டைக்குச் செல்வதற்காக நாங்கள் நாய்களை ஆயத்தம் செய்து கொண்டிருந் தோம். நாங்கள் அவ்விதம் செய்து கொண்டிருந்த போது, அவர் காரில் புறப்பட்டு சென்று விட்டார். 61. சிறிது நேரத்துக்குப் பின்பு, காண்பதற்கு அழகான ஒரு வாலிபனுடன் அவர் திரும்பி வந்தார், அவனுக்கு ஏறக்குறைய பதினேழு வயது இருக்கும், பரிசுத்தவானைப் போல் காணப்படும் நற்பண்புள்ள ஒரு கிறிஸ்தவன். “இவன் என் சகோதரன்" என்று அவர் அவனை அறிமுகம் செய்தார். “இவன் ஜாக் மார்மோன் அல்ல, உண்மையான மார்மோன்” என்றார். நான், "எப்படியிருக்கிறாய், மகனே?” என்றேன். 62. அவன், "நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்பதாக என் அண்ண ன் கூறுகிறார்" என்றான். 63. நான், “இல்லை, ஐயா. நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல. நிகழவிருக்கும் காரியங்களை கர்த்தர் எனக்கு முன்கூட்டியே காண் பித்திருக்கிறார்" என்றேன். 64. அவன், "என் கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. நான் அறுவை சிகிச்சைக்காக இப்பொழுது மேசையின் மேல் இருக்க வேண்டியவன். என் அண்ணன் உங்களைக் குறித்து என் னிடம் கூறின போது, நான், 'அப்படியானால் எனக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது' என்றேன்" என்றான். அவன் நேராக என் கண்களை நோக்கினான், நேர்மையான, உண்மையான, உத்தமமான பார்வை. அவன், “உங்கள் கரங்களை என் மேல் வையுங்கள். இவை இப்படியிருக்குமானால், எனக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது" என்றான். அவன் குணமடைந்தவனாய் வீடு திரும்பினான். 65. இந்த சகோதரன், என்னுடன் வேட்டையாடின இந்த கிறிஸ்தவ நண்பர், பீனிக்ஸை சேர்ந்தவர். அவர் என்னிடம் கூறி னார். அவர் சொன்னார். அந்த பையன் களில் சிலர் இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் இங்கிருக்கிறான் என்று எனக்குத் தெரியும். நாங்கள் வீடு திரும் பினோம். அவர், “சகோ.பிரான்ஹாமே, கர்த்தர் உங்களுக்கு ஒரு தரி சனத்தைக் காண்பித்து, என்ன நடக்கப் போகிறது என்று அந்த மார்மோன்களிடம் நீங்கள் கூற அனுமதிப்பாரானால், அது போதும், ஏனெனில் அவர்கள் அதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்" என்றார். 66. எனவே நான் விடாது ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் வீடு திரும்பி அறையில் நின்று கொண்டிருந்தேன். அடுத்த திங்கட்கிழமையன்று. இல்லை ஞாயிறு காலை, சபை ஆராதனையை முடித்துக் கொண்டு, வீடு திரும்பி அறையில் நின்று கொண்டிருந் தேன், நான் வெளியே பார்த்தேன். 67. அப்பொழுது தரிசனத்தில் ஏதோ ஒருவிதமான வெளிச்சம் விட்டு விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒரு மரத்தின் மேல் ஒரு சிங்கத்தை நான் கண்டேன். அதை நான் சுடு வதற்கு அது மிகவும் சிறிதாயிருந்தது. அது வேண்டாமென்று விட்டு விட்டேன். வேறு யாரோ ஒருவர் அதை சுட்டார். அவர் மிகப் பெரிய ஒரு துப்பாக்கியினால் அதை சுட்டபடியினால், அந்த சிங்கம் சின்னா பின்னமானது. அவர் அவ்விதம் செய்தது எனக்குப் பிடிக்க வில்லை . 68. நான் பீனிக்ஸுக்கு சென்றிருந்த போது, அதைக் குறித்து சகோ.தாசனிடம் கூறினேன்- சகோ.மாஸ்லியிடமும், அவர் இங் கிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அன்றொரு நாள் அவரை இங்கு எங்கோ கண்டேன். அவரும் அவருடைய மனைவியும் என் னுடன் வந்துக் கொண்டிருந்தனர். நான் அவரிடம், "நீங்கள் கவனித் துக் கொண்டே வாருங்கள், அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது அவ்விதமாக நடக்கப் போகிறது" என்றேன். 69. பல இரவுகள் காத்துக் கொண்டிருந்தோம். நான்கு அல்லது ஐந்து இரவுகள். நாங்கள் பல நாட்கள் வேட்டையாடி னோம். இரவு நேரத்தில் நீங்கள் ஒரு சிங்கத்தை மரத்தின் மேல் ஏறச் செய்வது மிகவும் அரிதான செயல். நாங்கள் வீடு திரும்பி கொண்டி ருந்தோம், அவர்கள் நாய்களை அவிழ்த்து விட்டனர் - இந்த வேட் டைக்காரன், இந்த மார்மோன் பையன். அந்த சிங்கம் பாதையைக் கண்டு பிடித்து, இல்லை, நாய் சிங்கத்தின் பாதையைக் கண்டு பிடித்து, அதை துரத்தி ஒரு மரத்தின் மேல் ஏற்றினது, இரவு பத்து மணிக்கு அவர்கள் வந்து எங்களை படுக்கையிலிருந்த எழுப்பினர். நாங்கள் அங்கு சென்ற போது, நான் தரிசனத்தில் கண்ட அதே சிங் கம் மரத்தில் இருந்தது. விளக்குகளை விட்டு விட்டுப் பிரகாசிக்கச் செய்து, சகோ.மாஸ்லி நாற்பத்து நான்கு காலிபர் துப்பாக்கியினால் அதை சுட்டார். அது சிங்கத்தை இரண்டாகப் பிளந்தது. அது எனக்கு கூறப்பட்ட விதமாகவே அங்கு இருந்தது. 70. அடுத்த நாள், நான் அந்த நாட்டின் தலைமை வேட்டை அதிகாரியை சந்தித்தேன். அவரும் ஒரு ஜாக் மார்மோன். அந்த பையன்களை ஒன்று கூட்டிக் கொண்டு போய், வீடு திரும்பும் வழி யில் அவர்களை கிறிஸ்துவினிடம் வழிநடத்தினேன். 71. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார் என்று உங்களிடம் கூறுகிறேன். தேவன் தம்முடைய வார்த் தையை அவ்வாறே நிரூபிக்கிறார். 72. "காண்பது தான் நம்பிக்கை தரும்" என்று ஜனங்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது முற்றிலும் உண்மை யல்ல. அநேக மக்கள் கண்டும் விசுவாசிக்காமல் இருக்கின்றனர். 73. இயேசு இவ்வுலகில் இருந்த நாட்களில், அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை என்று அவர்கள் ஏன் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை? "உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்" என்று மோசே உரைத்தான் என்பதை ஜனங்கள் ஏன் உணரவில்லை? அவர் என்ன செய்வார் என்று தேவன் உரைத்த ஒவ்வொரு வார்த்தையையும் அவர் நிறைவேற்றினார். இருப்பினும் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. – 74. ஆனால் தேவன், ஒவ்வொரு காலத்திலும், அவருடைய வார்த்தை உண்மையென்பதை நிரூபித்து வந்திருக்கிறார். அவர் எப்பொழுதும் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். சில வேளைகளில் அவர்கள் "காண்பது தான் நம்பிக்கை தரும் என்கின்றனர். அது அவ்விதம் அல்ல. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் தேவன் தமது வார்த்தையை நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறார் என்று நாமறிவோம். 75. அவர், "நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று உரைத்ததை ஆதாம் ஏவாளிடம் நிரூபித்தார் என்று நமக்குத் தெரியும். அது உண்மையென்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதை நாம் விசுவாசிக்கிறோம், ஏனெனில் அவர் அதை நமக்கு நிரூபித்திருக்கிறார், அது உண்மையென்று நாமறிவோம். 76. தேவன் தமது வார்த்தையை நிரூபித்த சில இடங்களை இப்பொழுது நாம் எடுத்துக் கொள்வோம். உதாரணமாக, நாம் நோவாவின் நாட்களை எடுத்துக் கொள்வோம். தேவன் நோவாவுக்கு ஒரு செய்தியை அளித்தார், அது நிச்சயம் விஞ்ஞானத்துக்கு முரணாகவும் நம்பத்தகாததாயும் இருந்தது. யாருமே அதை நம்பியிருக்க முடியாது. அது வரைக்கும் பூமியில் மழை பெய்த தேயில்லை. விஞ்ஞானத்துக்கு முரணானது! 77. அது ஒருக்கால் நாம் தற்பொழுது வாழும் காலத்தைக் காட்டிலும் பெரிய விஞ்ஞான காலமாக இருந்திருக்கக் கூடும், ஏனெனில் அவர்கள் அந்த நாட்களில் கூர்நுனிக் கோபுரங்களையும் ஸ்பின்க்ஸ்க ளையும் (sphinxes) மற்றவைகளையும் கட்டினர். இவைகளை நம்மால் இப்பொழுது கட்ட இயலாது. அவர்களுக்கு ஒரு சக்தி, ஏதோ ஒருவிதமான இயந்திர சக்தி, ஒருக்கால் அணுசக்தி, இருந்தது. அவர்கள் அதைக் கொண்டு பிரம்மாண்டமான பாறைகளை உயரே தூக்கினர். அவ்விதம் இன்றைக்கு நம்மால் செய்ய இயலாது. அவர்கள் பெரிய விஞ்ஞானக் காரியங்களை செய்தனர். சவத்தை தைலமிட்டு அதைப் பாதுகாக்க அவர்களிடம் ஏதோ ஒன்று இருந்தது. அதன் விளைவாக அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கெடாமல் அப்படியே இருந்தது. அந்த கைத்திறனை நாம் இழந்து விட்டோம். 78. "நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் இருக்கும்" என்று. இயேசு உரைத்தார். இப்பொழுது நாம் மற்றுமொரு பெரிய விஞ்ஞான காலத்துக்குள் பிரவேசிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்று நாமறிவோம். - 79. நோவா பெற்றிருந்த செய்தியானது அந்நாளில் இருந்த சபையின் விசுவாசத்துக்கு முரண்பாடாய் இருந்தது. அது விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் கூட முரண்பாடாய் அமைந்திருந்தது. ஆனால் தேவனோ அவருடைய வார்த்தை சத்தியம் என்பதை நிரூபித்தார். அந்த தீர்க்கதரிசி கூறினது சத்தியம் என்பதை தேவன் நிரூபித்தார். 80. நாம் வேறொன்றையும் சிறிது நேரத்துக்கு எடுத்துக் கொள்வோம். ஆபிரகாம் மற்றுமொரு கர்த்தருடைய தீர்க்கதரிசி. அவனுக்கு எழுபத்தைந்து வயதும், சாராளுக்கு அறுபத்தைந்து வயதுமான போது தேவனுடைய வார்த்தை அவனுக்குண்டாகி, அவனுக்கு சாராளின் மூலம் ஒரு குழந்தை பிறக்கும் என்று அவனிடம் உரைத்தது. அது ஒரு அவிசுவாசிக்கு அதிர்ச்சியை விளைவிக்கக் கூடிய ஒன்று. இந்நாளில் நாம் பெற்றுள்ள நமது விஞ்ஞான சாதனைகள், அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சோதனைக் குழாய் குழந்தைகள் போன்றவைகளின் மத்தியில், இப்படிப்பட்ட ஒரு காரியம் நடக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஆனால் அறுபத்தைந்து வயது நிரம்பிய கிழவியும், எழுபத்தைந்து வயது நிரம்பிய கிழவனும்; கர்த்தருடைய வார்த்தை ஆபிரகாமுக்கு உண்டாகி இது நடக்கும் என்று உரைத்தது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். தேவன் எவ்வளவு தான் உரைத்தாலும், அது எவ்வளவு உண்மையாக இருந்த போதிலும், அது நிறைவேறு வதற்கென ஆபிரகாம் தேவன் உரைத்ததை விசுவாசிக்க வேண்டிய வனாயிருந்தான். அந்த மனிதன் எவ்வாறு சோதிக்கப்பட்டு, அவன் விசுவாசித்தான் என்னும் நற்சாட்சியைப் பெற்றான் என்பதைப் பாருங்கள்! 81. தேவனை விசுவாசித்ததாக அறிக்கை செய்த அந்த மனிதன், இன்றிரவு இங்கு உட்கார்ந்துள்ள உங்களைப் போன்ற ஒருவனே! நாம் இன்னும் தேவனை விசுவாசிக்கிறோம். அவருடைய வார்த்தை சத்தியம் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் அதை விசுவாசிப்போமானால், அது சத்தியம் என்பதை அவர் நிரூபிப்பார். 82, ஆபிரகாமுக்கு இருந்த தடையைப் பாருங்கள். முதலா வதாக, அவனுடைய வயது. அவனுக்கு எழுபத்தைந்து வயது. சாராளுக்கு அறுபத்தைந்து வயது. அவளுக்கு வாழ்க்கையில் மாறுதல் உண்டாகி, ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவளுக்கு அநேக ஆண்டு களுக்கு முன்பு நின்று போயிருந்தது என்பதில் ஐயமேயில்லை. ஆபிரகாம் அவளை மனைவியாகக் கொண்டு அவளுடன் வாழ்ந்து வந்தான். அவள் அவனுக்கு ஒன்றுவிட்ட சகோதரி, அவளுடைய இளம் பருவத்திலேயே அவன் ஒருக்கால் அவளை மனைவியாக ' மணந்திருக்கக் கூடும். அவனுக்கு பிள்ளைகள் இல்லை. அவள் முற்றிலும் மலடியாயிருந்தாள். நாம் காண்பது என்னவெனில், இதை அவர் செய்வதற்கென, இது நிறைவேறுவதற்கென, அவன் அதை விசுவாசிக்காத அவனுடைய ஜனங்கள் அனைவரையும் விட்டு பிரிந்து வர வேண்டியிருந்தது. 83. உங்கள் ஜனங்களை விட்டு நீங்களும் பிரிந்து வர வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் நீங்கள் அவிசுவாசமாகிய வம்பு பேச்சுகளை விட்டு பிரிந்து வரவேண்டும், அதை விட்டு நீங்கள் விலகியிருக்க வேண்டும், ஜனங்கள். "ஆ, அவைகள் நடப்பதில்லை! இவர்கள் பைத்தியக்காரக் கூட்டம்! அப்படிப்பட்ட எதுவும் நடப்ப தில்லை" என்று கூறுவார்களானால், உங்கள் செவிகளை மூடிக் கொண்டு அங்கிருந்து நடந்து சென்று விடுங்கள். அதற்கு கவனம் செலுத்தா தீர்கள். 84. “ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல் தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான்" என்று வேதம் உரைக்கிறது (ரோமர் 4: 20-21). அவனுடைய பெயர் ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம் என்று மாற்றப்பட்டது. அந்த பெயர் மாற்றம் அவனுக்கு "ஜாதிகளின் தகப்பன்' என்னும் பெயரைக் கொடுத்தது. ஒரு மனிதன் தன் இருதயத்துக்கு இனியவளான மனைவியுடன் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து, அவனுக்கு ஏறக்குறைய எண்பது வயதும் அவனுடைய மனைவிக்கு எழுபது வயதும் ஆன பிறகும், ஒரு குழந்தையும் இல்லாமல், குழந்தை பிறக்கும் என்னும் எந்த நம்பிக்கையும் இல்லாமல், இருப்பினும் "ஜாதிகளின் தகப்பன்" என்று உரிமை கோருவதை உங்களால் ண் ணிப் பார்க்க முடிகிறதா? அவனைக் கடந்து செல்லும் அவனுடைய சகாக்கள், "ஜாதிகளின் தகப்பனே, இப்பொழுது உனக்கு எவ்வளவு பிள்ளைகள் உள்ளனர்?" என்று பரிகாசம் செய்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இத்தனை குறை கூறுதலையும் அவன் சகிக்க வேண்டியதாயிருந்தது! 85. ஆனால் ஆபிரகாம் அவிசுவாசத்தினால் தடுமாறவே யில்லை. தேவன் தாம் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்றும், அது எவ்வளவு காலமானாலும் தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபிப்பார் என்றும் அவன் முழு நிச்சயமாக நம்பினான். அவன் ஒவ்வொரு முறையும். நாம் செய்வது போல பலவீனமடைவதற்கு பதிலாக, எல்லா நேரத்திலும் அதிக மதிகமாய் பலன் கொண்டான். “இன்றைக்கு அது நடக்காமல் போனால், நாளைக்கு அது இன்னும் சற்று பெரிய அற்புதமாயிருக்கும், ஏனெனில் அது ஒரு நாள் கூடுதலாகி விட்டது' என்று அவன் எண்ணினான். அது தேவன், அது ஆபிரகாமுக்குள் இருந்த தேவன், ஏனெனில் தேவன் தமது வார்த்தைகள் அனைத்தையும் நிரூபிப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். 86. அவருடைய பிள்ளைகள் அவருடைய வார்த்தையை மாத்திரம் ஏற்றுக் கொண்டால், அவர் உங்கள் மூலம் அதை நிரூபிப்பார். அந்த ஒரு வழியில் மட்டும் அவரால் தமது வார்த்தையை நிரூபிக்க முடியும். 87. அவர் அவிசுவாசிகளுக்கு அதை நிரூபிப்பதில்லை அவர்களுக்கு அது நிரூபிக்கப்படுவதில்லை. அவர்கள் அவிசுவா சிகள். அது அவிசுவாசிகளுக்கு அல்ல. அது அவிசுவாசிகளுக்கு அல்லவே அல்ல. 88. அது விசுவாசிப்பவர்களுக்கே. அவருடைய வார்த் தையை விசுவாசிக்கும் எவரையாகிலும் அவரால் கண்டு பிடிக்க முடியுமானால், அவர் மூலம் தமது வார்த்தையை அவர் நிரூபிப்பார். தேவன் தம்மை நிரூபிப்பதற்கென, சில நேரங்களில் நமக்கு வியா தியும் மற்ற காரியங்களும் நேரிடுகின்றன. 89. இயேசு கண்ட குருடன் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவர்கள், "இது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமா, அல்லது இவன் தாய் தகப்பன்மார் செய்த பாவமா?" என்று கேட் டனர். 90. அவர், "இந்த விஷயத்தில், யாரும் பாவம் செய்ய வில்லை. தேவனுடைய கிரியைகள் இவனில் வெளிப்படும் பொருட்டே" என்றார். பாருங்கள், இயேசு மகிமைப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த பையனுக்கு அது நேரிட்டது. சில நேரங்களில் வியாதி சாபமாயிராமல், ஆசிர்வாதமாய் அமைகிறது. அதன் மூலம் நம்முடைய விசுவாசத்தை நாம் செயல்படுத்தி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கலாம். நீங்கள் மட்டும் சோதனையின் விளைவாக பலவீனமடையாமல் போனால், தேவன் உரைத்ததை அவர் அப்படியே நிரூபிப்பார். 91. அவர் ஒரு முறை யோபுவுக்கு, அவன் முகத்துக்கு நேராக சபிப்பதில்லை என்பதை நிரூபித்தார். யோபு கடந்து சென்ற சோதனையைப் பாருங்கள். மரணத்தின் பிடியில் அவன் இருந்த போதிலும், அவன், "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த் தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்' என்றான் (யோபு 1:21). அவன் அதை உறுதியாக நம்பினான். தேவன் யோபுவுக்கு தமது வார்த் தையை நிரூபித்தார். அவர் அதை ஆபிரகாமுக்கு நிரூபித்தார். அவர் அதை அவ்விதம் நிரூபித்தார். 92. அவர் மோசேயிலும் அதை நிரூபித்தார். தொல்லைகள் அவனுக்கு விரோதமாக இருந்தபோது, அவன் ஒருக்கால் இஸ்ர வேலரை மீட்டு இரட்சிப்பவனாயிருக்கலாம் என்று தன் மனதில் எண்ணியிருக்கக் கூடும். அவனுடைய தாய் ஒருக்கால் அவன் அதற்கேற்ற பிள்ளையாக பிறந்திருக்கிறான் என்று அவனிடம் கூறியிருக்கக் கூடும். அவள் தான் பார்வோனின் அரண்மனையில் அவனை வளர்த்தவள். அவள் அவனிடம், "மகனே, நாங்கள் மீட்கப்பட வேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருந்தோம். தேவன் உன்னை தான் எங்களை மீட்பதற்கு உபயோகிப்பார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்" என்று சொல்லியிருப்பாள் என்பதில் ஐயமில்லை. பிறகு அவன் ... 93. பாருங்கள், அவன் பார்வோனின் குமாரத்தியின் மகனாக கருதப்பட வேண்டியவன், அவன் சிம்மாசனத்தில் வாரிசாக உட்கார வேண்டியவன் என்று நாம் காண்கிறோம். அவர்களுடைய மனதில் அவன் அடுத்த பார்வோனாக ஆகிவிடுவான் என்றும், "அடுத்த பார்வோனாக ஆகிவிட்டு அந்த விதத்தில் தான் அவன் ஜனங்களை விடுவிப்பான்' என்றும் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் தேவனுக்கோ ' ஒரு... அப்படி இருந்திருக்குமானால், அவன் அதை அரசியல் முறையில் செய்திருப்பான். ஆனால் தேவனோ எப்பொழுதும் அவ்விதம் கிரியை செய்வதில்லை." 94. தேவனோ தமது சொந்த வழிகளில் கிரியை செய்கிறார். அவர் அவர்களை “வெளியே கொண்டு வருவதாக கூறினார். அவர் ஆபிரகாமிடம், நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை பலத்த கரத்தினால் வெளியே கொண்டு வருவார் என்றும், அவர் அற்புதங் களையும் அடையாளங்களையும் காண்பிப்பார் என்றும் உரைத்திருந் தார். எனவே ஆபிரகாம்... ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்று காண்கிறோம். இங்கு மோசே இப்பொழுது தேவனை விசுவாசிக்கிறான். 95. பார்வோன் வெளிநோக்கிய அதே ஜன்னலின் வழியாக மோசேயும் வெளிநோக்கி, அதே ஜனங்களைக் கண்டான். பார்வோன் அவர்களை, "சபிக்கப்பட்ட ஜனங்களாக, ஏதோ ஒரு தேவனிடம் மூடபக்தி வைராக்கியம் கொண்டுள்ளவர்களாக, அவர்கள் அறிந்திராத ஏதோ ஒரு வனாந்தரக் கடவுளின் மேல் பக்தி கொண்டவர்களாக, அவர்கள் ஏதோ ஒன்றுமற்ற காணக்கூடாத ஒரு கம்பத்துக்கு ஜெபத்தை ஏறெடுக்கும் ஒரு கூட்டம் மதவெறி கொண்டவர்களாக" கண்டான். அவர்கள் ஒரு கூட்டம் அடிமைகள் என்றும், அவர்கள் அடிமைகளாயிருக்க அவர் அனுமதித்துள்ளதால், அவர் தேவன் அல்ல என்று அதன் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும் அவன் எண்ணினான். 96. இவையனைத்தின் மத்தியில், தேவன் அவர்களை விடுவிக்க வேண்டிய அந்த மனிதனை வளர்த்து வந்தார். தேவன் விசித்திரமான காரியங்களை அவர்கள் முன்னிலையில் செய்து வருகிறார். அவன் வேதசாஸ்திர பண்டிதன் அல்ல, அவன் ஒரு சாதாரண மனிதன், அந்த வேலைக்கென்று பிறந்தவன். தேவன் அவனைத் தமது தீர்க்கதரிசியாக இருக்க அழைத்து, அவனை அங்கு அனுப்பினார். முழு உலகத்தையும் வென்று, இயந்திர கருவிகளைக் கொண்டிருந்த அந்த சேனையை சந்திக்க, அவன் கையில் ஒரு வளைந்த கோலைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. ஆனால் தேவன், இந்த கோலைக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை அவன் விடுவிப்பான் என்று உரைத்திருந்ததால், அந்த கோலைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கு சென்று அதை நிறைவேற்றினான். ஏனெனில் தேவன் அதை வாக்களித்திருந்தார். அவன் எவ்விதம் அதைச் செய்யப் போகிறான்? “நான் உன்னோடு கூட இருப்பேன்". 97. அவன், “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பியும், கர்த்தாவே, நான் மந்த நாவுள்ளவன். என்னால் சரியாக பேச முடியாது. நான்..." என்றான். அவன் லட்சக்கணக்கான சாக்கு போக்குகளைக் கூறினான். 98. ஆனால் அவரோ, "நான் உன்னோடு கூட இருப்பேன்" என்றார். அவன் செயல்பட அது மாத்திரமே தேவையாயிருந்தது. அவன் தேவனுடைய வார்த்ைைய ஏற்றுக் கொண்டு அங்கு சென்றான். அது எவ்வளவு ஆபத்தான பணியாக காணப்பட்ட போதிலும், மோசே தொடர்ந்து தேவனை விசுவாசித்தான். தேவன் மோசேயின் மூலமாய், அவருடைய வார்த்தை சத்தியம் என்பதை நிரூபித்தார். ஏனெனில் என்ன நடந்த போதிலும், மோசே வார்த்தையில் நிலைகொண் டிருந்தான். அவனுடைய பிரயாணத்தின் போது .... 99, அவர்கள் எகிப்தில் இருக்கையில், தேவன் அவர்களிடம், அவர்களை விடுவித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற ஒரு நல்ல தேசத்துக்கு கொண்டு போவதாக கூறியிருந்தார். அந்த தேசம் அங்கு ஏற்கனவே இருந்தது. அது அங்கிருந்ததை அவர்கள் அறியவில்லை. அவர், "அது அங்குள்ளது. அதை உங்களுக்கு அளித்து விட்டேன், அது ஏற்கனவே உங்களுடையது. போய் அதை கைப்பற்றி பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார். 100. அநேகர் எகிப்தை விட்டு வெளிவந்து வனாந்தரத்தில் ஆவியில் நடனமாடினர், மிரியாம் தம்புரு' அடித்தாள். வானத்தி லிருந்து விழுந்த மன்னாவை அவர்கள் புசித்தனர். மோசே ஆவியில் பாடுவதை அவர்கள் செவிகொடுத்து கேட்டனர், அடையாளங்களை யும் அற்புதங்களையும் அவர்கள் கண்டனர், ஆனால் தேவனுடைய முழு வார்த்தையையும், வாக்குத்தத்தம் அனைத்தையும் விசுவாசிக்க வேண் டும் என்னும் பரீட்சை உண்டானபோது, அவர்கள் தவறினர். 101. இருவர் மட்டுமே அதை விசுவாசித்தனர். அது யோசுவாவும் காலேபும். அது செழிப்பான தேசம் என்பதற்கான அத்தாட்சியை அவர்கள் அங்கிருந்து கொண்டு வந்தனர். 102. ஆனால் சூழ்நிலை தான் அவர்களுக்குத் தடையாக இருந்தது. அவர்கள், “அந்த தேசத்தை நம்மால் கைப்பற்றமுடியாது, ஏனெனில் அவர்களுடைய பட்டினங்கள் மதில்களினால் சூழப்பட் டுள்ளன, அங்குள்ள ஜனங்கள் இராட்சதர்கள். அவர்கள் பக்கத்தில் நாம் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்படுகிறோம்” என்றனர். 103. யோசுவாவும் காலேபும், “அதை நாம் எளிதில் கைப்பற்றி விடலாம்" என்றனர். ஏன்? தேவன் அதை அவர்களுக்கு அளித்து விட்டார், அவர்கள் எவ்வளவு பெரிய இராட்சதர்களாயிருந்தாலும் கவலையில்லை. அந்த தடை அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவேயில்லை. தேவன் அவ்விதம் உரைத்திருந்தார். தேவன் அவர்கள் மூலம் அதை நிரூபித்தார். அவர்கள் சென்று, தேவன் உரைத்த வண்ணமாகவே, அந்த தேசத்தை கைப்பற்றினர். தேவன் அவர்களுக்கு அதை நிரூபித்தார். 104. அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அங்கு சென்ற போது, மலைகளிலிருந்து தண்ணீர் பனிக்கட்டிகளின் வழியாய் பெருக்கெடுத்து கீழே ஓடி வந்து கொண்டிருந்தது. தேவன் தமது சேனையை அந்த விதமான இடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்ததால், அவர் ஒரு திறமையற்ற தளபதி என்பது போல் காணப்பட்டது. அவர்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய முடியாதபடிக்கு அந்த இடத்தில் மாட்டிக் கொள்ளும்படி அவர் செய்து விட்டார். அவர் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு செல்லவிருந்த நேரம் ஆண்டிலேயே மிகவும் மோசமான மாதமாகும். அந்த மாதத்தில் யோர்தான் பெருக்கெடுத்து கரைபுரண்டு வயல்களை அடைவது வழக்கம். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைவதற்கு ஏற்ற நேரம் கோடை காலமே. அப்பொழுது அவர்கள் தண்ணீரில் நடந்து கடந்து சென்றிருக்கலாம். ஆனால் தண்ணீர் ஆழமாகும் வரைக்கும் அவர் காத்திருந்தார். அவர் தேவன் என்பதைக் காண்பிக்க அவருக்குப் பிரியம். என்ன நேர்ந்தபோதிலும், அவருடைய வார்த்தையை நிரூபிக்க அவருக்குப் பிரியம். 105. "நீங்கள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக் கிறீர்கள்" என்று மருத்துவர் சொன்னால் கவலைப்படாதீர்கள். அந்த மனிதனுக்கு அவ்வளவுதான் தெரியும். இன்றிரவு இங்குள்ள சிலருக்கு தண்ணீர் ஆழமாயிருக்கக் கூடும். ஆனால், தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் தமது வார்த்தையைக் காத்துக் கொண்டு அதை நிறைவேற்றுகிறார். தேவன் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். அது உண்மை . 106. தண்ணீர் சேறாகி, ஆழமாகி, அவர்களுடைய தலைக்கு மேல் போகும் வரைக்கும் அவர் காத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் வழியைத் திறந்து கொடுத்தார். அவர்களுக்கு முன்பாக அவர் சென்று வழியை உண்டாக்கினார். 107. எரிகோ எல்லா பக்கங்களிலும் மதில்களால் சூழ்ந்து மூடப்பட்டிருக்க, அவர்கள் எவ்விதம் உள்ளே பிரவேசிக்க முடி யும்? இவ்வாறு யோசுவா வியந்து கொண்டிருந்தான். தேவன் அவனை அவ்வளவு தூரம் வழிநடத்திச் சென்றார், அடுத்தபடியாக செய்ய வேண்டியதும் தேவனைச் சார்ந்ததே என்பதை அவன் அறிந் திருந்தான். 108. ஒரு நாள் அவன் மதில்களைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த போது, உருவின பட்டயத்துடன் ஒரு மனிதன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அப்பொழுது அவன் தன் பட்டயத்தை உருவிக் கொண்டு அந்த மனிதனை சந்திக்கச் சென்று, "நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ?” என்று கேட்டான். 109. அவர், "நான் கர்த்த ருடைய சேனையின் அதிபதி" என் றார். அவன் என்ன செய்ய வேண்டுமென்பதை அவனுக்குக் கற்பித் தார் - அவன் எவ்விதம் எக்காளம் ஊத வேண்டும் என்றும், அதில் ரதப் பந்தம் அவர்கள் நடத்தும் அளவுக்கு இருந்த அந்த மதில் எப்படி விழுந்து போகும் என்றும். அதற்கும் எக்காளம் ஊதுவதற் கும் என்ன சம்பந்தம்? 110. தேவன் அத்தகைய எளிய முறைகளை உபயோகிக்கிறார். அத்தகைய எளிமை தான் அவரை தேவனாக எனக்கு செய்கிறது. நாம் ஏதோ பெரிய காரியங்களை தேடிக் கொண்டிருக்கிறோம், அவர் ஏதோ பெரிய காரியங்களை செய்வாரென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேவன்... ஏதோ ஒரு பெரிய ஸ்தாபனம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அவையனைத்தையும் தெளிவு படுத்தி விடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தேவன் ஒரு எளிய மனிதனை, அவருடைய கரங்களில் அவர் பிடித் துக் கொள்ளக் கூடிய ஒரு மனிதனை, தெரிந்து கொண்டு, அதன் மூலம் அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற் றுவார். அவர் எளிய சிறிய முறைகளைக் கையாளுகிறார். 111. "எக்காளம் தொனி" மதிலைத் தோண்டியெடு என் றல்ல, "எக்காளம் தொனி, அப்பொழுது அலங்கம் இடிந்து விழும். எக்காள முழக்கம் மதில்களை வீழ்த்தும்." அது மாம்ச சிந்தைக்கு எவ்வளவு மூடத்தனமாயிருக்கும்! ஆனால் தேவனோ தமது வார்த்தை சத்தியம் என்பதை நிரூபித்தார். ஏனெனில் மதில்கள் இடிந்து ஒன் றின் மேல் ஒன்று விழுந்தன. அவர்கள் உள்ளே சென்று பட்டி னத்தை கைப்பற்றினார்கள். 112. ஓ, தேவன், தாம் தேவன் என்பதை நிரூபிக்க விரும்புகிறார். யோசுவா அதை அறிந்திருந்தான். ஒரு நாள், அவன் அங்கு நின்று கொண்டிருந்த போது, இயற்கைக்கு முரணான மிகப் பெரிய சம்பவங்களில் ஒன்று நடந்தது. இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்தெழுதலுக்கு அடுத்தபடியான மிகப் பெரிய சம்பவம். சத்துரு... அவன் சத்துருவை மடங்கடித்து, சேனைகள் மலையின் மேல் இருந்த போது, சூரியன் அஸ்தமிக்கத் தொடங் கினது. ஓ, என்னே, அது தளபதி யோசுவாவுக்கு எப்படிப்பட்ட நேரமாய் இருந்திருக்கும்! 113. ஞாபகம் கொள்ளுங்கள், ஒரு மருத்துவமனை, ஒரு நர்ஸ், முதலுதவி பெட்டி, காயப்பட்ட மனிதன் எவரும் இல்லாமலே அவன் தேசத்தின் மேல் போர் தொடுத்து அதைக் கைப்பற்றிக் கொண்டு வந்தான். அதைவிட சிறந்த ஒன்றை எனக்கு எடுத்துக் கூறுங்கள் பார்க்கலாம். ஆம். ஐயா. அவனுக்கு மருத்துவமனைகளோ, நர்ஸ்களோ எதுவும் இருக்கவில்லை. அவன் போரில் ஒரு மனிதனை யும் இழக்கவில்லை - அவர்கள் கர்த்தருடைய சித்தத்திலும் வார்த் தையிலும் நடந்து கொண்டிருந்த வரைக்கும். தேவன் அவர்களோடு இருந்தார் என்பதை நிரூபித்தார். அது உண்மை. இப்பொழுது கவனியுங்கள். 114. இரவு நேரம் வருமானால், அவர்கள் மெல்ல நழுவி ஒருவரையொருவர் சந்தித்து, ஒன்றாக சேர்ந்து வேறொரு பெரிய சேனையாக திரண்டு வருவார்களானால், அடுத்த நாள் அவனுக்கு கடினமான நேரம் உண்டாயிருக்கும் என்று யோசுவா அறிந்திருந்தான் என்று நாம் காண்கிறோம். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் தேவனை நோக்கிப் பார்த்தான். அவனுக்கு உதவி தேவையாயிருந்தது. அந்த சூரியன் அஸ்தமிக்காமல் நிற்க வேண்டியது அவனுக்கு அவசியமாயிருந்தது. எனவே சூரியன் தனித்து நிற்கும்படி அவன் கட்டளையிட்டான். “சந்திரனே, நீ ஆய லோன் பள்ளத்தாக்கின் மேல் தரித்து நில்" என்றான். அவன் மறுபடியும் கட்டளையிடும் வரைக்கும் அவை அசையவில்லை. சந் திரனும் சூரியனும் இருபத்து நான்கு மணி நேரம் தரித்து நின்றன. யோசுவா யுத்தம் செய்து சத்துருவின் மேல் ஜெயம் கொண்டான், ஏனெனில் அவன் கடமையின் பாதையில் நிலைத்திருந்தான். அவ னுக்கு அவ்விதம் செய்ய உரிமையிருந்தது. ஏனெனில் அவன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்திருந்தான். 115. நீங்களும் கடமையின் பாதையில் நிலைத்திருந்து, தேவ "னுடைய வார்த்தையை கைக்கொண்டு, அவர் என்ன செய்ய வேண்டுமென்று உரைத்திருக்கிறாரோ, அதை அப்படியே செய்து, தேவனுடைய கட்டளையை அனுசரித்து அதன்படி அணிவகுத்து செல்வீர்களானால், அந்த மலையைப் பார்த்து "பெயர்ந்து போ" என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. 116. தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார். "நீங்கள் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து தள்ளுண்டு போ என்று சொல்லி, நீங்கள் சொன்னபடியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்ன படியே ஆகும்." இயேசு அவ்வாறு பரிமாற்கு 11:22ல் உரைத்திருக் கிறார். அது சத்தியம். அது சாத்தியமென்று நானறிவேன். அது தேவனுடைய வார்த்தை , அது சத்தியமென்பதை அதுவே நிரூபிக் கிறது. சில வேளைகளில் நாம் பயப்படுகிறோம். அவர் அந்த வார்த் தையை நிறைவேற்ற மாட்டார் என்று பயப்படும் கட்டத்தை நாம் அடைகிறோம். அவர் அந்த வார்த்தையை நிறைவேற்றுவார். அவர் அவ்விதம் செய்வதாக வாக்களித்துள்ளார். அது உண்மையென்று நாம் காண்கிறோம். அவர் அதை நிரூபித்தார். 117. ஏசாயர் ஒரு சமயம் உரைத்த தீர்க்கதரிசனம், ஒரு போதும் நடக்காத ஒன்று. அதற்கு முன்பும் அது நடந்ததில்லை, அது நிறைவேறின பின்பு அதற்கு பின்பும் அது நடந்ததில்லை. அவன் “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். ஒருமனிதனை அறியாத ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாவதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஏசாயா "ஒரு கன்னிகை கர்ப்ப வதியாவாள்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். 118. தேவன், தமது வார்த்தை சத்தியம் என்பதை நிரூபிக்க, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகும்படி செய்தார். அவர் தமது வார்த் தையை நிரூபித்தார், எப்படியெனில் ஒரு கன்னிகை அவ்வாறு கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். 119. இப்பொழுது, மாமிசத்தில் தோன்றிய அந்த வார்த்தை , என்ன செய்ததென்று பாருங்கள். அந்த குமாரன் தோன்றின போது, அவர் வார்த்தையாகவே இருந்தார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனா யிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார்." 120. அவர் ஜீவிக்கிற வார்த்தையாயிருந்தார். அவர் அந்த ஜீவிக்கிற வார்த்தை என்பதை நிரூபித்தார். அக்காலத்தில் இருந்த போதகர்களிடம் அவர், “என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?" என்றார். பாவம் என்பது "அவிசுவாசம்". "நான் அவிசுவாசி என்று யார் சொல்லக் கூடும்? என்னைக் குறித்து எழுதப்பட்டிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறிவிட்டது. அவருடைய வாழ்க்கையைக் குறித்து உரைக்கப் பட்டிருந்த கடைசி ஏழு தீர்க்கதரிசனங்கள், அவர் சிலுவையில் தொங்கின போது, அந்த கடைசி ஏழு மணி நேரத்தில் நிறைவே றின. அவரைக் குறித்து எழுதப்பட்ட ஒவ்வொன்றும் நிறைவேறி னது. ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார். அவர் வார்த்தை என்பதை நிரூபித்தார். அவர் வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தினார், அவர் மரித்தோரை உயிரொடெழுப்பினார், அவர் மரணம், நரகம், பாதாளம் ஆகியவற்றின் மேல் வெற்றி சிறந்தார். அவர் வார்த்தை என்பதை நிரூபித்தார். 121. யவீருவின் வீட்டில் நடந்த அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். அவர்... அவர்களிடம் அவர் சத்தியத்தை எடுத் துரைத்தார். அவர் கடலைக் கடந்து வருவதை நாம் காண்கிறோம். அவர் வருகிறார். 122. மலையின் மேல் ஒரு ஸ்திரீ இருந்தாள், அவள் தன் ஆஸ்தியையெல்லாம் வைத்தியர்களுக்கு செலவழித்து விட்டாள். வைத்தியர்கள் அவளை சுகமாக்குவதற்கு தங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்தனர் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் ஒருக்கால் எபிரேய வைத்தியர்களாய் இருக்கக் கூடும். அவள் ஒரு எபிரேய ஸ்திரீ. எனவே தங்கள் சகோதரிக்காக அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தனர். இருப்பினும் அவர்களால் உதிரப் போக்கை நிறுத்த முடியவில்லை. அது ஒருக்கால் ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவளுக்கு நிற்க வேண்டிய நேரமாய் இருந்திருக்கும், அவளுக்கு உதிரப் போக்கு அதிகமாக இருந்ததால், அவள் மிகவும் பெலவீனமடைந்து, அவளால் எழுந்து நடக்கவும் கூட முடியாம் லிருந்தது. அவள் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள். அவருடைய சிறு படகு மரங்களின் இடையில் தள்ளப்பட்டதை அவள் கண்டபோது, அவள் என்ன நடக்கிறது என்று கண்டுகொள்ள அங்கு சென்றாள். 123. அவரைக் குறைகூறுபவர் பலர் அங்கு நின்று கொண்டிருந்தனர். இன்றைக்கும் அவரைக் குறை கூறுபவர் இல் லாமல் இல்லை. அவர் யாரென்று அவர்கள் அறிந்திருந்தால், அவரைக் குறை கூறுபவர்களாய் அவர்கள் இருக்கமாட்டார்கள். அவர் யாரென்று அவர்கள் அறியாதிருந்த காரணத்தால், அவர்கள் அவரைக் குறைகூறினர். 124. இன்றைய செய்தியைக் குறித்தும் அவ்வாறேயுள்ளது. பல நல்ல மனிதரும் ஸ்திரீகளும் இதை குறைகூறுகின்றனர், ஏனெனில் இது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. 125. இயேசு, "நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், என்னை யும் அறிந்திருப்பீர்கள். என்னைக் குறித்து மோசே சொல்லியிருக்கிறான். அநேக பெரிய மனிதர்கள் இந்த நாளைக் காண ஆசையாயிருந்தார்கள். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. யோவானின் சாட்சியைப் பார்க்கிலும் என் சாட்சி பெரியது. எனெனில் நான் செய்யும் கிரியைகள் என் பிதா என்னோடு இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது' என்றார். அவருக்கு யோவானைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள் இருந்தன, ஏனெனில் அவர் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவர். யோவானும் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவனே. ஆனால் இயேசு வந்தபோதோ, தேவன் எழும்பப்பண்ணுவார் என்று மோசே உரைத்திருந்த அந்த தீர்க்கதரிசியாக அவர் இருந்தார். 126. அன்றிரவு நான் கூறினது போல், அவர் மூன்று நாமங்களில் வருகிறார் - தேவனுடைய குமாரன், மனுஷ குமாரன், தாவீதின் குமாரன். 127. அவர் முதல் முறையாக இப்பூமியில் இருந்தபோது.. அவர் மனுஷ குமாரனாயிருந்தார். அவர் அப்பொழுது தேவனுடைய குமாரனாக இருக்க முடியாது; அவர் அப்படி இருந்ததாக உரிமை கோரவில்லை. அவர் “மனுஷ குமாரன்" என்றுதான் கூறினார். அவரை எவராகிலும் கேள்வி கேட்ட போது, அவர், "நீங்கள் மனுஷகுமாரனைக் காண்கிறீர்கள்; மனுஷ குமாரன்” என்றுதான் கூறினார். இப்பொழுது "மனுஷ குமாரன்” என்றால் தீர்க்கதரிசி. அவர் அந்த விதமாக வர வேண்டியதாயிருந்தது, ஏனெனில், வேத வாக்கியங்கள், அவர் வேத வாக்கியங்களுக்கு முரணாக வரமுடியாது. 128. ஆகையால் தான் இன்றைக்கு, இந்த மணி நேரத்தின் நமது செய்தி வேத சாஸ்திர பண்டிதர் மூலமாகவோ, வேத சாஸ்திரத்தின் மூலமாகவோ வர முடியாது. அது என்ன செய்யும் என்று வாக்களித்துள்ளதோ, அதற்கு திரும்ப வர வேண்டும். அந்தவிதமாகத்தான் அது இருக்க வேண்டும். 129. எனவே நாம் காண்பது என்னவெனில், இந்த மனிதன் அங்கே தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும், தேவனுடைய குமாரனாக அல்ல. அவர் மனுஷ குமாரனாயிருக்க வேண்டும். யேகோவாவும் கூட தம்முடைய தீர்க்கதரிசிகளை - எரேமியாவையும் மற்றவர்களையும் மனுபுத்திரன் (son of man) என்று அழைத்தார். "நீங்கள் மனுவு குமாரனைக் காணும்போது..." "மனுஷகுமாரன் யார்?" என்று அவர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தனர். 130. அப்பொழுது அவர் மனுஷகுமாரன் என்னும் பதவியை வகித்தார். அதன் பிறகு அவர் தேவனுடைய குமாரன் என்னும் பதவியை வகித்தார். தேவன் ஆவியாயிருக்கிறார். சபை காலங்களின் போது, அவர் தேவனுடைய குமாரன் என்னும் பதவியை வகித்து வந்தார். ஆயிரம் வருட அரசாட்சியின்போது, அவர் தாவீதின் குமாரனாக தாவீதின் சிங்காசனத்தின் மேல் அமருவார். அவர் தாவீதின் குமாரனாக அந்த சிங்காசனத்துக்கு சுதந்தரவாளியாயிருப்பார். மனுஷகுமாரன், தேவகுமாரன், தாவீதின் குமாரன். அவர் எல்லா காலங்களிலும் அதே மனிதனே. 131. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதைப் போல்; தேவனின் பதவிகள். அவர் தேவனாகிய பிதாவாக இருந்தார், பிறகு அவர் தேவனாகிய குமாரன் ஆனார். இப்பொழுது அவர் தேவனாகிய பரிசுத்த ஆவியாக இருக்கிறார். மூன்று தேவர்கள் அல்ல; ஒரே தேவன் மூன்று தோற்றங்களில், ஒரே தேவனின் மூன்று தன்மைகள். 132. நாம் காண்பது என்னவெனில், நாம் வாழும் இந்த காலத்திலும் அவர் அன்று செய்தது போலவே தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார். 133. அவர் கடலைக் கடந்து வருவதாக நாம் காண்கிறோம். இந்த ஸ்திரீ அவரை விசுவாசித்தாள், அவளுக்கு ஏதோ ஒன்று அடிக்கத் தொடங்கியது. அவளுடைய செய்கைக்கு ஆதாரமாக எந்த வேதவசனமும் கிடையாது, யோசுவா சூரியனை தரித்து நிற்கும்படி செய்ததற்கு எந்த வேதவசனமும் ஆதாரமாக இருக்கவில்லையோ அதுபோல். ஆயினும் அவள் தன் இருதயத்தில் அவர் தேவனுடைய குமாரன் என்பதை விசுவாசித்தாள். எனவே அவள், "அவருடைய வஸ்திரத்தை நான் தொட்டால் சொஸ்தமாவேன்" என்று எண்ணினாள். எனவே அவள் திரளான கூட்டத்தின் வழியாக சென்று அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அப்பொழுது அவளுடைய பெரும்பாடு நின்று போயிற்று. 134. அவரைத் தொட்டது யாரென்று அறிய அவர் கூட்டத்தை நோக்கினார். அந்த கூட்டத்தில் அவரைத் தொட்ட யாரோ ஒருத்தி இருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. அவர் நிறுத்தினார். ஜனங்கள் அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்; சிலர் அவரைக் கேலி • செய்தனர்; சிலர் அவரைப் பார்த்து சிரித்தனர்; ஆசாரியர்களும் குருவானவர்களும் அங்கு நின்று கொண்டு அவரை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவரை விசுவாசித்தவர் சிலர் அங்கிருந்தனர். சிறிது நேரம் கழித்து அவர் திடீரென்று நிறுத்திக் கொண்டு, திரும்பிப் பார்த்து “என்னைத் தொட்டது யார்?" என்றார். 135. அவர்களில் சிலர், "ஏன், ஐயரே?" அது பேதுரு என்று நினைக்கிறேன், "திரளான ஜனங்கள் உம்மை சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்க, உம்மைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே. எல்லாரும் தான் உம்மைத் தொடுகிறார்கள்" என்றான். 186. அவர், "என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிகிறேன்." என்றார். அவர் பலவீனமடைந்தார். அது வேறுவிதமான தொடுதல்.. 137. அதை மாத்திரம் நாம் காண முடிந்தால், சகோதரனே, சகோதரியே! அந்த குறிப்பிட்ட தொடுதலுடன் நீங்கள் அவரைத் தொடுவீர்களானால்! ஓ, வியாதிப்பட்டுள்ள ஜனங்களே, இன்னும் சில நிமிடங்களில் உங்களுக்காக நான் ஜெபிக்கப் போகிறேன். எனக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று விசுவாசிக்கிறேன், நீங்கள் பெற்றுள்ள, அல்லது இங்குள்ள மனிதர் பெற்றுள்ள பரிசுத்த ஆவியைக் காட்டிலும் அதிகமாக நான் பெற்றிருக்கவில்லை. அதே பரிசுத்த ஆவிதான், ஆனால் அது தேவனுடைய கட்டளையாயுள்ளது. வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதும் அவர்கள் மேல் கைகளை வைப்பதும், அசுத்த ஆவிகளைத் துரத்துவதும் தேவன் எனக்கு அளித்துள்ள கட்டளை என்பதை நீங்கள் விசுவாசித்து, அவர் அளித்துள்ள வரக்குத்தத்தத்தையும் விசுவாசிப்பீர்களானால், அதே காரியம் உங்களுக்கும் நடக்கும். நீங்கள் மாத்திரம் அதை விசுவாசித்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அதைப் பெற்றுக் கொள்வீர்கள். . “இதை என்னால் செய்ய முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? என்று இயேசு கேட்டார். 138. "ஆம், ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்' என்று சந்திரரோகியான பையனின் தகப்பன் கூறினான். "நீர். உலகத்தில் வருபவரான தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன் . பலனைப் பெற்றுக் கொள்ள அந்த மனப்பான்மை அவசியமென்று காண்கிறோம். 139. இப்பொழுது, விரைவாக, அவரைக் குறித்து சிறிது நேரம் சிந்திப்போம். இதோ அவர் சாலையின் வழியாக வந்து கொண்டிருக்கிறார். ஒரு ஜெப ஆலயத்தலைவன் அங்கு வந்தான்... அவன் எல்லைக்கோடு விசுவாசி என்பதில் சந்தேகமில்லை. 140. அத்தகைய எல்லைக்கோடு விசுவாசிகள் அநேகர் இன்று உலகில் உள்ளனர். அவர்கள் அதை விசுவாசிக்க விரும்புகின்றனர். பரிசுத்த ஆவி உண்மையானதென்று அவர்கள் விசுவாசிக்க விரும்புகின்றனர். கடைசி நாட்களில் தேவன் தமது ஆவியை ஊற்றுவதாக வாக்களித்த விதமாக, இது அப்போஸ்தல அசைவு என்று அவர்கள் விசுவாசிக்க விரும்புகின்றனர். நாம்... கடைசி நாட்களில் சபைக்கு மூல பெந்தெகொஸ்தே விசுவாசம் திரும்ப அளிக்கப்படும் என்று தேவன் மல்கியா 4ல் வாக்களித்துள்ளதை அவர் விசுவாசிக்க விரும்புகிறார். 141." "இதோ, கடைசி நாட்களில் நான் உங்களுக்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்" என்று மல்கியா 4 உரைக்கிறது. அது உண்மை . “அவன் பிள்ளைகளின் விசுவாசத்தைப் பிதாக் களிடத்திற்குத் திருப்புவான்". பாருங்கள், “பிதாக்களின் விசுவா சத்தை பிள்ளைகளிடத்திலும் கூட. பாருங்கள், அது அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள், "நல்லது, அது யோவான் ஸ்நானன்" எனலாம். இல்லை, இல்லை . 142. மல்கியா 3ல் உரைக்கப்பட்டுள்ளது யோவான் ஸ்நானன். அது உண்மை . மத்தேயு 11 அவ்வாறு உரைக்கிறது: “நீங்கள் ஏற் றுக்கொள்ள மனதாயிருந்தால், 'இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்' என்று எழுதிய வாக்கியத்தால் குறிக் கப்பட்டவன் இவன்தான்". அது எலியா, நிச்சயமாக. இயேசு அவ் விதம் கூறினார். ஆனால் அவன் மல்கியா 4ல் குறிக்கப்பட்ட எலியா அல்லவே அல்ல. 143. ஏனெனில், “அந்த செய்திக்குப் பின்பு உடனே, பூமியானது அக்கினியினால் சுட்டெரிக்கப்படும், அப்பொழுது நீதிமான்கள் துன்மர்க்கருடைய சாம்பலை மிதிப்பார்கள்". யோவானின் காலத்தில் அவ்விதம் நடக்கவில்லை. ஒரு செய்தி எல்லாவிடங்களிலும் பரவி, ஜனங்களை எல்லா ஸ்தாபன நிலைகளிலிருந்தும் வெளி கொணர்ந்து அவர்களை மூல உண்மையான பெந்தெகொஸ்தே விசுவாசத்துக்கு திரும்பக் கொண்டு வரவேண்டியதாயுள்ளது. அது நடந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அது ஒரு வேத வசனத்தை நிறைவேற்றுவதாய் அமைந்துள்ளது. எல்லா வேதவாக்கியங்களும் நிறைவேற வேண்டும். இன்னும் எத்தனை வேதவாக்கியங்கள் நமக்குப் பொருந்தும் என்று காண்பிப்பதற்கு எனக்கு நீண்ட நேரம் பிடிக்கும். இவைகளை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள், அவைகள் உரைக்கப்பட்டவாறே, அவர் வாக்குத்தத்தம் பண்ணின விதமாகவே, ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு நிறைவேற வேண்டும். 144. அந்த சிறுமியை சுகப்படுத்த இயேசு செல்வதை நாம் காண்கிறோம். அவளுடைய தகப்பன் ஒரு எல்லைக்கோடு விசுவாசி. அவன் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய நிலையை அடைந்து விட்டான். மருத்துவர் அவளை கைவிட்டு விட்டார். அவன் தன் சிறு கறுப்பு தொப்பியைப் போட்டுக் கொண்டு இயேசுவைக் காண முடியுமா என்று காண விரைந்து சென்றான். பாருங்கள், உங்களுக்கு அவர் தேவைபடும் நேரத்தில் அவர் அங்கே இருப்பார். அவர் கரைக்கு வந்து கொண்டிருப்பதை அவன் கண்டான். 145. அவன், “என் மகளிடம் வந்து உமது கையை அவள் மேல் வைப்பீரானால், அவள் சொஸ்தமாவாள். அவள் மரணத் தருவாயில் இருக்கிறாள். அவள் என்னுடைய ஒரே பிள்ளை. அவளுக்கு வயது பன்னிரண்டு. எங்களுக்கு வேறு பிள்கைள் கிடையாது - என் மனைவிக்கும் எனக்கும். எங்களுக்கு வயதாகிக் கொண்டு போகிறது. எங்களுக்கு இருப்பது இந்த ஒரு பிள்ளை மாத்திரமே. இவள் மரணத்தருவாயிலிருக்கிறாள். நீர் மாத்திரம் வந்து அவள் மேல் உமது கைகளை வைப்பீரானால், அவள் சொஸ்தமாவாள்" என்றான். 146. பாருங்கள், அவன் எதை அடையாளம் கண்டு கொண் டான்? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தை இந்த மனிதனில் வெளிப்பட்டது என்பதை அவன் அடையாளம் கண்டு கொண்டான். 147. நிக்கொதேமு சொன்னது போல: “ரபீ, போதகரே, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். அதை நாங்கள் அறிந்திருக்கிறோம், பரிசேயர் அதை அறிந்திருக்கின்றனர்" என்றான். அப்படியானால் அவர்கள் ஏன் அதை அறிக்கை செய்ய வில்லை? "ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான். நீர் தேவனிடத்தி லிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். 148. யவீருவும் அவ்வாறே விசுவாசித்தான் என்று நாம் காண்கிறோம். “நீர் வந்து உம்முடைய கைகளை வையும்". தேவன் அவருக்குள் வாசம் செய்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். "என் பிள்ளையின் மேல் உமது கைகளை வையும். அவள் மரணத் தருவாயிலிருந்தாலும், அவள் பிழைப்பாள்". 149. அவர் அவனுடன் நடந்து சென்றார். அவர் போய்க் கொண்டிருக்கையில், ஒருவன் ஓடி வந்து, “அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம். எஜமானை இன்னும் தொந்தரவு செய்யாதீர்கள். ' பெண் மரித்துப் போனாள். அவள் போய்விட்டாள்” என்றான். 150. இயேசு திரும்பியவீருவைப் பார்த்து, "நீவிசுவாசித்தால், தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்ல, வில்லையா? நீ மட்டும் அதை விசுவாசிப்பாயானால்!” என்றார். 151. அவர் அறைக்குள் நுழைந்தார். அவர்கள் எல்லோ ரும் துக்கித்து, அழுது, புலம்பிக் கொண்டிருந்தார்கள் - வழக்கமாக யாரும் செய்வது போல. ஒரு அழகான சிறுமி, போதகரின் மகள் மரித்துப் போய் இவ்வுலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டாள். அவள் மரித்து ஒருக்கால் பல மணி நேரம் கழிந்திருக்கக் கூடும். அவர்கள் அவளை படுக்கையில் கிடத்தி, அவள் சவத்துக்கு தைல மிட்டு அடக்கம் செய்ய ஒருக்கால் ஆயத்தமாயிருந்திருப்பார்கள்: 152. அந்த நேரத்தில் இயேசு அந்த வீட்டில் நுழைந்தார். அவர்கள் எல்லாரும் புலம்பிக் கொண்டிருந்தனர். அவர் “சமா தானத்தை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அவர், “அவள் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்" என்றார். 153. அவர்கள் என்ன நினைத்தார்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? “இப்பொழுது இந்த மனிதன் யாரென்று அறிந்து கொண்டோம். அவர் முறை தவறிப் பிறந்தவர் என்று கேள்விப்படுகிறோம். அவர் செய்கின்ற மூடத்தனமான முன்னுரைத் தல்களைக் குறித்தும் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆசாரியன் 'இந்த மனிதன் பைத்தியக்காரன்' என்று சொன்னது சரியே. ஏனெனில் இந்தப் பெண் மரித்துவிட்டாள் என்று நமக்குத் தெரியும். அவள் மரித்துவிட்டாள் என்று நமக்குத் தெரியும்!- அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். வேறுவிதமாகக் கூறினால், அவரைக் குறை கூறி தர்மசங்கடமான நிலையில் ஆழ்த்தினர். . 154. அவள் மரித்துப் போகவில்லை என்று அவர் ஏற்கனவே கூறிவிட்டார். தேவையானது அதுவே. “அவள் நித்திரையாயிருக் கிறாள்." குறை கூறுபவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர் தம்முடைய வார்த்தையை நிரூபிக்கப் போகிறார். அவர் அவர் கள் அனைவரையும் வெளியே போகப்பண்ணினார். அவர் எல்லா அவிசுவாசிகளையும் வெளியே அனுப்பிவிட்டார். அவர் விசுவாசி களாகிய பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சாட்சிகளை யும், தகப்பனையும் தாயையும் கூட்டிக் கொண்டு உள்ளே சென்று. குமாரத்தியின் கையைப் பிடித்து, நித்தியத்தில் எங்கோ இருந்த அவளுடைய ஆத்துமாவை அழைக்கக் கூடிய ஒரு பாஷையில் பேசி னார், அப்பொழுது அந்த பெண் உயிர் பெற்றாள். 155. அவர் என்ன செய்தார்?, அவருடைய வார்த்தையை நிரூபித்தார். அவர் சொன்னதை அவர் நிரூபித்தார். அவள் மரித்துப் போகவில்லை, அவள் நித்திரையாயிருக்கிறாள் என்று அவர் கூறினார். நாம் காண்பது என்னவெனில், அவர் இவ்விதம் செய்ததன் மூலம், அவர் வேறொன்றையும் கூட அங்கு நிரூபித்தார். அதாவது அவர் தேவன் என்பதை நிரூபித்தார். அவருக்கு முன்னறிதல் இருந்தது என்பதை அவர் நிரூபித்தார். அவருடைய வார்த்தை என்ன உரைத்தது என்பதை இப்பொழுது கவனியுங்கள். “அவள் மரித்துப் போகவில்லை, அவள் நித்திரையாயிருக்கிறாள்." பாருங்கள், அவள் முதலாவதாக மரித்துப் போகவேயில்லை, அவள் நித்திரையா யிருந்தாள். அது அவருடைய முன்னறிவை காண்பிக்கிறது. அன்று காலையில் எத்தனையோ சிறு பெண்கள் மரித்திருக்கக் கூடும், ஆனால் இவளோ மரிக்கவில்லை. இவள் நித்திரையாயிருந்தாள் - லாசருவைப் போல. அவர் அவளை கூப்பிட்டு நித்திரையிலிருந்து எழுப்பினார். ஏனெனில் அவள் மரித்துப் போகவில்லை. 156. "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக் கும் மரியாமலும் இருப்பான்” (யோவான் 11:25-26). ஆட்டுக்குட்டி யானவரின் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிருக்கிறவர்களை மட் டுமே அவர் மரித்த போது மீட்டுக் கொண்டார். அவர்களை மட்டுமே, அவருடைய வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டவர்களை, உயிர்ப் பிக்கும் வல்லமையை தங்களில் கொண்டுள்ளவர்களை மட்டுமே அவர் அந்த நாளில் கூப்பிட்டு நித்திரையிலிருந்து எழுப்புவார். நேற்றிரவு நான் கூறினது போல, எலிசா மரித்து அவனுடைய எலும்புகள் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த போது, உயிர்ப்பிக்கும் வல்லமை அப்பொழுதும் அவனுடைய எலும்புகளில் இருந்தது. 157. நிச்சயமாக, அவர் யாரென்பதை அவர் நிரூபித்தார். நாம் மறுபடியும் என்ன காண்கிறோம் என்றால், அதே விதமாக எபி ரேயர் 4ம் அதிகாரம் 12ம் வசனத்தில், அவர் தேவனுடைய வார்த்தை என்பதையும் அவர் நிரூபித்தார். அவர் நிச்சயமாக அவ்விதம் செய்தார். அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். "தேவ னுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இரு தயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" என்று எபிரேயர் 4:12 உரைக்கிறது. ஒரு நிமிடம் இப்பொழுது கவனியுங்கள். 158. அவர் முதலில் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கின போது, அவர் வார்த்தை என்பதைக் காண்பிப்பதற்கென அவர் புறப்பட்டு வந்த போது, அவர் சோதிக்கப்பட்ட பின்பு வனாந்தரத்தி லிருந்து புறப்பட்டு வந்த போது, அங்கு பேதுரு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான், அப்பொழுது அவனுடைய பெயர் சீமோன். அவன் தன் சகோதரன் அந்திரேயாவுடன் கூட இயேசுவி னிடத்தில் வந்தான். அவன் நடந்து இயேசு கிறிஸ்துவின் சமுகத்தை அடைந்தவுடனே, இயேசு அவனைப் பார்த்து, “உன் பெயர் சீமோன். உன் தகப்பன் பெயர் யோனா" என்றார். அவர் வார்த்தை என்பதை அது நிரூபித்தது, ஏனெனில் வார்த்தையானது இருதயத்தின் நினைவு களையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறது. அவர் வார்த்தையாய் இருந்தார். 159. இவ்விதம் நடப்பதை பிலிப்புவும் கண்டான். அவன் ஒரு நாள் எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்று திரும்பி வந்தான். அவனுடன் அவனுடைய நண்பன் நாத்தான்வேலைக் கூட்டிக் கொண்டு வந்தான். அவன் நாத்தான்வேலிடம், “இந்தக் காரியங்கள் உண் மையிலே சம்பவிக்கின்றன. தேவனாகிய கர்த்தர் அவனைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார் என்று மோசே உரைத் தான் அல்லவா? இதோ அந்த மனிதன் இருக்கிறார். அவர் சீமோ னிடம் அவன் யாரென்றும், அவன் தகப்பன் யாரென்றும் கூறினார். அவர் கூறுவது உண்மையென்று நமக்குத் தெரியும். ஏனெனில் தேவன் அதை வார்த்தையில் உரைத்திருக்கிறார், அவர் அதை செய்ததன் மூலம் அது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவர் மேசியா என்பதை அது நிரூபிக்கிறது" என்றான் . 160. நாத்தான்வேல் நடந்து அவருடைய சமூகத்தை அடைந்த போது, இயேசு அவனைப் பார்த்து, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். 161. அவன், “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?" என்றான். 162. அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே , நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்" என்றார். அவர் தமது வார்த்தையை நிரூபித்தார். அவர் தேவனுடைய வார்த்தையை நிரூபித்தார். அவர் அவ்விதம் செய்தார். 163. கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீ, அவள்... நல்லது, அவள் கிணற்றிலிருந்து மொண்ட குடத்திலிருந்து அவர் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது, அவள், "யூதர்களாகிய நீங்கள் சமாரிய ஸ்திரீகளாகிய எங்களிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது வழக்க மில்லையே, ஏனெனில் நம்மிடையே எந்த தொடர்பும் இல்லையே" என்றாள். 164. அவர், “நீ யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய்" என்றார். அவள், “கிணறு ஆழமாயிருக்கிறதே" என்றாள். 165. இவ்விதமாக உரையாடல் தொடர்ந்து நடந்து கொண் டிருந்தது. முடிவில் அவளுக்கிருந்த தொல்லை என்னவென்பதை அவர் கண்டுபிடித்து விட்டார். அவர், “உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா" என்றார். அவள், "எனக்குப் புருஷன் இல்லை" என்றான். 166. அவர், "நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது நீ கூட வாழ்ந்து கொண்டி ருப்பவன் உனக்குப் புருஷனல்ல." என்றார். 167. அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். நானூறு ஆண்டுகளாக எங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியும் கூட இருக்க வில்லை, உமக்குத் தெரியும். நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வரும் போது, இப்படிப்பட்ட காரியங்களை நமக்கு அறிவிப்பார். அதுவே அவருடைய அடை யாளமாயிருக்கும்" என்றாள். 168. அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்று சொன்ன போது, அவர் தம்முடைய வார்த்தையை நிரூபித்தார். அவர். அவர் என்னவாயிருப்பதாக உரிமை கோரினாரோ, அதை நாம் நிரூபிக்கிறோம். அவர் மேசியா, தேவனுடைய குமாரன். 169. நாம் மேலும் காண்பது என்னவெனில், பெரும்பாடுள்ள இந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட போது, அவர் தேவனுடைய வார்த்தை என்பதை அது அவளுக்கு நிரூபித்தது. 170. இப்பொழுது... ஞாபகம் கொள்ளுங்கள், இன்றிரவு, இயேசு சொன்னார்... எபிரேயர் முதலாம் அதிகாரத்திலும்; அது எபிரேயர் 3ம் அதிகாரம் என்று நினைக்கிறேன்,. "அவர் இப்பொழுது பிரதான ஆசாரியராயிருக்கிறார்" என்றுரைக்கிறது (எபி. 3:1). நாம் வாழும் இக்காலத்தில் அவர் “பிரதான ஆசாரியராய் தேவனுடைய மகிமையில் பரலோகத்தில் வீற்றிருந்து, நமது பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடியவராயிருக்கிறார்." 171. “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார்” என்று எபி.13:8 உரைக்கிறது. அவர் அன்று இருந்தது போலவே இன்றும் அதே தேவனாய் இருக்கிறார். இன்றிரவு அவர் அதே தேவனாய் இருக்கிறார். 172. “நான் என் பிதாவினிடத்திற்குப்போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்; இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வான்” என்று யோவான் 14:12 உரைக்கிறது. பாருங்கள்? “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்." 173. மத்தேயு 28ல் அவர், “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட இருப்பேன்" என்று உரைத்திருக்கிறார். (யோவான் 14:19, மத்.28:20) 174. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராயிருக்கிறார். அவர் தமது வார்த்தையை நிரூபிக்க இன்றிரவு நின்று கொண்டிருக்கிறார். (என் நேரம் முடிந்து விட்டது). அவரால் நிரூபிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார். அந்த நாளுக்காக அவர் வாக்குத்தத்தம் பண்ணின அவருடைய வார்த்தையை அவர் அப்பொழுது நிரூபித்தார். அவர் ஏசாயாவின் வார்த்தைகளை நிரூபித் "தார். அவர் நோவாவின் வார்த்தைகளை நிரூபித்தார். அவர் மோசேயின் வார்த்தைகளை நிரூபித்தார். 175. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில் உலகம் சோதோம் நிலையில் இருக்கும் என்று அவர் முன்னுரைத்தார்.- ஓரி னப் புணர்ச்சிக்காரர்கள். இன்று உலகில் அது உள்ளதைப் பாருங்கள். நான் பயணம் செய்யும் உலகில் எல்லாவிடங்களிலும்; இங்கு மாத்திரமல்ல, எல்லாவிடங்களிலும். அது பயங்கரமாயுள்ளது. ஸ்வீடன் நாட்டில் வாலிபு ஆண்களும் பெண்களும் முழு நிர்வாண மாக பனி வழுக்கு விளையாட்டுக்குச் செல்கின்றனர். ஜெர்மனி, பிரான்ஸ் இன்னும் மற்றெல்லாவிடங்களிலும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நமக்கு இத்தகைய இழிந்தோர் உள்ளனர். இது ஒரு காலம். எனக்கு இங்கு திரும்பி வருவதற்கு ஒரு தருணம் கிடைத் தால், சில தீர்க்கதரிசன காரியங்களைக் குறித்து உங்களிடம் பேசி, நாம் வாழும் காலத்தை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். "பிள்ளைகள் பெற்றோரை ஆளுவார்கள்" என்று வேதம் உரைக்கிறது. 176. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... வார்த்தை . ( 177. ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள், ஆபிரகாமுக்கு ஒரு குமாரன் இருந்தான், அவன் தான் ஈசாக்கு, சாராளின் மரணத் துக்குப் பிறகு அவனுக்கு வேறு குமாரர் பிறந்தனர். அவனுக்கு நூற்று நாற்பத்தைந்து வயதான போது, அவன் வேறொரு ஸ்திரீயை மணந்தான். அவனுக்கு. குமாரத்திகளைத் தவிர" ஏழு குமாரர்கள் பிறந்தனர். ஏனெனில் தேவன். அவனுக்கு நூறு வயதான போது. அவனை ஒரு வாலிபனாக மாற்றினார். அவன் மறுபடியும் நாற்பத் தைந்து வயதுள்ளவனைப் போல் ஆனான். அப்பொழுது அவன் ... அது நமக்குத் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு அதைக் குறித்து நான் கலிபோர்னியாவிலுள்ள உங்களுக்கு பிரசங்கித்திருக்கிறேன். 178. இப்பொழுது நாம், ஆபிரகாமின் சந்ததி என்பது சாராளின் மூலம் இன சேர்க்கையினால் உண்டான சந்ததியாகிய ஈசாக்கு அல்ல - அவன் ஒரு பெரிய ஜாதியானான் - என்றும் அது வாக்குத்தத்தத்தினால் உண்டான இயேசு கிறிஸ்துவின் மூலம் தோன்றின ராஜரீக சந்ததி என்றும் விளங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த சந்ததியாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர் ராஜரீக சந்ததியை தோன்றப் பண்ணினார். ஓ, என்னே! இப்பொழுது நாம் ராஜரீக ஆசாரியராய், ராஜரீக ஜாதியாய், பரிசுத்த ஜாதியாய், தேவனுக்கு துதிகளை செலுத்திக் கொண்டிருக்கிறோம். உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை அவருடைய நாமத்தில் செலுத்திக் கொண்டி ருக்கிறோம். தேவன் தமது வார்த்தையை நிரூபித்தார், அவர் நம்மேல் பரிசுத்த ஆவியை ஊற்றினார். 179. "சோதோமின் நாட்களில் நடந்தது போல், மனுஷ குமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும்" என்று அவர் கூறியிருக் கிறார். நீங்கள் கவனித்தீர்களா? அவர் தேவ குமாரனிலிருந்து தாவீதின் குமாரனாவதற்கு சற்று முன்பு, அவர் மறுபடியும் மனுஷ குமாரனாக தம்மை வெளிப்படுத்துகிறார். நீங்கள் வேத வாக்கியங் களை கவனித்தீர்களா? 180. அவர் எப்பொழுதுமே, தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு முதலில் வெளிப்படுத்தாமல் எந்தக் காரியத்தை யும் செய்வதில்லை (ஆமோஸ் 3:7). அது முற்றிலும் உண்மை . அதுதான் அவருடைய வாக்குத்தத்தம். பாருங்கள்? அவர் ஒரு காரியத்தையும் செய்யார்... தேவன் பொய் சொல்ல மாட்டார். அவர் ஒரு காரியத் தைச் செய்வதற்கு முன்பு அதை முதலில் வெளிப்படுத்துகிறார். 181. இன்று நமக்குள்ள சூழ்நிலையைக் கவனியுங்கள். நாம் எங்கிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். நாம் நவீன சோதோமில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்வீர்கள். இந்த தேசம் அந்த நிலைக்கு வந்து விட்டது. அவர்களுக்கு நம்பிக்கை எதுவுமில்லை. இந்த தேசத்துக்கு அல்லது வேறெந்த தேசத்துக்கும் இரட்சிப்பே கிடையாது. அதற்கு அப்பால் நாம் இப்பொழுது வந்து விட்டோம். இதைக் குறித்து தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி விட்டன. தேவன், செம்மறியாடுகள் எங்கெங்கே உள்ளதோ, அவைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவையெல்லாம் ஒரு நாளில் உள்ளே வந்துவிடும். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். பாருங்கள். அந்த நிலையில், 182. இந்த ஜனங்களுக்கு நாம் ஜெபிப்பதற்கு முன்பு, உங்கள் விசுவாசத்தை சற்று நேரம் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று உங்களை, நீங்கள் சகோதரன் அல்லது சகோதரி என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இங்கிருந்து நாம் வெளியேற வேண்டியதில்லை என்று எனக்குத் தெரியும். இப்பொழுது நான் ஜெபவரிசையை தொடங்கப் போகிறேன். இங்கிருந்து போக விருப்பமுள்ளவர்கள் அப்பொழுது போய்விடலாம். பாருங்கள்? ஜெபவரிசையில் இருக்க விருப்பமுள்ளவர்கள் இங்கிருக்கலாம். உங்கள் சகோதரன் என்ற முறையில், உங்களுக்கு ஒன்றை நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். 183. லூக்கா 17:30ல் இயேசு முடிவு காலத்தைக் குறித்து என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள், அவர்கள் எப்படி நோவாவின் காலத்தில் இருந்ததைப் போல் இருப்பார்கள் என்று. அதன் பிறகு அவர், "சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும்" என்றார். அது மறுபடியும் மனுஷகுமாரன், தேவ குமாரன் அல்ல, “மனுஷகுமாரன்", பாருங்கள், அது மல்கியா 4ஐ கொண்டு வருகிறது. இந்த மற்ற தீர்க்கதரிசனங்களும், அது எவ்விதமாக இருக்கும் என்று முன்னுரைத்தவை நிறைவேறுகின்றன. அவர் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். அது உண்மை . 184. கவனியுங்கள், அவர் எவ்விதம் மாம்சமான யாவர் மேலும் தம்முடைய ஆவியை ஊற்றுவார் என்றும், என்ன நடக்கப் போகிறதென்றும், வரங்கள் எவ்விதம் திரும்ப அளிக்கப்படும் என்றும் அவர் முன்னுரைத்ததை நிரூபித்து வருகிறார். “உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். வானத்தில் அடையாளங்களைக் காட்டுவேன்" (யோவேல் 2:28-30). 185. சகோ. லீ வேயிலுக்கு சொந்தமான புகைப்படம் ஒன்று என்னிடம் உள்ளது. அன்றொரு நாள் மலையின் மேல் என்ன நடந்ததென்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அப்பொழுது, பள்ளிக்கூடப் பிள்ளைகள் வெளியே வந்து அதைக் கண்டனர். அவை ஏழுமுத்திரைகளைத் திறந்து கொடுத்தன. நான் மலையின் மேல் ஜெபம் செய்து கொண்டிருந்தபோது, புனல் (funnel) வடிவத்தில், அக்கினி கீழே இறங்கி வந்து, மேலே சென்று வெடித்து, மறுபடியும் கீழே இறங்கி வந்தது. அதை பள்ளிச் சிறுவர் கண்டனர். நான் ஜனங்களிடம் போய் என்ன சொல்ல வேண்டும் என்று அப்பொழுது தான் அவர் என்னிடம் கூறினார். நாம்... அது இங்குள்ளது, டூசானில் உள்ள பள்ளிக்கூடங்கள்... அது இங்கிருந்து மேலே ஆகாயத்தில் சென்றது. 186. விஞ்ஞானம் அதைப் படம் எடுத்து, அது என்னவென்று கேள்வி கேட்கத் தொடங்கினது. அவர்கள், "அது எங்கே உள்ளது? என்ன நடந்தது?" என்று கேட்டனர். அவர்களால் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை, பாருங்கள். ஓ, அது ஒரு மூலையில் நடக்கவில்லை, அவர்களுடைய இருண்ட மனச்சாட்சியே. அவர்கள் ஒருபோதும் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள். இயேசு இவ்வுலகில் இருந்தபோது, கோடிக்கணக்கான ஜனங்கள் அவர் பூமியில் இருந்ததை அறிந்து கொள்ளவில்லை. ஆம், இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள், கோடிக் கணக்கான மக்கள். 187. ஆனால் அது யாருக்காக அனுப்பப்பட்டதோ, அவர்கள் புரிந்து கொள்வார்கள். “ஞானவான்கள் தங்கள் தேவனை அந்நாளில் அறிந்து கொண்டு அதை தேடிக் கண்டடைவார்கள். அதுவே நாம் இப்பொழுது வாழ்ந்து • கொண்டி ருக்கிற நேரம் என்பதை உணருகிறோம். 188. சோதோமைப் பாருங்கள், என்ன நடந்ததென்று பாருங்கள். அவர், "சோதோமின் நாட்களில் நடந்தது போல" என்றார். அப்பொழுது ஒரு கூட்டம் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கியிருந்தனர். அதை நாம் நம்புகிறோம். அதுவே ஆபிகாமும் அவனைச் சேர்ந்தவர்களும். அங்கு, வெதுவெதுப்பான கூட்டம் சோதோமில் இருந்தது, லோத்து, பாதி பின்வாங்கிப் போய், இருப்பினும் ஒரு விசுவாசி. மூன்று வகுப்பினர். 189. எப்பொழுதுமே மூன்று வகுப்பினர் உள்ளனர்: காம், சேம், யாப்பேத்தின் ஜனங்கள். மற்றும் விசுவாசிகள், பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள். அவர்கள் எல்லாவிடங்களிலும் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் உள்ளனர். எல்லா விடங்களிலும் அவர்களை நீங்கள் காணலாம். அந்த வகுப்பினர். இன்னும் இங்குள்ளனர், அவர்களை நீங்கள் பாகுபடுத்த வேண்டும். நீங்கள் அதற்கான வேத வாக்கியங்களை எடுத்துக் கொண்டால், அவை மிகவும் நன்றாக இணையும். – 190. இதை கவனித்துக் கேளுங்கள். இன்றிரவு நாம் ஸ்தான ரீதியாகவும், தீர்க்கதரிசின. ரீதியாகவும் எந்நிலையில் உள்ளோம் என்பதைப் பாருங்கள். உலகம் சோதோமிய நிலையில் உள்ளதென்று நாம் ஒவ்வொருவரும் அறிவோம். 191. இஸ்ரவேலரைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நமக்குத் தெரியும். இஸ்ரவேலர் தங்கள் சொந்த நாட்டில் உள்ளனர். நாம் தேசியப் பிரகாரமாக எங்கிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், இஸ்ரவேல் நாட்டை கவனியுங்கள், அது எங்குள்ள தென்று: 192. சபை எந்நிலையில் உள்ளது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஸ்திரீகள் நடந்து கொள்ளும் விதத்தைக் கவனியுங்கள். அவள்தான் சபை. அவளைப் பாருங்கள், ஒழுக்கங் கெட்டவளாகவும், கண்ணியமற்றவளாகவும்; கவனியுங்கள், சபை எங்குள்ளது என்று. அதை கவனித்து வாருங்கள். பாருங்கள், பாருங்கள், ஸ்திரீகளை சற்று கவனியுங்கள். உங்கள் ஸ்திரீகள் எவ்வாறு நிலைகுலைந்து மாசுபட்டிருக்கின்றனர் என்பதை காண்கிறீர்கள், அப்படித்தான் உங்கள் சபையும் உள்ளது, பாருங்கள், ஒரு எடுத்துக்காட்டு. 193. இஸ்ரவேல் எங்குள்ளது என்பதை நீங்கள் கவனிப் பீர்களானால், நாம் எந்த நேரத்தில் இருக்கிறோம் என்பதை நீங்கள் காண்பீர்கள். பாருங்கள், இந்த அடையாளங்களையும் அற்புதங்களையும் கவனியுங்கள். உங்கள் கண்கள் திறக்கப்பட்டிருந்தால் நாம் எங்கிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். 194. ஸ்தான ரீதியாக நாம் எங்கிருக்கிறோம் என்பதை கவனியுங்கள், உலகம் சோதோம் நிலையில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், "நடந்தது போல". அந்நாளில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கி சிலர் இருந்தனர் - ஆபிரகாமும் சாராளும். அவர்கள் ஆபிரகாமின் குழுவில் இருந்து கொண்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வர எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சோதோமில் இல்லை. ஆனால் அந்த நேரத்தில், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு சற்று முன்பிருந்த கடைசி அத்தியாயத்தின் போது, மூன்று பேர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தனர். இரண்டு தூதர்களும் தேவனும். அவர்கள் இறங்கி வந்து, கர்வாலி மரத்தின் கீழே ஆபிரகாமுடன் பேசினர். அது சரியா? (சபையோர் "ஆமென்" என்கின்றனர் - ஆசி). அவர்களில் இரண்டு பேர் சோதோமுக்குச் சென்று அதன் பாவங்களுக்கு விரோதமாக கூக்குரலிட்டனர். அது புறஜாதி உலகம் எரிவதற்கு சற்று முன்பு நடந்தது. அனைத்து சோதோமும் அப்பொழுதே அழிந்தது. ஒரு சிலர் மாத்திரம் வெளியே இழுக்கப்பட்டனர் - லோத்தும் அவனுடைய இரு குமாரத்திகளும். அவன் மனைவி வெளியேற முடியவில்லை, அவள் திரும்பிப் பார்த்தாள். சபை அந்த நிலையில் நின்று கொண்டிருக்கிறது என்று உங்களுக்குக் காண்பிக்க எனக்கு நேரமிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! நீங்கள் இப்பொழுது கவனிக்க விரும்புகிறேன். 195. ஆனால் ஒரு மனிதன் பின்னால் நி விட்டார். அவர் ஆபிரகாமுடன் பேசி, அவனுக்கு ஒரு அடையாளத்தைக் காண் பித்தார். ஆபிரகாம் தேவனை அநேக மகத்தான அடையாளங்களில் கண்டிருக்கிறான். அதை நாம் விசுவாசிக்கிறோம், அல்லவா? (சபை யோர் “ஆமென்' என்கின்றனர் - ஆசி). குமாரன் வருவதற்கு சற்று முன்பு. ஆனால் குமாரன் வெளிப்படுவதற்கு முன்பு அவனுக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது. 196. ஏனெனில், குமாரன், உண்மையான குமாரன், ஆபிர காமின் விசுவாசத்தின் மூலம் தேவனுடைய குமாரனாகிய இயேசுவே, பாருங்கள். நாம் ஆபிரகாமின் சந்ததியாதலால், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாயிருக்கிறோம். நாம் ஆபிரகாமின் சந்ததியார்.. 197. இந்த குமாரன் வருவதற்கு சற்று முன்பு என்ன நடந்ததென்று இப்பொழுது கவனியுங்ள். பின்னால் தங்கிவிட்ட இவர், அவருடைய முதுகு கூடாரத்தை நோக்கி நின்றவராய் ஆபிரகாமுடன் பேசி, "ஆபிரகாமே” என்றார். அதற்கு ஒரு நாளுக்கு முன்பு அவன் ஆபிராம் என்னும் பெயர் கொண்டிருந்தான். அவர், “ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?” என்றார் - சாராய் அல்ல, சாராள், ராஜகுமாரத்தி. “உன் மனைவி சாராள் எங்கே?” “அவள் உமக்குப் பின்புறமாய் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 198. அவர், “நான் உனக்குச் செய்த வாக்குத்தத்தத் தின்படியே நிச்சயமாய் உன்னிடத்தில் திரும்ப வருவேன், அதாவது, உற்பவ காலத்திட்டத்தில். அப்பொழுது சாராளுக்கு வழக்கமாக இருந்த ஜீவனின் நேரம் தொடங்கும்" என்றார். 199. அப்பொழுது ஏறக்குறைய நூறு வயது கிழவியான சாராள் கூடாரத்திலிருந்து இதைக் கேட்டபோது நகைத்தாள். பாருங்கள், அவள் தன் உள்ளத்திலே நகைத்து, “அந்த மனிதன் உரைத்தது எப்படி சரியாயிருக்க முடியும்? பாருங்கள், நான் கிழவியும் அங்குள்ள என் ஆண்டவன் முதிர் வயதுள்ளவராயிருக் கிறோமே, அநேக ஆண்டுகளாக எங்களுக்கிடையே இருந்த குடும்ப விவகாரம் நிறுத்தப்பட்டு விட்டதே. என் ஆண்டவனுடன் எனக்கு மறுபடியும் இன்பம் உண்டாயிருக்குமோ? அவர் முதிர் வயதுள் ளவராயிருக்க, நான் கிழவியாயிருக்க, குழந்தை பெறும் பருவம் கடந்து விட்டதே, பால் சுரப்பிகள் வற்றிப் போய் விட்டதே. எனக்கு மறுபடியும் இன்பம் உண்டாவது எப்படி?” என்றாள். 200. அந்த மனிதன், தன் பின்புறம் கூடாரப் பக்கமாய் திரும்பி இருந்தவராய் "சாராள் நகைத்து, 'இது எப்படி நடக்கும்?' என்று சொல்வானேன்?" என்றார். அது என்ன? சிந்தனையைப் பகுத்தறிதல், தீர்க்கதரிசனம்! பாருங்கள், பாருங்கள், அதை தான் அவன் கண்டான், 201. அவர், “அது திரும்ப வரும், அப்பொழுது மனுஷகுமாரன்" என்றார். அங்கிருந்தவர் மனுஷகுமாரனே. ஆபிரகாம் அவரை ஏலோகிம் "தேவனாகிய கர்த்தர்” என்றழைத்தான். அது உண்மை யென்று எவருக்குமே தெரியும். ஏலோகிம் என்பது தேவனாகிய கர்த் தர். "ஆதியிலே ஏலோகிம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்", சர்வமும் போதுமானதாய் இருக்கிறவர். மாம்சமான மனுஷ குமாரன், அவர் அந்த நேரத்தில் அங்கு மாம்சத்தில் நின்று கொண்டு - தியோல் பனியைப் போல் - அவருக்குப் பின்புறம் இருந்த கூடாரத்தில் சாராள் என்ன கூறினாள் என்பதை பகுத்தறிந்தார். அவர் வாக்களித்துள்ளார். கவனித்துக் கொண்டிருங்கள், ஆபிரகாமின் ராஜரீக சந்ததியார் அதைக் காண்பார்கள் என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. 202. ஆனால் லோத்தைக் கவனியுங்கள், அவனிடத்திலும் ஒரு தூதன் சென்றான். இரண்டு பேர் அங்கு சென்றனர். ஒருவன் அங்கு சென்றான், வேறொருவன் அவனுடன் கூட சென்றான். அவர்கள் பிரசங்கம் செய்து, ஜனங்களை வருங்கோபத்திலிருந்து தப்பியோட அழைத்தனர். 203. ஸ்தான ரீதியாக நோக்கும்போது, இயேசு அந்த வாக்குத்தத்தத்தைச் செய்த அந்த நாளிலிருந்து இந்நாள் வரைக்கும் உலகம் இப்பொழுதுள்ள நிலையில் இருந்ததில்லை. கட்டிடத்தில் ஒருக்கால் இருக்கும் எந்த வரலாற்றாசிரியரையும் நான் கேட்க விரும்புகிறேன், அல்லது இந்த ஒலிநாடாவை எப்பொழுதாவது நீங்கள் கேட்க நேரிட்டால், எனக்கு தயவு செய்து எழுதித் தெரிவியுங்கள். நான் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக சரித்திரத்தை - வேதாகம சரித்திரத்தை - படித்துக் கொண்டு வருகிறேன், அப்படிப்பட்ட ஒரு நபர் ஏழு சபை காலங்களின் போது இருந்த சபை சரித்திரத்தில் இருந்ததாக நான் காணவில்லை. இப்பொழுது நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம், அது நமக்குத் தெரியும். 204. 'காம்' (h-a-m) என்பதுடன் முடிவு பெறும் ஒரு பெயரைக் கொண்ட ஒரு செய்தியாளன் சபை காலம் முழுவதிலும் இந்நாள் வரைக்கும் செல்லவில்லை. கிரகாம், பில்லி கிரகாம் (ஆங்கிலத்தில் Billy Graham - தமிழாக்கியோன்) மூடி, ஃபின்னி, சாங்கி, நாக்ஸ் லூத்தர் போன்றவர் இருந்தனர், ஆனால் ஒருக்காலும் ஒரு 'காம்" இருக்கவில்லை, "ஜாதிகளுக்குத் தகப்பன்". இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவர் கிரகாம், ஆறு எழுத்துக்கள் (ஆங்கிலத்தில் G-r-a-h-a-m ஆறு எழுத்துக்களைக் கொண்டுள்ளது - தமிழாக்கியோன்). ஆனால் ஆபிரகாம், ஏழு எழுத்துக்கள் (ஆங்கிலத்தில் A-b-r-a-h-a-m ஏழு எழுத்துக்களைக் கொண்டுள்ளது - தமிழாக்கியோன்). கவனி யுங்கள், அங்கு பில்லி கிரகாம் உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் சென்று, "வெளியே வாருங்கள், வருங்கோபத்துக்கு தப்பியோடுங்கள்" என்று சோதோமிலிருந்து வெளியே அழைத்துக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில், ஊழியக்களத்தில் நீதிமானாக்கப்படும் தல் என்னும் வார்த்தையின் பேரில் தேவனைப்பற்றிக் கொண்டுள்ளவர் பில்லி கிரகாமைப் போல் வேறு எவரும் இல்லை. அவரால் அதை மிகவும் நன்றாக எடுத்துக் கூற முடியும். அவர் அத்தகைய வேத சாஸ்திரபண்டிதர் அல்ல. அவர் வேத சாஸ்திர பண்டிதர் என்று நினைக்கிறேன், ஆனால் அவர் வல்லமையாய் பிரசங்கிக்கக் கூடிய போதகர் (teacher) அல்ல. ஆனால் தேவன் அவருடன் இருக்கிறார். அந்த மனிதன் அங்கு நின்று கொண்டு, ஞாயிறு பள்ளி பாடம் போல அதை கற்பித்து, ஜனங்களை அப்படியே வசீகரித்து விடுவார். அவர் இந்த நேரத்துக்கான தேவனுடைய ஊழியக்காரன். யாருக்கு? சோதோமிலுள்ள மாமிசப்பிரகாரமான சபைக்கு. 205. ஆனால் அந்த விதமான ஸ்தாபன அமைப்பில் இல்லாத ஆவிக்குரிய சபை ஒன்றுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெளியே அழைக்கப்பட்ட குழு. அவர்கள் செய்தியை ஏற்றுக் கொண்டனர், செய்தியாளனையும் கூட. அது என்ன? இருதயத்தின் சிந்தனைகளைப் பகுத்தறிதல். தேவன் எப்பொழுதுமே தமது வார்த்தையை நிரூபிக்கிறார். 206. ஜெபம் செய்வோம். அன்புள்ள பரலோகப் பிதாவே. தீர்மானங்கள் செய்ய வேண்டிய இந்த கடினமான நேரத்தில் நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் நமது ஆண்டவர் வருவார் என்று எங்களுக்குத் தெரியாது. காலங்கள் தோறும் உம் முடைய தீர்க்கதரிசிகளின் மூலம் நீர் உரைத்த தீர்க்கதரிசனங்கள் இப்பொழுது நிறைவேறி வருகிறதை நாங்கள் காணும்போது, உம்மை நான் எவ்வளவாய் துதிக்கிறேன்! திறனுள்ள மனிதர், வேத சாஸ்திரத்தில் திறனுள்ள மனிதர் அந்த குழுக்களில் இருந்து கொண்டு, உலகத்தின் தந்திரங்களுக்கும் அவிசுவாசிகளின் தந் திரங்களுக்கும் தைரியமாகவும் தீரமாகவும் எதிர்த்து நின்று போராடி வேதவாக்கியங்களைக் கொண்டு உம்முடைய வார்த்தை உண்மை என்று எவ்வித சந்தேகமுமின்றி நிரூபித்து வரும் இவ்வேளையில், உமது வருகைக்காக காத்திருந்து, உரைக்கப்பட்டுள்ள தீர்க்க தரிசனங்கள் நிறைவேறும் என்று விசுவாசித்துக் கொண்டிருக்கிற எங்கள் மத்தியில் நீர் நடந்து, என்ன நிறைவேறும் என்று நீர் உரைத்தீரோ, அதை செய்து காட்டி, உமது வார்த்தை உண்மை யென்பதை நிரூபித்து, நீர் செய்வதை நாங்கள் கண்டு களிகூரும்படி செய்து வருகிறீர். நித்தியமான தேவனே, வியாதிப்பட்ட உம்முடைய பிள்ளைகள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். 207. கிரியை செய்வதற்கு இன்னும் எவ்வளவு காலம் நமக்கு உண்டென்று எனக்குத் தெரியாது. சாயங்கால சூரியன் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீர் “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்" என்று தீர்க்கதரிசிக்கு வாக்களித்திருக்கிறீர். கிழக்கில் எழுந்த அதே சூரியன் மேற்கில் மறைகின்றது என்று நாங்கள் காண்கிறோம். நாகரீகமும் சூரியனுடன் பயணம் செய்து. இப்பொழுது நாங்கள் மேற்கு கரையில் இருக்கிறோம். சுவிசேஷமும் நாகரீகத்துடன் பயணம் செய்தது. இப்பொழுது, பிதாவே, இதுவே சுவிசேஷத்தின் முடிவு என்றும், நேரத்தின் முடிவு என்றும். காலத்தின் முடிவு என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். அது நித்தியத்துக்குள் மறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், குமாரன் வெளியே தோன்றுவார் என்றும், மனுஷகுமாரன் வெளிப்படுவார் என்றும் நீர் வாக்களித் திருக்கிறீர். கடைசி நாளில் இது சம்பவிக்கும். சாயங்கால வெளிச் சம் வந்து விட்டது, பிதாவே. அதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அது தாழ்மையாகவும், நீர் அதை பல சமயங்களில் மிகவும் எளிமையாகவும் செய்கிறபடியால், அது மகத்தான, ஆழ்ந்த சிந்தனையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் தலைகளுக்கு மேல் சென்று விடுகிறது, ஆனால் கற்றுக் கொள்ளக் கூடிய பால கருக்கு அது வெளிப்படுகிறது. 208. தேவனே, இன் றிரவும் நீர் அவ்விதம் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இங்கு வியாதியாயுள்ள உமது ஏழை பிள்ளைகள் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் காணவும். அவர்கள் சுகமடைந்து இவ்விடம் விட்டுச் சென்று, நாளை புதிய பலமுள்ள சரீரங்களை மறுபடியும் பெறும்படி செய்யும். கடைசி நபர் மந்தையில் வரும் வரைக்கும் இவர்கள் செய்தியை ஒருவரிடத்திலிருந்து மற்றவரிடம் கொண்டு செல்லத்தக்கதாக இதை அருளுவீராக. கடைசி நபர் வந்த பிறகு கதவு அடைக்கப்படும். எங்களுக்குதவி செய்யும், அன்புள்ள தேவனே. இவையனைத்தையும் உமது முன்னிலையில் வைத்து, எனக்காக இன்னும் ஒருவிசை செய்ய வேண்டுமென்று இன்றிரவு உம்மிடம் கேட்கிறேன், பிதாவே. 209. அன்றிரவு ஜனங்கள் இதை அதிகமாக கவனிக்கவில்லை என்பது போல் தோன்றினது. கர்த்தாவே, இன்றிரவு அது மறுபடியும் நிகழட்டும் என்று ஜெபிக்கிறேன் . பேசுவதற்கு எனக்காக அளிக்கப்பட்டிருந்த நேரத்தை நான் மிஞ்சிவிட்டேன், இதை செய்ய இன்னும் எங்களுக்கு எவ்வளவு நேரம் உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. எனவே பிதாவே, என் ஜெபத்துக்கு செவி கொடுப்பீரா? இன்றிரவு இங்கு உட்கார்ந்திருக்கிற ஆவியினால் நிறையப் பெற்ற இந்த தேவபக்தியுள்ள மனிதரின், ஸ்திரீகளின் ஜெபத்துக்கு செவி கொடுப்பீராக. அவர்கள் விசுவாசிகள், கர்த்தாவே. அவர்கள் மத்தியில் உம்மால் கிரியை செய்ய முடியும். நாங்கள்... "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்" என்னும் உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்த வேண்டுமென்று : ஜெபிக்கிறேன். இயேசுவே, நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்பதை நிரூபிப்பதற்காக அது மறுபடியும் நிகழ்வதாக. இதை நான் தேவனுடைய மகிமைக்கென்று அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 210. இப்பொழுது, சிறிது நேரத்துக்கு, இங்குள்ள எத்தனை பேருக்கு ஜெப அட்டைகள் உள்ளன என்பதை அறிய விரும்புகிறேன். ஜெப அட்டைகள் வைத்துள்ள ஒவ்வொருவரும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது, பொதுவாக, ஏறக்குறைய எல்லோருமே என்று எண்ணுகிறேன். 211. வியாயதியாயிருந்தும் ஜெப அட்டை பெற்றிராத மக்கள் எத்தனை பேர் உள்ளனர்? "என்னிடம் ஜெப அட்டை இல்லை, ஆனால் நான் வியாதிப்பட்டிருக்கிறேன். எனக்குத் தேவையுண்டு' என்று சொல்லி உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? 212. சற்று நேரம் பயபக்தியாயிருக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடம் பேசுவதற்கு எனக்கு மிகவும் பிரியம்! அதுவே எனக்கு எப்பொழுதும் உள்ள தொல்லை. நான் நீண்ட நேரம் பேசி விடுகிறேன். இங்கு நீங்கள் வருவதற்கு முன்பாக, நான் சொன்னது சத்தியம் என்பதை தேவன் நிரூபிப்பார் என்று நம்புகிறேன். அவர் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். 213. இங்கு உட்கார்ந்திருக்கிற வியாதியஸ்தர் எத்தனை பேருக்கு, உங்களைக் குறித்து எனக்கு ஒரு காரியமும் தெரியாது என் பது தெரியும், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அதை பாருங்கள். சரி. 214. இப்பொழுது ஜெப அட்டை வைத்திராதவர்கள் அவ்விதம் செய்யுங்கள். ஜெப அட்டை உள்ளவர்கள் மேலே அழைக்கப்படுவார்கள். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருங்கள். 215. "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று வேதம் உரைக்கிறது. “அவர் மகாபிரதான ஆசாரியராய் அங்கு உட்கார்ந்து கொண்டு, நாம் பண்ணின அறிக்கையின் பேரில் வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்" என்று அவர் கூறியுள்ளார். அவர் நமக்கு பிரதான ஆசாரியராக வேண்டுமானால், நாம் முதலில் அறிக்கை செய்ய வேண்டும், ஏனெனில் நமது அறிக்கையின் பேரில் தான் அவர் வேண்டுதல் செய்கிறார். அது சரியா, ஊழியக்கார சகோதரர்களே? (ஊழியக்காரர் "ஆமென்” என்கின்றனர் - ஆசி). பாருங்கள், நமது அறிக்கையின் பேரில் தான், அவர் யாரென்றும் அவர் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்றும் நாம் செய்கிற அறிக்கையின் பேரில்தான் அவர் வேண்டுதல் செய்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதன் பேரில் அல்ல, அவர் ஏற்கனவே என்ன செய்து விட்டார் என்பதன் பேரில். அவர் அதை செய்து விட்டார் என்று நாம் அறிக்கை செய்ய வேண்டும். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமானோம்." 216. இப்பொழுது, பரலோகப் பிதா அறிந்திருக்கிறார். இப்பொழுது உங்களை நான் காண்கையில், ஒஹையோவிலிருந்து வந்துள்ள என் அருமை நண்பரும் அவருடைய மனைவியும் இங்கு • உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன் - திரு. டெள அவர்களும் அவருடைய மனைவியும். அவர்களுக்கு இரண்டு மூன்று இருக்கைகள் தள்ளி சங்கை ப்ளேர் உட்கார்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரை நேற்றிரவு நான் சந்தித்தேன். இந்த விளக்குகளின் வெளிச்சம் என் கண்ணைக் கூசுவதால், உங்களை என்னால் நன்றாக காண முடியவில்லை, கூடியுள்ளவர்கள் மேல் இருளாயுள்ளது. 217. நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உங்கள் தேவைகளை உங்கள் இருதயத்தில் வைத்துக் கொண்டு, நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய நமது பிரதான ஆசாரியரைக் கேளுங்கள். 218. உங்களை எனக்குத் தெரியாது என்னும்போது, நீங்கள் என்னை எல்லாவிடங் களிலும் தொடலாம், அது உங்கள் சகோதரனையோ, உங்கள் கணவனையோ, உங்கள் போதகரையோ அல்லது வேறு யாரையோ தொடுவது போன்றது. அதனால் ஒரு உபயோகமும் இல்லை. ஆனால் நீங்கள் அவரைத் தொடுவீர்களானால், நாம் உண்மையில் அவருடைய ஆவியுடன் இணைந்திருப்போமானால், அப்பொழுது அவரைத் தொடுவதற்கு உங்கள் விசுவாசத்தை அவர் உபயோகித்து, ஒரு வரத்தினால் உங்களிடம் பேசி உரைப்பார். 219. பாருங்கள், இங்குள்ள இந்த ஒலிபெருக்கி, அதன் வழியாக ஒரு குரல் பேசாவிட்டால், ஊமையாக இருக்கும். ஒரு குரல் அதன் வழியாக பேச வேண்டும். யாரும் பேசாவிட்டால், அது மெளனமாக இருக்கும். அது போன்று எந்த ஒரு நபரும், தேவன் அவர் மூலம் பேசாவிட்டால், இப்படிப்பட்ட காரியங்களில் மெளனமாகவே இருப்பார். 220. இப்பொழுது நீங்கள் ஜெபித்துக் கொண்டிருங்கள், நான் கூறின இந்த காரியங்கள் உண்மைதானா என்று பார்ப்போம். அவ்விதம் இருக்க தேவன் உதவி செய்வாராக! அவர் அவ்விதம் நிச்சயம் செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர் செய்வார் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். அவர் இதுவரை என்னைக் கைவிட்ட தில்லை - இத்தனை ஆண்டுகளாக, உலகம் முழுவதிலும், எல்லா விதமான தேசங்களிலும், லட்சக்கணக்கானவர் மத்தியிலும். அவர் இதுவரை என்னைக் கைவிட்டதில்லை. இங்கு நான் நின்று கொண்டி ருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அவர் இப்பொழுதும் என்னைக் கைவிடமாட்டார். 221. நீங்கள் சற்று நேரம் பயபக்தியுடன் அமர்ந்திருக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இன்னும் சிறிது நேரத் தில் கூடியிருப்பவர்களை அனுப்பி விட்டு, வியாதியஸ்தருக்காக ஜெபிக்க போகின்றோம். 222. இங்குள்ள விசுவாசிகள் என்னைப் பாராமல், விசுவா சிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். "இந்த மனிதன் கூறினது வேதப் பூர்வமானது. அவர் கூறினதுபோல், நாம் காலத்தின் இறுதியை அடைந்து விட்டோமா என்று எனக்குத் தெரியவில்லை. அது உண்மையாயிருக்குமானால், அது நடந்தே தீரும். அவருடைய வார்த்தைகள் ' தேவனுடைய வார்த்தையாயிருக்குமானால்; அவரு டைய வார்த்தைகள் தவறி விடும், ஆனால் தேவனுடைய வார்த்தை களோ ஒருபோதும் தவறாது" என்று சொல்லுங்கள். 223. தேவன் தமது வார்த்தையை ஆதரிப்பதற்கு கடமைப் பட்டவராயிருக்கிறார், அவர் அதை நிரூபிப்பார், அவர் அதை நிரூ பிப்பார். “என்னை விசுவாசிக்கிறவன்". இது கடைசி காலம் என்று அவர் நிரூபிப்பார். என்ன நடக்கும் என்பதை அவர் நிரூபித்தார். இதுதான் நடக்கவிருக்கிறது என்பதையும் அவர் நிரூபித்தார். 224. இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஆபிரகாமும் அவனைச் சார்ந்தவர்களும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வரும் வரைக்கும், வேறெந்த அடையாளத்தையும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை. அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? (சபையோர் "ஆமென்" என்கின்றனர் - ஆசி). சிந்தனைகளைப் பகுத்தறிதலின் அந்த அடையாளம்! ஆபிரகாமின் ராஜரீக சந்ததி யாரே, இதை உங்களிடம் கூற விரும்புகிறேன், கர்த்தர் உரைக்கிற தாவது, "நீங்கள் உங்கள் கடைசி அடையாளத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள்". அது வேதப்பிரகாரமாயும் என் இருதயத் தில் உள்ள தேவனுடைய வெளிப்பாட்டின் பிரகாரமாயும் அமைந் துள்ளது, அது உண்மையென்று அந்த வெளிப்பாடு அறிவிக்கிறது. நீங்களும் அது உண்மையென்று விசுவாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 225. இப்பொழுது நீங்கள் விசுவாசியுங்கள். விசுவாசிக்கிற ஒவ்வொருவரும், "கர்த்தராகிய இயேசுவே, உம்மை நான் தொடட்டும். என் இருதயத்தில் எனக்கு ஒரு தேவையுள்ளது. என்னைக் குறித்து சகோ. பிரான்ஹாமுக்கு ஒன்றுமே தெரியாது என்று நான் அறிவேன். அந்த மனிதனை எனக்குத் தெரியவே தெரியாது. அவருக்கும் என்னைத் தெரியாது. ஆனால் நீர் அறிந்திருக்கிறீர். அவர் என்னிடம் உண்மையை உரைத்திருந்தால், இது நடக்கும்' என்று கூறுங்கள். நீங்கள் சற்று நேரம் அசையாதிருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் உண்மையில்... 226. பாருங்கள், நீங்கள் ஆவி. அவருடைய வார்த்தை நிறைவேறுவதற்காக, இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் என் கட்டுக்குள் எடுத்துக் கொள்கிறேன். 227. இப்பொழுது பயபக்தியாயிருங்கள் ... ஜெபித்துக் கொண்டிருங்கள். அவரை நோக்கிப் பார்த்து, “கர்த்தாவே, அதை நான் விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும்" என்று கூறுங்கள். 228. இப்பொழுது தொடங்குவோம். இங்குள்ள கட்டிடத்தின் ஏதாவதொரு பாகத்தில் என் கவனத்தை நான் செலுத்த வேண்டும், பாருங்கள், நீங்கள் அநேகம் பேராயிருக்கிறீர்கள், நீங்கள் ஒவ் வொருவரும் ஒரு ஆவி. 229. என்னால் முடியாது. நீங்கள் “என்னைக் குறித்து என்ன?" என்று கேட்கலாம். என்னால் உங்களிடம் கூற இயலாது. அது இராஜாதிபத்தியமானது. தேவனுடைய கிரியைகள் அனைத்துமே இராஜாதிபத்தியமாய் உள்ளது. இன்றிரவு இந்த மேடையைக் கடந்து செல்கிறவர் அநேகர் சுகமடையக் கூடும், அநேகர் ஒருக்கால் சுகமடையாமலும் போகலாம். அது அனைத்தும் தேவனுடைய இராஜாதிபத்தியத்தில் உள்ளது. என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கு யார் கூற முடியும்? அப்படி ஒருவருமே இல்லை. அவர் தமது சொந்த சித்தத்தின்படி, தமது சொந்த திட்டத்தின்படி, கிரியை செய்கிறார். 230. ஆனால் நீங்கள் விசுவாசியுங்கள். தாழ்மையாயிருங்கள், பயப்படாதீர்கள். தேவனை அணுகி, “கர்த்தராகிய தேவனே, அதை நான் விசுவாசிக்கிறேன்" என்று சொல்லுங்கள். பாருங்கள்? . "உம்முடைய வஸ்திரத்தை நான் தொடட்டும். எனக்கு இன்னின்னது தேவையாயுள்ளது. அந்த சகோதரனுக்கு என்னைத் தெரியாது, என் தேவை என்னவென்றும் தெரியாது, ஆனால் நீர் செய்தவைகளை எங்களுக்கு எடுத்துக் கூறி, நீர் இன்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று அவர் கூறுகிறார்" என்று சொல்லுங்கள். 231. மேடையிலுள்ள சகோதரராகிய நீங்கள் அதற்கு விலக்கு அல்ல. என் சகோதரரே, கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நீங்கள் என் உடன் ஊழியக்காரர் என்னும் முறையில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மரித்துப் போய் இவ்வுலகை விட்டுப் போக வேண்டியவன் என்னும் உணர்வோடு, உங்களிடம் எனக்குத் தெரிந்த வரையில் நேர்மையாகப் பேசுகிறேன். நாம் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டும். நான் கூறுபவைகளுக்கு நியாயத்தீர்ப்பின் நாளிலே நான் கணக்கு கொடுக்க வேண்டியவனாயிருக்கிறேன். அது எனக்கு நன்றாகத் தெரியும், மிகவும் நன்றாகத் தெரியும். என்னுடன் நின்று கொண்டு எனக்குதவி செய்யும் மனிதராகிய உங்களை நான் பாராட்டுகிறேன். தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம் என்னால் முடிந்தவரையில் உங்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நான் ஜெபித்துக் கொண்டு அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 232. இங்குள்ள எத்தனை பேர், புகைப்படத்திலுள்ள அந்த ஓளியைக் கண்டிருக்கிறீர்கள்? அந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (சபையோர் "ஆமென்” என்கின்றனர் - ஆசி). அந்த ஒளி அங்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. உங்களால் அதை காணமுடியவில்லையா? 233. கைக் குட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கு உட்கார்ந்திருக்கிற அந்த ஸ்திரீயின் மேல் அது உள்ளது. அவள் தனக்கு அன்பார்ந்தவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது சரியா, அம்மணி (அந்த ஸ்திரீ, “அது உண்மை , சகோ. பிரான்ஹாமே” என் கிறாள் - ஆசி). அந்த அன்பார்ந்தவர். நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா, என்னை மன்னித்துக் கொள், அவருடைய ஊழியக்காரன் என்று? ("நான் நிச்சயம் விசுவாசிக் கிறேன்). அதை நீ விசுவாசிக்கிறாயா? சரி. தவறு என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்த ஸ்திரீயைப் போல், அது தேவனிடத்திலிருந்து வந்ததென்று அதை ஏற்றுக் கொள்வாயா? நீ எனக்கு இருபது அல்லது முப்பது அடி தூரத்தில், அதற்கும் அதிக தூரத்தில் இருக்கிறாய் என்று உனக்குத் தெரியும். நீ என்னைத் தொடவில்லை, ஆனால் ஏதோ ஒன்றை நீ தொட்டு விட்டாய். நீ ஏதோ ஒன்றுடன் தொடர்பு கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருக்கிறாய் - ஏதோ ஒருவருடன். அது என்னவெனில், அது ஒரு ஸ்திரீக்காக, அது உன் மகள். அது உண்மை . அவள் குணமடைவாள் என்று விசுவாசிக்கிறாயா? அவள் போதை மருந்துக்கு அடிமைப்பட்டவள் "அது உண்மை "). அதுயில் நீச்சலடிப்பதை காண்கிறேன். பார்? இப்பொழுது, உன் கையில் நீ வைத்துள்ள கைக்குட்டையை அவள் மேல் வை. சந்தேகிக்காதே. தேவன் அவளை விடுதலையாக்குவார் என்று நான் நம்புகிறேன். என்னோடு சேர்ந்து நீயும் விசுவாசிப்பாயா? ஆமென். ("ஓ! உமக்கு நன்றி, இயேசுவே)). 234. இப்பொழுது, அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் அவளை அறிவார். உன் முழு இருதயத்தோடும் இப்பொழுது விசுவாசிக்கிறாயா? 235. கோடிட்ட ஷர்ட்டை அணிந்து கொண்டு அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன், அவருக்கு குடலிறக்கம் (hernia) உள்ளது. தேவன் உம்மை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீரா? அவர் அதை செய்வார் என்று விசுவாசிக்கிறீரா? இந்த மனிதனை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை. உம்மிடம் ஜெப அட்டை உள்ளதா, ஐயா? (அந்த மனிதன், "இல்லை, என்னிடம் இல்லை” என்கிறார் - ஆசி). உம்மிடம் இல்லையா? உமக்கு தேவை யில்லை. “நீர் விசுவாசித்தால்". 236. இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டு, இந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஸ்திரீக்கு மேல் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இவளை எனக்குத் தெரியாது. ஆனால் அவள் உண்மையில் பயம் கொண்டிருக்கிறாள். இவளை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை, ஆனால் தேவன் அவளை அறிந்திருக்கிறார். அவள் ஏதோ ஒன்றுடன் தொடர்பு கொண்டிருப்பதை இப்பொழுது உணருகிறாள். நீ ஏதோ ஒரு நோக்கத்துக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். காரணம் என்னவெனில், இன்றிரவுக்கு மேல் இங்கு நீ தங்கியிருக்க முடியாது. நீ கூட்டத்தை விட்டுச் செல்ல வேண்டும். நாளை வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று நீ திட்டமிட்டிருக்கிறாய். நீ இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல, நீ கலிபோர்னியாவைச் சேர்ந்தவளும் அல்ல. நீ இங்கிருந்து புறப்பட வேண்டும். நீ ஆகாய மார்க்கமாய் செல்லப் போகின்றாய். நீ ஆகாய மார்க்கமாய் செல்லவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறாய். நீ ஓக்லஹோமாவைச் சேர்ந்தவள். ஆம். அது உண்மை. 237. அது மட்டுமல்ல, நீ மரிக்கும் நிலையில் இருக்கிறாய். நீ ஜெபித்துக் கொள்வதற்காக இங்கு வந்தாய். உன்னிடம் ஜெப அட்டை கிடையாது. ஆனால், இங்கு நீ வருவாயானால் சுகம் பெறுவாய் என்று விசுவாசித்தாய். அது உண்மை . உனக்கு புற்றுநோய் உள்ளது. அந்த புற்று நோய் எலும்பில் உள்ளது. இப்பொழுது நீ சுகமடைவாய் என்று விசுவாசிக்கிறாயா? நீ அவருடன் தொடர்பு கொண்டிருக்கிறாய் என்று விசுவாசிக்கிறாயா, என் சகோதரியே? நீயாரென்று ஒருக்கால் தேவன் என்னிடம் கூறுவார், அது உனக்கு உதவியாயிருக்குமா? அப்படி யானால், அதை நீ விசுவாசிப்பாயானால், அதாவது அது உனக்கு உதவியாயிருக்குமானால், உன் கையையுர்த்து. சரி, திருமதி ஸ்டீல், நீ ஓக்லஹோமாவுக்குத் திரும்பலாம். அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. அவளை நான் கண்டதேயில்லை. 238. இந்த ஸ்திரீக்குப்பின்னால் அங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் சிரை வீக்கத்தினால் அவதியுறுகிறாள். அது மட்டுமல்ல, அவளுக்கு ஒரு குடிகார மகன் இருக்கிறான், அவனுக்காகவும் அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் விசுவாசித்தால், சுகமடைவாள். திருமதி மேசன், இயேசு கிறிஸ்து உனக்கு சுகத்தை அருளுவார் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயா? நீ விசுவாசிக்கிறாயா? 239. சரி, அப்படியானால் உனக்குப் பக்கத்தில் அமர்ந்துள்ள அந்த ஸ்திரீயின் மேல் உன் கையை வை. அவள் இரட்சிக்கப்படாத தன் கணவனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். தேவன் உனக்கு சுகத்தை அருளுவார். நாம் ஜெபிப்போம். 240. அன்புள்ள தேவனே . இவளுக்கு அந்த ஆசிர்வாதத்தை அருளுமாறு ஜெபிக்கிறேன். அந்த ஸ்திரீக்கு அவளுடைய இருதயத் தின் வாஞ்சையை அருளும், கர்த்தாவே. அவளுடைய விசுவாசம் உம்மை மிகவும் நெருங்கி, உம்மைத் தொட்டது. பிதாவே, நீர் உதவி செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென். 241. அதை பெற்றுக் கொண்டாய் என்று உன் முழு இருத யத்தோடும் விசுவாசி. அப்படி செய்வாயா? சரி. தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. 242. உன் கணவர் இரட்சிக்கப்படுவார் என்று விசுவாசிக்கிறாயா, அம்மணி? உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாய் என்பதற்கு அறிகுறியாக உன் கரத்தை உயர்த்து. 243. மிகவும் பருமனான ஒரு ஸ்திரீ எனக்கு முன்னால் இருப் பது போல் தோன்றுகிறது. அதோ அவள் உட்கார்ந்திருக்கிறாள், நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? சரி, உன்னை எனக்குத் தெரியாது. உனக்குள்ள கோளாறு, சுரப்பிகளே. நீ மிஞ்சின எடையுள்ளவளாய் இருக்கிறாய். நீ மருத்துவரிடம் சென்றாய், அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாதென்று அவர் கூறிவிட்டார். ஆனால் அவர் உலகப்பிரகார மான ஒரு மருத்துவர். பார்? நீ... உனக்கு அண்மையில் மிகுந்த துயரம் உண்டானது. உன் கணவனை நீ இழந்து விட்டாய். நீ இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல, நீ உண்மையில் ஆர்கன்ஸாவை சேர்ந்தவள். நீ வேலையும் தேடிக் கொண்டிருக்கிறாய், உனக்கு வேலை கிடைக்கவில்லை. உன்னை வேலைக்கு கூப்பிடமாட்டார்கள் என்று நீ பயந்து கொண்டி ருக்கிறாய். ஆனால் உன் விசுவாசம் இப்பொழுது தேவனைத் தொட்டு விட்டது. என் சகோதரியே, விசுவாசம் கொண்டவளாய் போ. தேவன் உனக்கு வேலையைக் கொடுப்பார். உன் இருதயத்தின் வாஞ்சையை அருளுவார். 244. தேவன் தம்முடைய வார்த்தை உண்மையென்று நிரூபிக்கிறார். அவர் அப்படி செய்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் "ஆமென்' என்கின்றனர் - ஆசி). நீங்கள் மறுபடியும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 245. பிதாவே, தேவனே. நீர் நிரூபித்த அதே தேவனா யிருக்கிறீர். "அந்த சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக் கிறாள்' என்று நீர் சொன்னபோது, அதை நீர் நிரூபிக்க வேண்டிய தாயிருந்தது. இப்பொழுது முடிவு காலம் வருவதற்கு சற்று முன்பு, மனுஷகுமாரன் சோதோமில் அதே விதமாக தம்மை வெளிப்படுத்து வார் என்று நீர் வாக்குரைத்திருக்கிறீர். கர்த்தாவே, அதை நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். இப்பொழுது நீர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் பூமிக்கு வந்து, விசுவாசிக்கும் மக்களாகிய எங்கள் மத்தி யில் இன்றிரவு வந்து அதை நிரூபித்து விட்டீர். அந்த நாளில் நீர் செய்த வண்ணமாகவே உமது வார்த்தையை நீர் நிரூபித்து விட்டீர். கர்த்தாவே, எங்களுக்கு வேறு நிரூபணம் அவசியமில்லை. நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். உமது வருகைக்கு முன்பாக இதுவே கடைசி அடையாளமாயிருக்கும் என பது வேதப்பூர்வமானது என்பதை நாங்கள் உணருகிறோம். எல்லா நிழல்களும் முன்னடையாளங்களும் ஒருபோதும் தவறுவதில்லை. அவை உண்மையாகவே இருக்க வேண்டும். 246. எனவே, பிதாவே, உம்முடைய பிள்ளைகள் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக இப்பொழுது வரும்போது, ஒவ்வொருவரும் சுகமடைய வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இந்த சுகமளிக்கும் ஆராதனையின் முடிவில் வியாதியுள்ள ஒருவராவது எங்கள் மத்தியில் இருக்க வேண்டாம். ஓ அன்புள்ள தேவனே, ஒவ்வொருவரும் சுகமடையத்தக்கதாக, உமது அபிஷேகத்தை உமது ஜனங்களின் மேல் இப்பொழுது கிருபையாய் பொழிந்தருள்வீரா? 247. இங்குள்ள சிலர் இன்னும் உமது பிள்ளைகளாக ஆகாமல் இருந்தால், இந்தக் காரியங்களின் அடிப்படையில் அவர்கள் வார்த்தையைக் கேட்டு இவைகள் நடப்பதைக் கண்டு, உம்முடைய வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் அப்படியே நிரூபிக்கப்படு வதையும், நீர் யாரென்றும், நீர் என்னவாயிருக்கிறீர் என்பதையும் நீர் இங்கிருக்கிறீர் என்பதையும் அறிந்து கொண்டிருப்பார்களானால்! 248. கர்த்தாவே, ஒரு பொய்யை நீர் ஆசிர்வதிப்பீரா? நிச்சயமாக மாட்டீர், கர்த்தாவே. ஆனால், உம்முடைய வார்த்தையை நீர் ஆசிர்வதிப்பீர் என்றும், அது வெறுமையாய் திரும்பாமல் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் என்றும் நீர் வாக்களித் திருக்கிறீர். அதை நீர் எவ்வித சந்தேகமுமின்றி, இன்றிரவு எங்கள் முன்னால் செய்து காட்டினீர். 249. நாம் தலைவணங்கியிருக்கையில், இதற்கு முன்பு விசுவாசிக்காமல் இருந்த மக்கள் இங்கிருக்க நேர்ந்து, உங்கள் கையையுர்த்த விரும்புகிறீர்களா? நீங்கள் தலைவணங்கினவர்களாய், உங்கள் கையையுயர்த்துங்கள். நீங்கள் எழுந்து நின்று, "இப்பொழுது என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்! இப்பொழுதே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். இதுவரை இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளா மலிருந்து இந்நேரத்தில் அவரை ஏற்றுக் கொள்ள விரும்பும் யாராகிலும் அவ்விதம் செய்வீர்களா? நான் உங்களிடம் சொல்ல மாட்டேன்... உங்களுக்கு விருப்பமான சபைக்குச் செல்லுங்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவர் பரலோகத்திலிருந்து, காணக்கூடிய தம்முடைய சரீரத்தில் வரும் வரைக்கும், நீங்கள் ஒருக்கால் இவ்வளவு அருகாமையில் இருக்க வேறொரு வாய்ப்பிராது. நீங்கள் அவரை ஏற்கனவே ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், இப்பொழுது அவரை ஏற்றுக்கொள்வீர்களா? 250. நீங்கள் யாருமே எழுந்து நிற்கவில்லை என்னும் அடிப்படையில்; நீங்கள் அனைவரும் தெளிந்த புத்தியுள்ளவர்களும், புத்திசாலிகளும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணரும் மக்களுமாயிருக்கின்றீர்கள் என்று கருதுகிறேன். அப்படியிருந்தும் நீங்கள் உட்கார்ந்து கொண்டிருப்பீர்களானால், “என்னைக் குறித்து மனுஷர் முன்பாக எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து என் பிதாவுக்கு முன்பாக நானும் வெட்கப்படுவேன்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருக்கால் பின்னால் யாரோ எழுந்து நின்றிருக்கக் கூடும், ஆம். 251. அன்புள்ள தேவனே, பின்னால் நிற்பவர்களை என்னால் காணமுடியவில்லை. அவர் கள் உம்மை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றனர். கர்த்தாவே, இது இதுவரை செய்யப்படவில்லை என்பதை அவர்கள் உணருகின்றனர். இப்பொழுது நீர் அதை உறுதிப்படுத்தி நிரூபிக்கின்றீர். பிதாவே, நான் வேண்டிக் கொள் கிறேன், இந்நேரத்தில் இவர்களுடைய இருதயங்களில் ஏற்பட்ட வினோதமான அசைவு... யாருக்கு தெரியும், இது உள்ளே வரும் கடைசி நபராக இருக்கக் கூடும். இது லாஸ் ஏஞ்சலீசுக்கு முடிவாக இருக்கக் கூடும். இது ராஜ்யத்தில் பிறக்கும் கடைசி ஆத்துமாவாக ஒருக்கால் இருக்கக் கூடும். அந்த நேரம் எப்பொழுது வருமென்று நாங்கள் அறியோம். அது வரும்போது, கதவு அடைபடும், சரீரம் முழுமையடையும். அது விசித்திரமான சரீரமாக, விசித்திரமான மணவாட்டியாக இருக்காது. உலகத்தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிருந்த அத்தனை அங்கத்தினர்களையும் அது கொண்டதாயிருக்கும். அவர்களை மீட்டுக் கொள்ளவே இயேசு வந்தார் -ஆதாம் நடந்து சென்று ஏவாளைக் காப்பாற்றினது போல. தேவனே, இவர்களை இப்பொழுது உமது ராஜ்யத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் உமது கரங்களில் உள்ளனர். கர்த்தாவே, அவர்களுடன் ஈடுபடும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 252. எழுந்து நின்ற உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசிர்வதிப்பாராக. உங்களில் சிலர் எழுந்து நின்றீர்கள் என்பதை நான் அறியவில்லை. சிலர் பின்னால் நின்றனர், சிலர் மாடியின் முன்பாகத்தில் (balcony) நின்றனர். இப்பொழுது நீங்கள் எனக்காக ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள். சபை முடிந்த பிறகு இங்குள்ள ஏதாவதொரு ஊழியக்காரனை சந்தித்து அவருடன் இதைக் குறித்து பேசுங்கள். அவ்விதம் செய்வீர்களா? அவ்விதம் செய்யத் தவறாதீர்கள். நீங்கள் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தினால் ஞானஸ்நானம் பண்ணப் படாதிருந்தால், அதை அடுத்தபடியாக செய்யுங்கள். அதன்பிறகு, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் வரைக்கும் உங்கள் கரங்கள் உயர்த்தப்பட்ட நிலையிலே இருங்கள். 253. இப்பொழுது, இங்கு அநேகர் ஜெப அட்டைகளை வைத்துள்ளனர். அவர்கள் எழுந்து இங்கு நடந்து வர கேட்டுக் கொள்ளப் போகிறோம், அல்லது நான் அங்கு வரவேண்டுமா... (ஒரு மனிதன் “வேண்டாம்” என்கிறார் - ஆசி). என்னால் வர இயலாது (“இந்த பக்கத்திலிருந்து இங்கு வாருங்கள்). இந்த பக்கத்திலிருந்து இங்கே, இந்த வழியாக, இந்தப் பக்கம் வாருங்கள். ஜெப அட்டை களை வைத்துள்ளவர்கள். 254. இங்குள்ள யாராகிலும் போக வேண்டுமானால்... நான் தாமதப்படுத்தி விட்டேன். நான் வருந்துகிறேன். நாளை இரவு சிறிது நேரத்தோடு முடிக்க முயல்கிறேன். சுவரிலுள்ள கடிகாரத்தின்படி, இப்பொழுது பத்து மணி அடித்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்றிரவு நீங்கள் வந்ததற்காக உங்களுக்கு மிக்க நன்றி. பரலோகத்தின் தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நீங்கள் தங்கி ஜெபவரிசையை கவனிக்க விரும்பினால், அவ்விதம் செய்ய நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். இப்பொழுது நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகின்றோம். உங்களை நாங்கள் பிடித்து வைக்க விரும்பவில்லை. உங்களுக்குத் தங்க விருப்பமானாலொழிய. கர்த் தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை அனுப்புகிறோம். தேவனுடைய சமாதானம் உங்களுடன் சென்று உங்களை ஆசிர்வதித்து, இன்றிரவு உங்கள் சரீரங்களுக்கு இளைப்பாறுதலை அளித்து, நாளை இரவு நல்ல ஆரோக்கியத்துடன் நீங்கள் திரும்பி வரும்படி அவர் செய்வாராக! தேவன் உங்களுடன் இப்பொழுது இருப்பாராக. 255. ஜெப அட்டையை வைத்துள்ளோர் இப்பொழுது ஜெபத்துக்காக நில்லுங்கள். நாங்கள் ஜனங்களுக்கு உலகம் முழுவதும் ஜெபிக்கிறோம். ஜெப அட்டையுடன் நின்று கொண்டிருப்பவர்களாகிய நீங்கள் இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம், உங்கள் வாழ்க்கையில் ஏதாகிலும் சந்தேகம் உள்ளதா? என்னை'. மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்கள் அறிக்கை செய்யாத பாவம் ஏதாகிலும் உங்கள் வாழ்க்கையில் உள்ளதா? அப்படியிருக்குமானால், இதை உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் இருதயத்தில் குடிகொண்டுள்ள அறிக்கை செய்யாத பாவத்துடன் நீங்கள் ஜெபவரிசையில் வரவேண்டாம். ஏனெனில் நீங்கள்... இது பிள்ளை களின் அப்பம், பாருங்கள். நீங்கள் கிறிஸ்தவர்களாக இல்லாம லிருந்தால், உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணியுங்கள், அதன் பிறகு ஜெபவரிசையில் வாருங்கள். இது விசுவாசிக்கு, அவ்விதம் செய்வீர்களா? முதலில் அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள், அதன் பிறகு ஜெபித்துக் கொள்ளப்படுவதற் காக மேடைக்கு வாருங்கள். 256. இப்பொழுது நான் ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட விதத்தில் ஜெபிக்கப் போகின்றேன். ஏதோ வழக்கமான முறையாக அவர்களைக் கடந்து செல்லப் போவதில்லை. இப்பொழுது நாம் ஒரு சபையில் இருக்கிறோம். நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தங்கியிருந்து ஜெபிக்கலாம் என்று சகோதரி வ்யாட் அனுமதி அளித்துள்ளார்கள் என்று எண்ணுகிறேன் (ஒருவர், "ஆம், முழு இர வும் கூட, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்" என்கிறார் - ஆசி). நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கு தங்கியிருக்கலாம். அவ்விதம் செய்ய நமக்கு அனுமதி அளித்ததற்கு சகோதரி வ்யாட்டுக்கும் இங்குள்ள பணியாட்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். தேவன் இந்த அம்மாளை ஆசிர்வதிப்பாராக. அவர்களுடைய தீரமான கணவர், எனக்குத் தெரிந்த வரையில், தமது மரணம் வரைக்கும், இந்த மேடையின் மேல் நின்று, சிலுவையின் உண்மையான போர்ச் சேவகனாய், வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்தார். இப்பொழுது நான் அதையே செய்ய முயல்கிறேன், இந்த ஜனங்களை தேவன் ஆசிர் வதிப்பாராக. 257. இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் இங்கு கடந்து வரும்படியாக கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய தேவையை நீங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதில்லை, உங்களுக் குள்ள கோளாறைக் குறித்து நீங்கள் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வாருங்கள், உங்களுக்காக நான் ஜெபிக் கட்டும், விசுவாசியுங்கள். 258. இதைச் செய்ய தேவன் என்னை அனுப்பினார் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் கரங்களை உயர்த் துங்கள். கர்ததருடைய தூதன் கூறினது ஞாபகமுள்ளதா? “ஜனங்கள் மட்டும் உன்னை விசுவாசிக்கும்படி நீ செய்து, நீ உத்தமமாய் ஜெபிப்பாயானால், உன் ஜெபத்துக்கு முன்னால் எதுவுமே நிற்க முடியாது". அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது... 259. இப்பொழுது நான், நமது சகோதரி ரோஸை, "நம்பிடுவாய்" அல்லது "மகத்தான வைத்தியன் இப்பொழுது அருகிலுள்ளார்" என்னும் பாடலை, அல்லது அப்படி ஏதாவதொரு பாடலை வாசிக்கும்படியாக கேட்டுக்கொள்ளப் போகிறேன். 260. நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடன் ஐக்கியத்தில் இருக்கும்படி விரும்புகிறேன். நீங்களும்கூட, ஜெபவரிசையில் இல்லாத நீங்களும், இவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப் பீர்களா? உங்கள் கரங்களையுயர்த்தி, "நான் ஜெபித்துக் கொண்டிருப் பேன். நாங்கள் அனைவரும் ஜெபித்துக் கொண்டிருப்போம்" என்று அவர்களுக்கு வாக்கு கொடுங்கள். 261. நீங்கள் இங்கிருந்து போகவேண்டுமானால், இப்பொழுது மிகவும் அமைதியாக போகும்படியாக கேட்டுக் கொள்கிறேன், நாம் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது அவர் கள் தொல்லை விளைவிக்காதபடிக்கு, 262. சகோதரியே, அது இப்பொழுது முடிந்து விடும் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி, "என் முழு இருதயத்தோடும்" என்கிறாள் - ஆசி). 263. அன்புள்ள தேவனே , இந்த சகோதரியின் மேல் என் கைகளை வைத்து, இவள் சரீரத்திலுள்ள வியாதிக்கு சவால் விடு கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அது அவளை விட்டு நீங்கு வதாக. ஆமென். 'சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. 264. உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசிக்கிறாயா? உன் பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? உனக்குத் தெரிந்த வரையில், உன் சுகத்தை ஏற்றுக் கொள்ள நீ ஆயத்தமா யிருக்கிறாயா? 265. அன்புள்ள தேவனே, உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் கைகளை என் சகோதரியின் மேல் வைத்து, அவளுடைய சரீரத்திலுள்ள வியாதி நீங்கும்படி வேண்டிக் கொள்கிறேன், இயேசுவின் நாமத்தில். ஆமென். 266. உங்கள் பாவங்கள் எல்லாம் அறிக்கை செய்யப்பட்டு நீங்கள் சுகம் பெறுவதற்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, சகோதரனே? (அந்த சகோதரன், "என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்" என்கிறார் - ஆசி). 267. அன்புள்ள தேவனே, நீர் இங்கு பிரசன்னமாயிருக்கிறீர் என்பதை அறிந்தவனாய், என் சகோதரன் மேல் என் கைகளை வைக்கிறேன், கர்த்தாவே, அவரை சுகமாக்கும்படி ஜெபிக்கிறேன், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 268. பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? உனக்கு செவிகேட்காது. (சகோ. பிரான்ஹாம் அந்த சகோதரியின் செவிடு காரணமாக, மெள்ள, தெளிவாக பேசுகிறார் - ஆசி). உனக்கு செவி கேட்கும் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி, "நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நான் செவிடாயிருக்கிறேன்" என்கிறாள் - ஆசி). நீ விசுவாசிக்கிறாய். இந்த ஸ்திரீக்கு காது கேட்கவில்லை. நாம் ஜெபிப்போம்: 269. அன்புள்ள தேவனே, எங்கள் சகோதரியை நீர் சுகப்படுத்தி, செவிட்டுத்தன்மையை அவளை விட்டு எடுத்துப் போடும்படி ஜெபிக்கிறேன். அவள் அடைக்கப்பட்ட உலகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், அங்கு அவளால் செவி கேட்க முடியவில்லை. அவளுக்கு சுகத்தை அருளுமாறு ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். 270. ஜனங்கள் ஒரு நிமிடம் தலைவணங்கியிருக்கும்படி கேட்டுக்கொள்ளப் போகிறேன். அவளுக்கு என்ன நேர்ந்ததென்று காண விரும்புகிறேன். இப்பொழுது, தயவுகூர்ந்து, இயேசு கிறிஸ்து வின் நாமத்தில் யாருமே தலையுயர்த்த வேண்டாம், கண்களைத் திறந்து பார்க்க வேண்டாம். நான் சொல்லும் வரைக்கும் அவ்விதம் செய்யாதீர்கள். 271. உன்னால் கேட்க முடிகிறதா? (அவள், “அது இன்னும் போகவில்லை" என்கிறாள். சகோ. பிரான்ஹாம் தமது கைகளை ஒரு முறை கொட்டுகிறார். அதன் பிறகு மறுபடியும் கொட்டுகிறார். “எனக்கு கேட்கிறது"). இப்பொழுது கேட்கிறதா? ("ஆம்"). உனக்கு கேட்கிறதா? இப்பொழுது அவளுக்கு காது கேட்கிறது (சகோ. பிரான்ஹாம் மீண்டும் ஒருமுறை கைகொட்டுகிறார்). ஏதாவது கேட்கிறதா? 272. இப்பொழுது, உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. விசுவாசிப்பாயா?விசுவாசி, தேவன் உன்னை முழுவதுமாக சுகப்படுத் துவார். அவள் சொன்னாள், நான் ஜெபித்து என் கரங்களை அவள் காதுகளின் மேல் வைத்தால்! அவளால் சிறிது கேட்க முடிகிறதென்று அவள் சொன்னாள். சரி, உனக்கு காதுகள் கேட்கும் என்று விசுவாசித்துக் கொண்டேயிரு. உன்னால் கேட்க முடியும். 273. எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா, சகோதரியே? (அந்த சகோதரி "ஆம்" என்கிறாள் - ஆசி). உன் சுகத் தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறாயா? 274. அன்புள்ள தேவனே, என் சகோதரியின் மேல் என் கைகளை வைக்கிறேன், எங்களில் நன்மையானது ஒன்றும் இல்லை என்று அறிந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்த கிறிஸ்தவர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். எங்கள் கைகளை எங்கள் சகோதரியின் மேல் வைத்து அவளுடைய சுகத்தைக் கோருகிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 275. நீ சுகமடைவாய் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி “நன்றாயிருக்கிறேன்" என்கிறாள் - ஆசி). சரி, இப்பொழுது நீ சுகமடைந்து விட்டாய் "ஆம்"). அப்படித்தான் அதை செய்ய வேண்டும். அது உண்மை . சரி. 276. பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்யப்பட்டுவிட்டதா? (அந்த சகோதரி, "ஆம், ஐயா" என்கிறாள் - ஆசி). உன் சுகத்தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறாயா? "ஆம்"). கரங்களை உன்மேல் வைப்பதன் மூலம், மக்களின் இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் உன்னை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? “நான் விசுவா சிக்கிறேன்")... 277. எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியை நீர் சுகமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். எங்கள் கரங்களை அவள் மேல் வைத்து அவளை சுகமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். ஆமென். 278. எப்படியிருக்கிறாய்?. உனக்குள்ள கோளாறு என்ன வென்று நானறிவேன் என்று உனக்குத் தெரியும். (அந்த சகோதரி "ஆம்" என்கிறாள் - ஆசி). அதை நான் கூறப் போவதில்லை, ஏனெனில் நான் கூறத் தொடங்கினால் அது போய்க் கொண்டே இருக்கும் ("சரி"). ஆனால் உனக்கு விருப்பமானால்... உன் பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? “ஆம், ஐயா"). தேவன் "உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? ("ஆம், ஐயா). உனக்குள்ள முடக்குவாதம். அதை நான் சொல்லிவிட்டேன். ' 279. அன்புள்ள தேவனே, அவளுக்கு உதவி செய்து அவளை குணமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இதை இயேசுவின் நாமத்தில் அருளுவீராக. நீ முடமாக மாட்டாய். போ, உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. 280. தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி “ஆமென்' என்கிறாள் - ஆசி). எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு, நீ சுகம்பெற ஆயத்தமாயிருக்கிறாயா? உன் முதுகு சரியாகி விடும் என்று விசுவாசிக்கிறாயா? 281. பரலோகப் பிதாவே, இவளை சுகமாக்கி குணப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அப்படியே ஆகக்கடவது. ஆமென். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே. போய், விசுவாசமுள்ளவளாயிரு. 282: பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? சுகம் பெற ஆயத்தமாயிருக்கிறாயா? 283. அன்புள்ள தேவனே, அவளுடைய பாவங்கள் அறிக்கை செய்யப்பட்டு விட்டதாக அவள் கூறுகிறாள். இந்த ஸ்திரீயின் மேல் என் கைகளை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவளுக்கு சுகமளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆமென். 284. எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? நீகூறினது சரியாயிருக்க வேண்டும், நீ அதிக வியாதிப்பட்டிருக்கிறாய், அது உனக்குத் தெரியும். உனக்குள்ள கோளாறு என்னவென்று எனக்குத் தெரியுமென்று உனக்குத் தெரியும். தேவன் உன்னை குணமாக்குவார் என்றும், உன் இருதயத்துக்கு சுகமளித்து உனக்கு பரிபூரண சுகமளிப்பார் என்றும் விசுவாசிக்கிறாயா? 285. அன்புள்ள தேவனே, இவளை குணப்படுத்தி, இவளுக்கு பரிபூரண சுகத்தை அளிக்குமாறு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். பிதாவே, இது இவளை விட்டுப் போவதாக. இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவன் உன்னை இப்பொழுது ஆசிர்வதிப்பாராக. சந்தேகப் படாதே. போய், விசுவாசமுள்ளவளாயிரு. . ( 286. எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? சுகம் பெற ஆயத்தமாயிருக்கிறாயா? 287. அன்புள்ள பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியின் மேல் என் கைகளை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் சுகமடைவாளாக. ஆமென். சந்தேகப்படாதே, போய் விசுவாசமுள்ளவளாயிரு. 288. பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? சுகம் பெற ஆயத்தமாயிருக்கிறீர்களா? 289. அன்புள்ள பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரனை நீர் குணப்படுத்தி, அவருக்கு பரிபூரண சுகமளிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இதை அருளும், பிதாவே. இந்த நோக்கத்துக்காக அவர் மேல் என் கைகளை வைக்கிறேன், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். - தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. இதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். 290. இப்பொழுது விசுவாசிக்கிறாயா, சகோதரியே? எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு, சுகம் பெற ஆயத்தமாயிருக்கிறாயா? 291. அன்புள்ள தேவனே, இந்த சகோதரியின் மேல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் என் கைகளை வைக்கிறேன். உம்முடைய மகிமைக்கென்று அவள் சுகமடைவாளாக. ஆமென். 292. அநேக சமயங்களில் இப்படி ஒரு தொடுதல். "விசுவா சிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்" என்று கூறியுள்ளார். கூட்டங்களில் ஜனங்களை வரிசையில் அழைத்து, சிந்தனைகளைப் பகுத்தறிதலைக் காட்டிலும் இவ்விதம் கைகளை வைத்து ஜெபிப்பது ஐம்பது சதவிகிதம் அதிகமாக பலனைத் தருகிறது என்பதை நான் கவனித்து வருகிறேன். ஏனெனில் சிந்தனைகளைப் பகுத்தறியும் விஷயத்தில் ஒரு சிலருக்கு மாத்திரமே அவ்விதம் செய்ய முடிகிறது. ஆனால் இந்த வகையில் அநேகர் சுகம் பெறுகின்றனர். 293. அவிசுவாசமாகிய உன் பாவங்கள் அனைத்தையும் மற்றெல்லாவற்றையும் நீ அறிக்கை செய்து விட்டாயா? நீசுகமடையப் போகிறாய் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி, "ஆம், விடுதலையாகி விட்டேன்" என்கிறாள் - ஆசி). 294. அன்புள்ள தேவனே, எங்கள் சகோதரியை நீர் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவளுடைய கரத்தை நான் பிடித்துக் கொண்டு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அவள் சுகத்தை கோருகிறேன். ஆமென். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே. 295. இப்பொழுது நீ விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி, "ஆம்" என்கிறாள் - ஆசி), பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய் யப்பட்டு விட்டதா? "ஆம்"), 296. அன்புள்ள தேவனே, எங்கள் சகோதரி சுகம் பெறு வதற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவள் மேல் என் கைகளை வைக்கிறேன். ஆமென். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே. இது சிறிய காரியம் போல் தோன்றுகிறது. ஆனால் இதை வாக்குத்தத்தம் பண்ணினவர் தேவனே. 297. பாவங்கள் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? 298. அன்புள்ள தேவனே, இந்த என் சகோதரிக்கு நீர் சுகமளிக்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன். இவள் மேல் என் கைகளை இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் நான் வைக்கையில், இவள் சுகமடைந்து செல்வாளாக. ஆமென். 299. பாவங்கள் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? 300. அன்புள்ள தேவனே, என் கரங்களை இவள் மேல் நான் வைக்கையில், இவளுக்கு சுகமளிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 301. நீங்கள் இயந்திர அமைப்புடன் (mechanics) வருகையில், இது இயந்திர சக்தியை (dynamics) சந்திக்கட்டும், அப்பொழுது அது கிரியை செய்யும். 302. பாவங்கள் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? (அந்த சகோதரி பதிலளிக்கிறாள் - ஆசி). நீ ஆயத்தமாயிருக்கிறாய். 303. அன்புள்ள தேவனே, இவளை குணமாக்கி பரிபூரண சுகத்தை அளிப்பீராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே. 304. எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? (அந்த சகோதரி “எல்லாமே" என்கிறாள் - ஆசி). 305. அன்புள்ள தேவனே, இந்த ஸ்திரீ என் கண்ணை உற்றுப் பார்க்கும் இந்த நேரத்தில், அதை நான் விசுவாசிக்கிறேன். இவளை நீர் சுகமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். 306. சகோதரியே, இவளை நீ கொண்டு வருகிறாய், அல்லவா? இவளைக் கொண்டு வருகிறாய் அல்லவா? சரி. (அந்த சகோதரி, "இவள் குருடராயிருக்கிறாள்" என்கிறாள் - ஆசி). சகோதரியே, தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த குருட்டு சகோதரி, "தேவன் எனக்கு மீண்டும் பார்வையைத் தருவார் என்று விசுவாசிக்கிறேன்" என்கிறாள்). தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. 307. பரலோகப் பிதாவே, நீர் குருடர்களுக்கும் தேவையுள்ள வர்களுக்கும் எப்பொழுதும் இரக்கம் பாராட்டுகிற வராயிருக்கிறீர். இன்றிரவு நீர் என்ன செய்தீர் என்பதை அவர்கள் கண்டனர். எனவே கர்த்தாவே, இந்த பெரிய கடைசி அடையாளம் இப்பொழுது எங்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கையில் நாங்கள் விசுவா சிக்கிறோம். இந்த குருட்டு ஸ்திரீ தன் பார்வையை மீண்டும் பெற ண்ேடுமென்று வேண்டிக் கொள்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். . ' 308. (குருட்டு ஸ்திரீ, “இயேசுவே, உமக்கு நன்றி" என்கிறாள் - ஆசி). இதை இப்பொழுது அறிவிப்பாயாக, இதை அறிவிப்பாயாக. ("நன்றி ) : 309. (குருட்டு சகோதரியைக் கொண்டு வந்தவள் அவளுக்கு ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கிறாள் - ஆசி). ஓ, ஆமாம். தேவன் உனக்கு சுகமளிப்பார் என்று விசுவாசிக்கிறாயா? “அல்லேலூயா) 310. அன்புள்ள பரலோகப் பிதாவே, என் கைகளை எங்கள் சகோதரியின் மேல் வைத்து, அவளை சுகமாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 311. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரிகளே. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியப் படுத்துங்கள். 312, நீ விசுவாசிக்கிறாயா, சகோதரியே? (அந்த சகோதரி, “ஆம், நான் விசுவாசிக்கிறேன்" என்கிறாள் - ஆசி). 313. ஓ, அன்புள்ள. பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரிக் காக நான் ஜெபிக்கிறேன், இவளை இப்பொழுது சுகமாக்குவீர் என்று நம்புகிறேன். இவள் மேல் என் கைகளை வைக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ' இப்பொழுது விசுவாசி. அது சரி. போய், விசுவாசமுள்ள வளாயிரு. 314. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, சகோதரனே? (அந்த சகோதரன் "ஆம்" என்கிறார் - ஆசி). பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்யப்பட்டு விட்டதா? 315. அன்புள்ள தேவனே, எங்கள் சகோதரனை நீர் குணமாக்கி, அவருக்கு பரிபூரண சுகத்தை அளிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.. ஆமென். 316. நீ விசுவாசிக்கிறாயா, சகோதரியே? 317. ஓ தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, தாழ்மையோடும், இந்த நேரத்தின் இனிமையோடும் சாந்த குணத்தோடும் ஜெபிக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த ஸ்திரீக்கு பரிபூரண சுகம் அளிப்பாராக (அந்த சகோதரி, “என் மகனுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அவனை இருபது ஆண்டுகளாக நான் காணவில்லை" என்கிறாள் - ஆசி). அருமை சகோதரியே, தேவன் உன் மகனை உன்னிடம் அனுப்பும்படியாய் ஜெபிக்கிறேன். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. 318. அன்புள்ள தேவனே , இங்குள்ள எங்கள் சகோதரிக்காக ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் தாமே தமது இனிமையில் இப்பொழுது வந்து, எங்கள் சகோதரிக்கு சுகமளிப்பாராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். உன்னை ஆசிர்வதிக்கிறேன், சகோதரியே. 319. அன்புள்ள தேவனே, என் சகோதரன் இங்கு நிற்கையில் அவருக்காக ஜெபித்து, என் கரங்களை அவர் மேல் வைத்து, அவருக்கு சுகமளிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன், இயேசுவின் நாமத்தில். 320. உங்களை ஆசிர்வதிக்கிறேன், என் சகோதரனே. (அந்த சகோதரன், "தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக" என்கிறார் - ஆசி). சரி. . சிறுவன்? 321. அன்புள்ள தேவனே, இந்த சிறுவனின் மேல் கைகளை வைத்து, இவன் சுகமடைவதற்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவனை ஆசிர்வதிக்கிறேன். 322. இப்பொழுது விசுவாசிக்கிறாயா, சகோதரியே? (அந்த சகோதரி "ஆம்" என்கிறாள் - ஆசி). நீயும் ஜெபித்துக் கொள்ளப்பட விரும்புகிறாயா? 323. அன்புள்ள தேவனே, கைகளை இவள் மேல் வைத்து - இவளுக்காக ஜெபிக்கிறேன். இது உமது கட்டளையாயுள்ளது. இதை தான் செய்ய வேண்டுமென்று நீர் கூறியிருக்கிறீர். “விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாதி யஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்”. அது இப்படி ஆகும் என்று நீர் கூறியிருக்கிறீர். அவர் அவ் விதம் கூறியிருக் கிறார் அல்லவா? அது அப்படித்தான் நடக்க வேண்டும், சகோதரியே. 324. அன்புள்ள தேவனே, எங்கள் சகோதரியை நீர் குணமாக்கி, அவளுக்கு பரிபூரண சுகத்தை அளிக்குமாறு ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே. 325. நீ விசுவாசித்து வந்திருக்கிறாயா, சகோதரியே? 326. அன்புள்ள பரலோகப் பிதாவே, நீர் என்ன செய்ய வேண்டுமென்று கூறியிருக்கிறீரோ, அதற்கு கீழ்படிந்து எங்கள் சகோதரியின் மேல் உமது ஆசீர்வாதங்களை கோருகிறேன். "விசுவா சிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாயதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவர்கள்" என்று நீர் உரைத்திருக்கிறீர். 327. இதை கூற இங்கு சிறிது நேரம் நிறுத்துகிறேன், ஜனங்கள் சிறிது நேரம் இளைப்பாறச் செய்ய. ஒரு முறை குற்றம் கண்டுபிடிக்கும் ஒருவர் என்னிடம், அது அப்படி நடக்காது என்றார். ஆனால் பாருங்கள், தேவன், “இந்த அடையாளங்கள் தொடரும்" என்றார். 328. விசாரணை என்னும் என் செய்தியை நீங்கள் கேட்டி ருக்கிறீர்கள் - இயேசுவை விசாரணைக்கு கொண்டு செல்லுதல். பாருங்கள், அவர் நோவாவிடம், “மழை பெய்யும்" என்று கூறினார். நூற்றிருபது ஆண்டு காலமாக மழை பெய்யவில்லை, ஆனால் எப்படி யும் மழை பெய்தது. அவர் ஆபிரகாமிடம், சாராளின் மூலம் அவ னுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கூறினார். அது இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நிறைவேறினது. எப்பொழுது என்று அவர் கூறவில்லை. அவர்களுக்கு குமாரன் பிறப்பான் என்று மட்டுமே சொன்னார். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அது நிறைவேறினது. பாருங்கள், அவர் எப்பொழுது என்று கூறவில்லை. 329. அவர், “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும்; கர்த்தர் அவர்களை எழுப்புவார். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்த மாவார்கள்" என்று கூறியிருக்கிறார். அப்படித்தானே அவர் கூறினார்? (சபையோர் “ஆமென்" என்கின்றனர் - ஆசி). அவர்கள் குதித்தெழுந்து அப்பொழுதே சொஸ்தமாவார்கள் என்று அவர் கூறவில்லை. "அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று தான் கூறினார். பாருங்கள், அது தான் அவர் வாக்குத்தத்தம். அதை தான் நாம் விசுவாசிக் கிறோம். 330. வா, சகோதரியே. அது உண்மை என்று விசுவா சிக்கிறாயா? (அந்த சகோதரி, “ஆம். நான் விசுவாசிக்கிறேன்" என்கிறாள் - ஆசி). அப்படியானால் நீ சுகமடைவதற்கு எதுவுமே தடையாயிருக்க முடியாது. 331. சகோதரி சுகமடைய, அவள் மேல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் கைகளை வைக்கிறேன். ஆமென். 332. நீ விசுவாசிக்கிறாயா, சகோதரியே? (அந்த சகோதரி, "ஆம்" என்கிறாள் - ஆசி). எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப் பட்டு, ஆயத்தமாயிருக்கிறாயா? 333. அன்புள்ள தேவனே, உம்முடைய கட்டளைக்கு கீழ்படிந்து சகோதரியின் மேல் என் கைகளை வைத்து, அவள் சுகம் பெற வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். 334. ஜெபித்துக் கொள்ளப்படுகிற நீங்கள் எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த கூட்டங்கள் முடிவு பெறுவதற்கு முன்பு, என்ன நடந்ததென்று நீங்கள் அறிவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் கூட்டத்திலுள்ளவர்களும் மற்ற வர்களும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக, ஒரு வேளை நாளை, அதற்கு அடுத்த நாள் அல்லது எப்பொழுதாவது. என்ன நடக்கிறதென்று கவனித்து வாருங்கள். 335. எனக்கு வரும் கடிதங்கள், அவர்கள் முயற்சி செய்ய விட்டுக் கொடுப்பது, அவர்களுடைய விசுவாசத்தை பரீட்சிப்பது எவ்வளவு வித்தியாசமானது என்பதை காண்பிக்கின்றன. ஏனெனில் இயேசு, "அவர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று கூறியுள்ளார். அவர் என்ன சொன்னார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் குதித்தெழுந்து, தரையில் மேலும் கீழும் ஓடுவார்கள் என்று அவர் சொல்லவில்லை. அவர்களால் அப்படி செய்ய முடியும். ஆனால் அவர், “அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்றே கூறினார். அப்படித்தான் அவர் சொன்னாரா? அப்படித்தான் அவர் சொன்னார். அப்படியே நானும் விசுவாசிக்கிறேன். அதை உரைத்தவர், அதை நிறைவேறச் செய்ய இப்பொழுது இங்கிருக்கிறார். 336: நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, ஐயா? (அந்த சகோதரன் "ஆமென்" என்கிறார் - ஆசி). 337. அன்புள்ள பரலோகப் பிதாவே, அவருடைய விசுவா சத்தின் அறிக்கையின் பேரில், அவர் சுகமடைவதற்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் கைகளை அவர் மேல் வைக்கிறேன். 338. அன்புள்ள தேவனே, இந்த ஸ்திரீ சுகமடைவதற்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் கைகளை இவள் மேல் வைக்கிறேன். சரி. 339. அன்புள்ள பிதாவே, இந்த ஸ்திரீயின் சுகத்திற்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவள் மேல் என் கைகளை வைக்கிறேன் . “அவள் சொஸ் த மாவாள் " என்று நீர் சொல்லியிருக்கிறீர். – 340. சுகம் பெற ஆயத்தமா, சகோதரியே? 341. அன்புள்ள தேவனே, நீர் 'சுகமளிப்பதற்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் என் கைகளை இவள் மேல் வைக்கிறேன். 342. சரி, அருமை சகோதரியே. சுகம் பெற எல்லாம் ஆயத்தமாயுள்ளதா? உன் விசுவாசம் ஏற்ற நிலைக்கு வந்துள்ளது. நீ சுகமடைவாய் என்று விசுவாசிக்கிறாயா? ' 343. தேவனே, "உலகமெங்கும் சர்வ சிருஷ்டிக்கும்" என்னும் உம்முடைய கட்டளைக்கு கீழ்படிந்து, இவள் சுகம் பெறுவதற்காக . இயேசுவின் நாமத்தில் இவள் மேல் என் கைகளை' வைக்கிறேன். 344. அன்புள்ள தேவனே . என் சகோதரன் சுகம் பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர் மேல் என் கைகளை வைக்கிறேன். - - 345. அன்புள்ள தேவனே, என் சகோதரி சுகம் பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் மேல் என் கைகளை வைக்கிறேன். 346. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி)., உட்பாதையில் போகும்போது உன்னைத் தொந்தரவுபடுத்த நான் விரும்பவில்லை. அதை இப்பொழுது நீ விசுவாசிப்பாயானால், நீ சரியாக விடுவாய். 347: அன்புள்ள தேவனே, என் சகோதரியை சுகப்படுத்த வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். * 348. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி)... இந்த ஜனங்களுக்கு ஜெபிக்க எனக்குதவி செய்ய. - 349, இங்கு ஜெபம் செய்வதற்கென சில கைகுட்டைகள் உள்ளன. இந்த சிறு பார்சல்களுக்கு நீங்கள் என்னுடன் சேர்ந்து தொடர்ந்து ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இத்தகைய சிறிய காரியத்துக்கு ஜெபிப்பது ஜனங்களுக்கு விசித்திரமாக ஒலிக்கக் கூடும் என்று அறிந்திருக்கிறேன். நீங்கள் மட்டும் ஒரு முறை என் அலுவலகத்துக்கு வந்து கவனிப்பீர்களானால்! நாங்கள் இத்தனை ஆண்டுகளாக கிடைக்கப் பெற்ற சாட்சிக் கடிதங்களை பத்திரப்படுத்தி வைத்திருந்தால் - ஜெபத் துணிகளை அனுப்பி அவைகளின் மூலம் சுகமானவர்களின் சாட்சிக் கடிதங்களை - அவைகளை இம்மேடை யின் மேல் குவித்தால் இடம் போதாது. உலகம் பூராவும் லட்சக்கணக் கானோர் சுகமடைந்துள்ளனர், இப்பொழுது அது என்னவென்று அறிந்து கொண்டீர்களா? 350. அங்குள்ள கைகுட்டையை யாராகிலும் வந்து எடுத்துக் கொள்ளவும். உங்கள் கைகுட்டையை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இல்லையா சகோதரனே? 351. ஊனமுள்ள சிறு பிள்ளைகள் இதன் மூலம் சுகம் பெற்றதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள், அது என்னவென்று. ஓரல் ராபர்ட்ஸ் கூறுவது போல அது தொடர்பை உண்டாக்கும் ஒரு பொருள். நாம் ஜெபிக்கிறோம். இதை நமது சொந்த விருப்பப்படி செய்வதில்லை. இதை செய்ய வேதம் நமக்கு கட்டளையிட்டுள்ள படியால் இதை செய்கிறோம். இது உண்மையென்று நமக்குத் தெரியும். 352, இப்பொழுது, அநேகர் கைகுட்டைகளை அபிஷேகம் செய்கின்றனர். நல்லது, அது சரியென்று நாம் நினைக்கிறோம், நிச்சயமாக; ஆனால் நாம் பார்க்கப் போனால்... அவர்கள் கைகுட்டை களை “அபிஷேகித்தார்கள்" என்று வேதம் கூறவில்லை. 353. ஆனால் "அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால் களைக் கொண்டு வந்தனர்". நான் எதைக் குறித்து பேசிக் கொண் டிருக்கிறேன் என்பதைக் காண்கிறீர்களா? அவர்கள் கண்டது என்ன வெனில், பவுலுக்குள்ளிருந்த அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையையே. அவன் தேவனுடைய ஊழியக்காரன் என்றும், தேவன் அவனுக்குள் வாசம் செய்தார் என்றும் அவர்கள் அறிந்திருந்தனர். அவன் தொட்டது அனைத்தும் ஆசிர்வதிக்கப்பட்டது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். இதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்; ஆமென் என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 354. உங்களுக்குத் தெரியுமா, பவுல் அவ்விதம் செய்தது வேதப்பூர்வமானது என்று நான் நினைக்கிறேன். நீங்களும் அவ்விதம் நினைக்கிறீர்கள் அல்லவா? பவுலுக்கு இதை செய்ய எங்கிருந்து கருத்து உண்டானதென்று நினைக்கிறேன் என்று உங்களிடம் நான் கூறவிரும்புகிறீர்களா? (யாரோ ஒருவர் "எலிசாவிடமிருந்து" என்கிறார் - ஆசி). எலிசாவிடமிருந்து. அது உண்மை . பாருங்கள், எலிசா, “இந்த தடியைக் கொண்டு போய் பிள்ளையின் மேல் வை" என்றான். அந்த தீர்க்கதரிசி தன் தடியை அனுப்பினான், ஏனெனில் அவன் தொட்டதெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டன என்பதை அவன் அறிந் திருந்தான். அவனுடைய நிலையை அவன் அறிந்திருந்தான். அவன்.. .அவன் மட்டும் இந்த ஸ்திரீ அதையே விசுவாசிக்கும்படி செய்துவிட முடிந்தால்! 355. இப்பொழுது பாருங்கள், வேதாகமம், "அவர்கள் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பார்கள்" என்று ஒருபோதும் கூறவே யில்லை. “அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்" என்று தான் கூறியுள்ளது. 356. இப்பொழுது சற்று சிந்தித்துப் பாருங்கள், ஜனங்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவில் தேவனுடைய பிரசன்னம் வெளிப் படுவதை கண்டபடியால், அவர்கள் ஜனங்களை அவனுடைய நிழலில் கிடத்தினர், அவர்கள் சுகமடைந்தனர். அது வேதப் பூர்வமானதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? (சபையோர் “ஆமென்" என்கின்றனர் - ஆசி), யோவான் 3:16ஐப் போல் அதுவும் ஒரு வேதவசனமாயுள்ளது. பாருங்கள், அவையனைத்தும் தேவனுடைய வார்த்தையே. இப்பொழுது அந்த மனிதனுடைய நிழல் ஜனங்களை சுகமாக்கவில்லை என்று உங்களுக்குத் தெரியும். 357. ஆனால், பாருங்கள், அந்த தீர்க்கதரிசி மரித்து எத்தனையோ ஆண்டுகள் கழிந்த பின்பும் (சகோ. பிரான்ஹாம் எலிசாவைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) தேவனுடைய வல்லமை அவன் மேல் தங்கியிருந்த காரணத்தால், மரித்துப் போன ஒருவனை அவன் சரீரத்தின் மேல் - எலும்புகளின் மேல் போட்டபோது. அந்த எலும்புகளில் இருந்த தேவனுடைய சமுகம் அவனை உயி ரோடெழுப்பினது. அங்கு சரீரம் இல்லை, எலும்புகள் மட்டும் இருந்தன. 358. இவையனைத்தும் செய்த அதே தேவன் இன்றிரவு இங்குள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? என்னைப் பொறுத்த வரையில், நாம் தான் உலகிலேயே மிக்க மகிழ்ச்சியுள்ள ஜனங்கள் என்பது என் கருத்து. அதை சிந்தித்துப் பாருங்கள். 359. இதை நானே செய்கிறேன் என்னும் அபிப்பிராயத்தை என் கூட்டத்தினருக்கு நான் அளிக்கவில்லை என்று நம்புகிறேன். உங்களுக்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரியும். நான் உங்கள் சகோதரன், பாருங்கள், நான் உங்கள் சகோதரன் மாத்திரமே. 360. ஆனால் நான் அறிந்திருக்கிறேன், இதை நான் அறிந் திருக்கிறேன், அதாவது கர்த்தர் இங்கிருக்கிறார் என்று. நமக்கு ஏதோ ஒன்றை அவர் அளித்திருக்கிறார், அதை நம்மால் விவரிக்க இய லாது, தேவனுடைய வார்த்தையைக் கொண்டு மாத்திரமே அதை அறிந்து கொள்ள முடியும். அது இந்த நேரத்தில் இங்கிருக்க வேண்டுமென்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அது நமக்கு அடையாளம் காட்டுகிறது. இந்த ஜனங்கள் தெரிந்து கொள்ளப்பட்டு, வெளியே அழைக்கப்பட்டு, முன் குறிக்கப்பட்டவர்கள் என்றும் அது நமக்கு அடையாளம் காட்டுகிறது . 361. இப்பொழுது, முன்குறித்தல் என்பது ஒரு பெரிய சொல், ஆனால் அது உண்மையென்று நம்மெல்லாருக்கும் தெரியும். முடிவற்ற தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்பே முன்னறிவினால் எல்லா வற்றையும் முன் குறித்தார் என்றும், ஆட்டுக்குட்டியானவரும் கூட அப்பொழுது அடிக்கப்பட்டார் என்றும், அந்த புத்தகத்தில் இருக்க வேண்டிய ஒவ்வொரு பெயரும் அப்பொழுதே அதில் எழுதப்பட்டது என்றும் நாம் உறுதியாக அறிந்திருக்கிறோம். அது உண்மையென்று எத்தனை பேருக்கு தெரியும்? (சபையோர் "ஆமென்” என்கின்றனர் - ஆசி). 362. அந்த புத்தகத்தில் பேரெழுதப்பட்டவர்களை மீட்டுக் கொள்ளவே இயேசு வந்தார். ஆட்டுக்குட்டியானவர் திரைக்குப் பின்னால் இருந்து வெளியே வந்து, அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு, அது முத்தரிக்கப்பட்டிருந்த முத்திரைகளை உடைத்தார் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஏனெனில் அவர், தாம் மீட் டுக் கொண்டவர்களை பெற்றுக் கொள்ளவே வந்தார். இப்பொழுது அவர் பரிந்து பேசுகிறவராய், அவர் மீட்டுக் கொண்ட வர்களுக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர் அனைவரும் மீட்டுக் கொள்ளப் படுகின்றனர். 363. அன்றொரு இரவு பக்குவமற்ற ஒரு சிறு விஷயத்தை உங்களிடம் கூறினேன்... நீங்கள் எல்லோரும் இந்த கைக்குட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நான் மீண்டும் பிரசங்கிக்க முயற்சி செய்யவில்லை, ஆனால் ஒரு சிறு விஷ யத்தை உங்களிடம் கூறினேன். இது அவபக்தியாக ஒலிக்காது என்று நம்புகிறேன், பாருங்கள். பண்ணையாளன் ஒருவன் கோழியை அடைகாக்க வைத்தான். அவனுக்குப் போதிய முட்டைகள் இல்லாத தனால், ஒரு கழுகு முட்டையை எடுத்து கோழியின் அடியில் வைத் தான். அது ஒரு கழுகுக் குஞ்சைப் பொறித்தது. அந்த கழுகுக் குஞ்சு கோழிக் குஞ்சுகளின் மத்தியில் விசித்திரமாகக் காணப்பட்டது, ஏனெனில் இவ்விரண்டும் காரியங்களை ஒரே விதமாக காணவில்லை. ஆனால் அந்த கழுகு குஞ்சு கண்டதெல்லாம் அந்த கோழிதான். அது ஒரேயொரு சத்தத்தை மாத்திரமே கேட்டிருந்தது. அது அதனுடைய சத்தம் போல் ஒலிக்கவில்லை. கோழியோ அதன் குஞ்சுகளோ சத்தமிடுவது போல அதனால் சத்தமிடமுடியவில்லை. கோழி பண்ணை முற்றத்தில் தின்னும் ஆகாரம் அதற்குப் பிடிக்கவில்லை. அது வித்தியாசமாயிருந்தது. இருப்பினும் வித்தியாசம் என்னவென்பதை அதனால் கண்டு பிடிக்க இயலவில்லை. 364. ஒரு நாள் தாய் கழுகு தான் இட்ட முட்டைகளில் ஒன்று காணவில்லை என்று அறிந்து கொண்டது, அது அதன் குமாரனாக வேண்டிய ஒன்று. எனவே அது அவனைத் தேடிச் சென்று, களஞ்சிய முற்றத்தில் கண்டு பிடித்தது. தாய் கழுகு கூச்சலிட்டது. அப்பொழுது கழுகு குஞ்சு அதன் தாயின் சத்தத்தை அறிந்து கொண்டது - "என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது" என்று இயேசு சொன்னது போல. 365. நான் நினைக்கிறேன், நேற்றிரவு நான் அந்த பாப்டிஸ்டு பிரஸ்பிடேரியன் இன்னும் மற்றவர்களைக் கொண்ட குழுவினரைக் கண்டபோது, அவர்கள் கோழிக்கடியில் பொறிக்கப்பட்டவர்களா யிருக்கக் கூடும். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், சகோதரனே, பாருங்கள். ஆனால் தாய் தன்னுடைய அன்புக் குழந்தைகள் எங்கே யிருந்தனர் என்பதை அறிந்திருந்தாள். அங்க நின்று கொண்டிருக்கும் மனிதர் தாய் கோழியிடமிருந்து பெற்ற ஆகாரத்தைக் குறித்து வாக்குவாதம் எதுவும் செய்யவில்லை, ஆனால் இப்பொழுதோ அவர்கள் கழுகுகள், பாருங்கள், தங்கள் ஆகாரத்துக்காக அவர்கள் பறக் கின்றனர். பாருங்கள்? 366. சபையானது, நான் டூசானிலிந்து வரும் வழியில், இல்லை, பீனிக்ஸிலிருந்து டூசானுக்குப் போகும் வழியில் நான் கண்ட ஒரு காட்சியைப்போல் உள்ளது. நான் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டேன், என்ன நடந்ததென்று நான் கண்ட போது, அது என் இருதயத்தை நொறுக்கினது, எப்படி .. ஆகாயத்தில் பறக்கும் ஒரு பருந்து, கழுகுக்கு சகோதரனாயுள்ள ஒன்று; கழுகு சபைக்கு அடை யாளமுள்ளது. 367. யேகோவா கழுகு, அவர் தமது தீர்க்கதரிசிகளை “கழுகுகள்" என்றழைக்கிறார். யேகோவா தம்மை "கழுகு" என்று அழைத்துக் கொள்கிறார். 368. இந்த பருந்து நீண்ட காலமாக தன் தன்மையை இழந்து விட்டிருந்தது. அது செய்ய வேண்டிய பிரகாரம், ஆகாயத்தில் நெடுக பறந்து தன் இரையைத் தேடவில்லை. அது தொலைபேசி கம்பிகளின் மேல் உட்கார்ந்து கொண்டு ஒரு தோட்டியைப் போல் நடந்து கொள்கிறது. அது கார்களில் சிக்கி செத்த முயல்களை இரையாகத் தின்கிறது. அதுவும் ராஜாளிகளும் (vulures) அங்கு சென்று ஒன்றாக தின் கின்றன. அது நடக்க வேண்டிய பிரகாரம் நடக்காமல், ராஜாளியைப் போல் தாவுகின்றது. அது தன் தன்மையை இழந்து விட்டது. 369. இதை நான் தெய்வீக அன்போடும் மரியாதையோடும் கூற முற்படுகிறேன். சபையானது சகோதரி கழுகு என்னும் தன்மையை இழந்து விட்டது. அது சுற்றிலும் உட்கார்ந்து கொண் டிருக்கிறது. அது வார்த்தையைத் தோண்டிப் பார்த்து இவை உண்மையா என்று அறிந்து கொள்வதற்கு பதிலாக, அறிவாளிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு கத்தை ஞாயிறு பள்ளி புத்தகங்களுக்காக காத்திருக்கிறது - எங்கோ கொல்லப்பட்ட ஏதோ ஒரு செத்த முய லுக்காக. அது ராஜாளியைப் போல் தாவுகிறது. தேவனே, அதி லிருந்து பறந்து செல்ல எங்களுக்கு துணை புரிவீராக. 370. அந்த வாக்குத்தத்தங்கள் உண்மையானவை. யாரோ அதைக் குறித்து சொன்னது அல்ல, ஆனால் தேவன் அவைகளைக் குறித்து என்ன சொன்னார் என்பதே! அவை சத்தியமானவை. நான் கழுகுகளுடன் இணைந்துள்ளதற்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நமது வியாதியஸ்தருக்காக நாம் ஒருமித்து ஜெபிப்போம். 371. அன்புள்ள தேவனே, பவுலின் சரீரத்திலிருந்து உறு மால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து ஜனங்கள் மேல் போட, பிசாசுகள் அவர்களை விட்டு நீங்கிப்போயின, பொல்லாத ஆவிகள் அவர்களை விட்டு புறப்பட்டன என்று வேதம் போதிக்கிறது. பிதாவே, இந்த உறுமால்களின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிற நான், இங்கு வந்துள்ள ஒவ்வொருவருக்கும் பிரதிநிதியாயிருக்கிறேன். நாங்கள் ஒருமித்து கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறோம். இங்குள்ள நாங்கள் அவருடைய மணவாட்டியாயிருக்கிறோம் என்று கிருபை யோடும் அன்போடும் உரிமை கோருகிறோம். நாங்கள் அவருடைய ராஜ்யத்தில் உடன் பங்காளிகளாய் இருக்கிறோம் என்று விசுவாசிக் கிறோம். 372. இந்த ஜனங்களின் விசுவாசத்தை நீர் கனப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இவர்கள் பவுலின் நாட்களில் வாழ்ந்திருந்தால், இதே சுவிசேஷத்தைக் கேட்டு, இதே காரியங் களைக் கண்டிருப்பார்கள். எனவே இவர்கள் அதேவிதமான மக்கள், நீர் அதே தேவனாயிருக்கிறீர். எனவே, அன்புள்ள தேவனே, வேதாகம நாட்களில் நீர் செய்தது போல, இவர்கள் விசுவாசத்தை நீர் கனப் படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இந்த கைகுட்டைகளும், பார்சல்களும் பிரதிநிதிகளாய் அமைந்துள்ள ஜனங்களை கட்டி யிருக்கும் பிசாசின் வல்லமை ஒவ்வொன்றும், ஒவ்வொரு வியாதியும், ஒவ்வொரு துன்பமும், வியாதியின் பொல்லாத வல்லமையும் அவர்களை விட்டு நீங்குவதர்க. 373. ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்கள் கடமையின் பாதையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று கொண்டிருந்த போது, சத்துரு அவர்களை துரத்தி ஒரு மூலையில் ஒதுக்கி விட்டான் என்றும், சிவந்த சமுத்திரம் கடமையின் பாதையில் அவர்கள் அணி வகுத்து செல்வதை தடை செய்தது என்றும் கூறப்பட்டுள்ளது. தேவன் பர லோகத்திலிருந்து அக்கினி ஸ்தம்பத்தின் வழியாய் கீழே நோக்கி பார்த்தார். அப்பொழுது சிவந்த சமுத்திரத்துக்கு பயமுண்டானது. 'அது தன் அலைகளை சுருட்டிக் கொண்டது, ஏனெனில் தேவனுடைய அலைகள் சமுத்திரத்தின் ஆழத்தில் உள்ளது. அது கீழ்படிதலின் பாதையில் நடந்து கொண்டிருந்த அவருடைய பிள்ளைகளுக்கு வழி உண்டாக்கினது. 374. இப்பொழுது, தேவனே, சிவந்த சமுத்திரம் பயந்து போய் தன் அலைகளை, தன். தண்ணீர்களை சுருட்டிக் கொண்டு கீழ்படிந்து அணிவகுத்து பயணம் செல்லும் பிள்ளைகளுக்கு வழி உண்டாக்குமானால்; அன்புள்ள தேவனே, இன்றிரவு, வாக்குத்தத்தம் பண்ணின உமது குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தின் வழியாக கீழே நோக்கி பாரும். இந்த கைகுட்டைகள் ஜனங்களின் வியாதிப் பட்ட சரீரங்களின் மேல் வைக்கப்படும் போது, தேவனுடைய கண்கள் 'நோக்குவதாக! அந்த வியாதி, அந்த பிசாசு பயந்து போய் விலகு வதாக! ஜனங்கள் தாமே நல்ல ஆரோக்கியத்துடனும் பெலத்துட னும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு தொடர்ந்து பிர யாணம் செய்வார்களாக! இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தின் வழியாக பிரயாணமாய் புறப்பட்ட போது, அவர்களில் பலவீனப்பட் டவன் ஒருவனும் இருக்கவில்லை. பிதாவே, இந்த கைக் குட்டைகளை நாங்கள் அனுப்புகையில், இந்த ஜனங்களுக்கும் அதை அருளு வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 375. உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசிர்வதிப்பாராக. உங்கள் கைக் குட்டைகளை இப்பொழுது எடுத்துக் கொள்கையில் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். தேவன் இதை செவி கொடுத்து கேட்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? (சபை யோர் “ஆமென்" என்கின்றனர் - ஆசி). பாருங்கள்? இதை கூற விரும்புகிறேன். சிறிது கூட சந்தேகமே படாதீர்கள். பாருங்கள், இது ஒருக்கால் வினோதமாக தென்படக் கூடும். ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கூட சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் கேட்டுக் கொண்டதை தேவன் கொடுப்பார் என்று இப்பொழுது விசுவாசியுங்கள். 376. தேவன் இங்கிருக்கிறார் என்றும் உங்கள் இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? அது தேவன் என்று நீங்கள் அறிந்து விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்" என்கின்றனர் - ஆசி). அப்படியானால், இது வேறெதாகவும் இருக்க முடியாது என்பதை உங்கள் மனதில் தீர்மானம் செய்யுங்கள். பாருங்கள்? 377. மகத்தான நாள் என்று ஒன்று இருக்குமானால், பல ஆண்டுகளுக்கு பிறகு இது சரித்திரமாகி விடும். வரப் போகும் ஆண்டுகளில் ஜனங்கள் - அப்படி ஒன்று இருக்குமானால் - அவர்கள், "நல்லது, அக்காலத்தில் நான் வாழ்ந்திருந்து இவைகள் செய்யப் படுவதை நான் கண்டிருந்தால், அவ்வளவுதான் எனக்கு அவசியம். நான் உடனே அதை விசுவாசித்திருப்பேன்" என்று சொல்வார்கள். பாருங்கள், நீங்கள் முற்காலத்தில் வாழ்ந்திருந்து அப்பொழுது அவர்கள் இதைச் செய்திருந்தால், நீங்களும் அதே விதமாக விசுவாசித்திருப்பீர்கள். அது இன்னும் அவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களில் இருக்கும் அவருடைய ஜீவன். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.'